Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காபி'ரைட்ஸ் முதல் 'டாஸ்மாக்' ரைட்ஸ் வரை - இது காப்பிரைட்ஸ் கலாட்டா!

ந்தக் காலத்தில் இது போன்ற சிக்கல்களெல்லாம் இல்லை ஆனால் காலப்போக்கில் இது வெட்டுக்குத்தில்தான் போய் முடியும்போல் இருக்கிறது. அதுதான் பாஸ் 'காப்பிரைட்ஸ்' பஞ்சாயத்துகள். அப்படி நம்ம டைரக்டர்களெல்லாம் காப்பிரைட்ஸ் வாங்கணும்னா எதுக்கெல்லாம் வாங்குவாங்க?

காப்பிரைட்ஸ்

கெளதம் மேனன் :

காப்பிரைட்ஸ்

தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காபி ஷாப்களுக்கும் இவர்தான் காப்பிரைட்ஸ் வாங்க வேண்டும். தொடர்ந்து 10 வருஷம் வீட்டில் குடியிருக்கும் அந்த ஆள் அந்த வீட்டையே சொந்தம் கொண்டாடுவது போல் காபி ஷாப்களுக்கு இவர் சொந்தம் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் இவர் படங்களில் காபி ஷாப் இடம்பெறும் சீன் கண்டிப்பாக இருக்கும். காதலைச் சொல்வதற்கோ, காதலியைக் கூட்டிச் சென்று வருவதற்கோ இல்லை ஏதோ ஒரு காரணத்திற்கு காபி ஷாப் கண்டிப்பாக வரும். வேறு எந்தப் படத்தில் காபி ஷாப் வந்தாலும் இவரிடம் முறையாக பெர்மிஷன் வாங்கித்தான் தீர வேண்டும். முடிஞ்சா அப்படியே புல்லட் பைக்கிற்கும் வாங்க முடிகிறதான்னு பாருங்க. சுருக்கமாக 'காப்பி'ரைட் கெளதம் என்று செல்லப் பெயர் வைத்துக்கொள்ளலாம்.

ஷங்கர் :

காப்பிரைட்ஸ்

படத்தில் பிரமாண்டமாக ஏதேனும் சீன்கள் இடம்பெற்றால் அடுத்த நொடியே இவரிடம்தான் வந்தாக வேண்டும். உதாரணத்திற்கு படத்தில் எதாவது ஒரு மூலையில் ஆடி, பென்ஸ் போன்ற காஸ்ட்லி கார்களோ, அல்லது வசதி நிறைந்த வீடுகளோ வந்தால் அதன் ஒட்டுமொத்த காப்பிரைட்ஸும் இவரிடம்தான் இருக்கும். இவரின் படத்தைத் தவிர யாராவது அப்படியொரு சீனை எடுக்க நினைத்தால் இவரிடம் முறையாக பெர்மிஷன் வாங்கித்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் படம் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு மேல் சென்றாலும் அது ராஜமவுலியாகவே இருந்தாலும் இவரிடம் கேட்க வேண்டும். அதையும் மீறி யாராவது பிரமாண்டத்தைப் பயன்படுத்தினால் கோர்ட்டில் கேஸ் கொடுங்க ஷங்கர். இவருக்குச் செல்லமாக 'பிரமாண்ட'ரைட்ஸ் ஷங்கர் என்று வைத்துக்கொள்ளலாம்.

பாலா :

காப்பிரைட்ஸ்

இவர் ரொம்ப மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. கோணிப்பையை மட்டும் இவர் காப்பிரைட் செய்துகொண்டால் போதுமானது. 'அதில் மட்டும் நீங்கள் ஸ்டிரிக்ட்டா இருங்க பாலா சார்'. அது எப்படி இதில் ஸ்டிரிக்ட்டா இருக்கிறது?'னு கேட்கிறீங்களா? எந்த ஒரு படத்திலும் ஒரு காய்கறியை தூக்கிச் செல்வதற்குக்கூட கோணிப்பை பயன்படுத்தக் கூடாது. அதையும் மீறி யூஸ் பண்ணா கேஸ் போட்டுடுவார் பாரத்துக்கங்க!. இனி இவர் செல்லமாக 'கோணி'ரைட்ஸ் பாலா என்று அன்போடு அழைக்கப்படுவார்.

மிஷ்கின் :

காப்பிரைட்ஸ்

இவர் படங்களில் காலிலிருந்து எல்லோரையும் காட்டுவதால் காலுக்கு காப்பிரைட் வாங்கிவிடலாம். இனிமேல் எந்த ஒரு படத்திலும் யாருடைய காலையுமே காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால் 'நீங்களும் கேஸ் போடுங்க மிஷ்கின் ஜி'. அந்த சீன் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம். அதுவும் சும்மா இல்லை. 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஹீரோவை மட்டுமில்லாமல் கூடவே கேமராமேனையும் நடக்கவிட்டு காலை மட்டுமே ஃபுல் ஃபோக்கஸ் செய்து மெனக்கெட்டதால் அந்த ரைட்ஸ் உங்களைத்தான் வந்து சேரும். இனி இவர் செல்லமாக 'கால்'ரைட்ஸ் மிஷ்கின் என்று அன்போடு அழைக்கப்படுவார். 

ஹரி :

காப்பிரைட்ஸ்

இவரைப் பொருத்தவரையில் கொஞ்சம் சிக்கலான விஷயம். மேற்கூறிய டைரக்டர்களுக்காவது காப்பிரைட்ஸ் வாங்குவது ஈசி. ஆனால் இவருக்கு விஷுவல் சம்பந்தமாக காப்பிரைட்ஸ் வாங்க வேண்டும். அது எடிட்டர் கையில்தான் இருக்கிறது. எந்த ஒரு படத்திலும் இவரைக் கேட்காமல் 'ஃபாஸ்ட் ஃபார்வேர்டிங்' சீன்களே இருக்கக் கூடாது. அதை இவர் மட்டும்தான் எடுக்க வேண்டும். இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு இரண்டுமணி நேரத்தில் இவர் படத்தில் மட்டும்தான் போக வேண்டும். குறிப்பாக இவரின் மூன்றுமணி நேரம் படத்திற்கு ஆறுமணி நேரம் ஷூட்  செய்வார் என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்? இனி இவர் செல்லமாக 'ஃபாஸ்ட்'ரைட்ஸ் ஹரி என்று எல்லோராலும் அழைக்கப்படுவார்.

ராஜேஷ் :

காப்பிரைட்ஸ்

இவர் படங்களில் டாஸ்மாக், சரக்குகள் போன்ற விஷயங்கள் வருவதால் அது இரண்டையுமே இவர் பெயரில் காப்பிரைட்ஸ் செய்துவிடலாம். வேறு எந்தப் படங்களிலும் இவரைக் கேட்காமல் டாஸ்மாக் என்ற எழுத்தினைக்கூட காட்டக் கூடாது. மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து இவர் பெயரில் ரைட்ஸ் வாங்கிவிட வேண்டியதுதான். அது மட்டுமில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது கீழே 'மது உடல்நலத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்குத் தீங்கு விளைவிப்பதாகும் என்ற ஸ்க்ரோலிங்கே இவரைக் கேட்டுத்தான் ஓட்ட வேண்டும் சொல்லிட்டேன். இவர் இனி 'டாஸ்'ரைட்ஸ் ராஜேஷ் என்று செல்லமாக அழைக்கப்படுவார். 

- தார்மிக் லீ    

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close