Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டப்ஸ்மாஷை கண்டுபிடிச்சது டணால் தங்கவேலுவா!? கொலக்குத்து ஆராய்ச்சி

இப்போ டெய்லி  நாம  யூஸ் பண்ணிட்டு இருக்கிற பல ஆப்ஸ்கள் சில தமிழ்சினிமா நடிகர்களோட இன்ஸ்பிரேசன்ல இருந்துதான் தயாரிச்சிருப்பாங்களோனு அடிக்கடி டவுட் வருது மக்களே!


 ‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட். உங்களை நான் கைது செய்றேன்’ங்கிறதுல தொடங்கி ‘யூ கேன் கோ. நீங்க போகலாம்’ங்கிரவரைக்கும்  தமிழ்லேயும் இங்கிலீஷ்லேயும் மாறி மாறி ட்ரான்ஸ்லேட் பண்ணி சப் டைட்டில் இல்லாமலே ஒரு ஆங்கிலோ-தமிழ்  படம் பார்க்கிற உணர்வை உள்ளே  கொண்டுவந்த  முதல் ஆளுனா அது மேஜர் சுந்தர்ராஜனாகதான் இருக்கும். அவருக்கு காபிரைட் கொடுக்காம  அவரை காப்பி அடிச்சுத்தான் இந்த லாங்க்வேஜ் ட்ரான்ஸ்லேட்டர் அப்ளிகேசன்ஸ்லாம் கொண்டு வந்துருப்பாங்களோனுலாம் இப்ப டவுட் வருது மக்களே இப்ப டவுட் வருது. ஆம் ஐ ரைட் நான் சரியாகத்தான் சொல்றேனா.

தங்கவேலு

 

* வரலாறுகள், புராணக்கதைகளைலாம் பட்டனைத் தட்டினா சட்டுனு சொல்ற ஆப்ஸ்கள்லாம் இப்போ நிறைய நிறைய வந்துடுச்சு, ஆனா ‘மகாபாரதத்திலே துரியோதனன் ஒருநாள் என்ன பண்ணினார்னா’, ‘இந்த ராமாயணத்துல ராமர் ஒருநாள் என்ன பண்ணலைனா’னு ஃபிங்கர் டிப்ஸ்ல முழுநீளத்துக்குப்  புராணங்களை அள்ளித் தெளிக்கிற சிவகுமார்கிட்டே இருந்துதான் தோன்றியிருக்குமோனுலாம் அவர் பேசுறப்போலாம் தோணுது ஃபிரண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்.

* ‘இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். இதைத்தான் நான் அப்பவே சொன்னேன்’னு நாக்குக்கு நானூறு தரம், மூச்சுக்கு முன்னூறு தரம்னு பல படங்கள்ல அவரோட பேடண்ட் ரைட் வசனத்தைச்  சொல்ற வி.கே ராமசாமியோட டயலாக்கை மைண்ட்ல வெச்சுதான் ரிமைண்டர் அப்ளிகேசன்னு ஒரு விஷயமே உதிச்சுருக்குமோனு இப்போ அடிக்கடி உதிக்குது. ஹ்ம்ம்... இதுக்குத்தான் அவர் அப்பவே சொல்லியிருப்பார் போல.

 * கொஞ்சநாளைக்கு முன்னாடி வந்து  சந்து, பொந்து, இண்டு இடுக்கெல்லாம் புகுந்து பிகாசுவை கரைக்டா தேடிப்பிடிக்கிற அக்கப்போரு அலப்பறைலாம் கொண்ட இந்த ‘போக்கிமான் கோ’  கேம்லாம் துப்பே கிடைக்காத இடத்துலகூட துப்பாக்கியை எடுத்துக்கிட்டுப் போய் தூர்வாரி திருடனைப் பிடிக்கிற தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரோட படத்தைலாம் வெறித்தனமா பார்த்த யாரோதாங்க கண்டுபிடிச்சுருக்கணும்.

* பெட்ரூம்ல பழைய படங்கள்ல எல்லாம் பார்த்தா சரோஜாதேவி கண்ணாடியைப் பார்த்துப் பார்த்து அவங்களாகவே சந்தோசப்பட்டுக்குவாங்க அதனுடைய  பரிணாம வளர்ச்சிதான் விதவிதமா  நாக்குகளை துருத்திக்கிட்டு அதுக்கெல்லாம் ஒரு ஒரு பேர்களும் வச்சிக்கிட்டுப் போட்டோ போடுற இந்த செல்ஃபி புள்ள குரூப்புகளோனு எனக்கு மட்டும் இல்லை. சரோஜாதேவி ரசிகர்களுக்கே டவுட்டு இருக்காம். ஆங்..

* பழைய படங்கள்ல மாறு வேஷம் என்கிற பேர்ல மருவையும் மச்சத்தையும் வெச்சிக்கிட்டு ஒட்டு மீசையையும், ஒரு பக்க கண்ல கறுப்புத்துணியையும் கட்டிக்கிட்டு வந்து கெட்டப் சேஞ்சுல(!) டஃப் கொடுக்கிற ஆர்.எஸ்.மனோகர், அசோகன் குரூப்புகளைலாம் பார்த்துதான் போட்டோ எடிட்டிங் ஆப்லாம் பொறந்திருக்குமோனு நினைக்கத் தோணுமா தோணாதா, நீங்களே சொல்லுங்க ரசிகர்களே..

* கண்ணாலே பேசிப் பேசிக்கொள்ளாதேனு ஒரு பாட்டு. தங்கவேலு ஒளிஞ்சு நின்னுக்கிட்டு அதைப்பாடுவாரு. ஆனால் அதை டி.ஆர் ராமச்சந்திரன் தான் பாடுவதாக வாயசைத்து ஊரை ஏமாத்துவாரு. இதை எதுக்கு இப்பச் சொல்லுறேன்னு கேக்குறீங்களா ஏதோ மத்தியான நேரத்துல கேடிவியில கிளாசிக் மேட்னியில் அந்தப்படத்தைப்பார்த்த யாரோதான் அதைப்பார்த்து இம்ப்ரஸ் ஆகி இந்த டப்ஸ்மாஸ்ங்கிற ஆப்ஸையே கண்டுபிடிச்சிருப்பாங்களோன்னுலாம் தோணுது. ஹ்ம்ம் யாருக்குத்தெரியும் எல்லாம் இந்த  டப்ஸ்மாஷ் வகையறாக்களுக்குத்தான் வெளிச்சம்.

* இவ்வளவுதான் பேசணும் இந்த ஸ்கேலுக்குள்ளதான் டயலாக்ஸ்லாம் இருக்கணும்னு பிளானிங்கோட பேசுற மணிரத்னம் பட நாயகன் நாயகிகளைலாம் மனசுல வச்சுத்தான் இந்த ட்விட்டரையே உருவாக்கிருப்பாங்களோன்னுலாம் நினைப்புகள் வருது பாஸ்னு சொல்லிவேற தெரியணுமா.


- ஜெ.வி.பிரவீன்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close