Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலை விடுங்க; ரஜினி சொன்ன இதெல்லாம் மட்டும் உங்களுக்கு புரிஞ்சதா..? #VikatanExclusive

ரஜினி

இந்தந்த நடிகர்கள்லாம் இப்படித்தான் நடிப்பாங்கன்னு யாரோ சில பேரு கொளுத்திப்போட்டதுதான் இப்போவரை பற்றி எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆனா சில நடிகர்கள் அதுக்கு நேர்மாறாகவும் நடிச்சிருப்பாங்க. அதையெல்லாம் என்னென்னனு எப்போதாவது வாட்ச் பண்ணீங்களா கய்ஸ்..

'நான் சொல்றதுதான் செய்வேன் செய்றதைதான் சொல்வேன்'கிறதுல ஆரம்பிச்சு 'நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி'ங்கிறது வரைக்கும் ரஜினிகாந்த் மட்டும்தான் பன்ச் டயலாக் பேசுவார்னு சொல்றாங்களே 'நான் சொன்னா செஞ்சிடுவேன்'னு 'தூங்கா வனம்' படத்துல கமல் சொன்ன இந்த  பன்ச் எல்லாம் கணக்குல வராதா பாஸ்?

கோட்டுனா அஜீத்தும் கோபிநாத்தும் மட்டும்தான் போட்டுக்கிட்டு வருவாங்கங்கிற ரேஞ்சுலேயே பேசுறீங்களே... பல படத்துல விஜய் இது மாதிரி வந்திருக்காரே... அந்தப் படத்தைலாம் நீங்க எப்போ பார்ப்பீங்க மக்களே?

கத்திச்சண்டைனா இப்பதான் சில பேருக்கு விஷால் படம் ஞாபகம் வரும். ஆனா முன்பெல்லாம் கத்திச்சண்டைனா எம்.ஜி.ஆர்-தான் வருவார். ஆனா 'பக்த துகாரம்' படத்துல  சிவாஜியைப் பாருங்க. அவரும் எப்படி சண்டை போட்டுருக்கார்னு...

விஜய்தாம்ப்பா சுவற்றுக்கு சுவர் தாவுவார். அந்தரத்துல பல்டி அடிப்பார். லாஜிக்கே இல்லாம் ஃபைட் பண்ணுவார்னு லாஜிக்கே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்களே... அஜீத் நடிச்ச 'சிட்டிசன்' படத்து சீனைலாம் என்னன்னு சேர்க்கிறது எதுல சேர்க்கிறது?

கெட்டப் சேஞ்ச் பண்ணி நடிக்கிறதுன்னா அந்தக் கால படத்துல சிவாஜிதான்னே முடிவு பண்ணித்தான் படம் பார்த்துருக்காங்க. ஆனா எம்.ஜி.ஆரும் சில நேரம் இந்த மாதிரி கெட்டப் மாற்றி கோதாவுல குதிச்சுருக்காரு ஃப்ரெண்ட்ஸ்ஸ்ஸ். ப்ளீஸ் வாட்ச் திஸ்.

கமல் பேசுறது மட்டும்தான் புரியவே இல்லைன்னு புரியாமப் பேசிட்டு இருக்கீங்களே... ரஜினியும் இதே மாதிரிலாம் வசனம் பேசிருக்கார். 'முத்து' படத்துல பேசுன எச்சச்ச கச்சச்ச கச்சச்சாங்கிற டயலாக்குக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்களேன் பார்ப்போம்.

- ஜெ.வி.பிரவீன்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close