Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நந்தினி பேய்க்கு டப்பிங் பேசுனது செம காமெடி!'' - அனுராதா

டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதா


ப்பிங் ஆர்டிஸ்டாக 80, 90-ம் ஆண்டுகளின் தமிழ் சினிமா கனவுக் கன்னிகள் பலருக்கும் குரல் கொடுத்துப் புகழ்பெற்றவர், அனுராதா. சன் டிவியின் 'நந்தினி' சீரியலில் பேயாக நடிக்கும் குஷ்புவுக்கு, பழைய உற்சாகத்துடன் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எல்லோரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'நந்தினி பேய்' கேரக்டரைப் பற்றியும், அந்த கேரக்டருக்கு குரல்கொடுக்கும் அனுபவத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 

"டப்பிங் ஆர்டிஸ்டா என்னைப் பலருக்கும் நல்லாவே தெரியும். 80, 90-களில் நான் குரல் கொடுக்காத கதாநாயகிகளே இல்லைன்னு சொல்லலாம். திரையில் மின்னிய பல மொழிடப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதா கனவுக் கன்னிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறேன். இப்போ வரைக்கும் சினிமா, சீரியல்களில் தொடர்ந்து டப்பிங் பேசிகிட்டுதான் இருக்கேன். ஆனால், சில நாள்களாக எனக்குக் கிடைச்சிருக்கும் பாராட்டுகளுக்கு காரணம், நந்தினி பேய்தான். 

குஷ்பு மேடம் கம்பெனி தயாரிச்சு இருக்கும் 'நந்தினி' சீரியலில் நந்தினி பேய் யாருன்னே சொல்லாமல், சஸ்பென்ஸாவே கொண்டுபோய்கிட்டு இருந்தாங்க. ரசிகர்ளைப் போலவே நானும், அந்தப் பேய் யாரா இருக்கும்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். இந்த நிலையிலதான் நந்தினி பேய் கேரக்டருக்கு டப்பிங் பேச, பல ஆர்டிஸ்ட்சுகளின் வாய்ஸ் டெஸ்ட் எடுத்தாங்க. அதில், என்னை கமிட் பண்ணினாங்க. பொதுவாக, ஹீரோவுக்கு இணையான ரோலில் நடிக்கும் ஹீரோயினுக்காக மட்டும்தான் என்னை குரல் கொடுக்க கூப்பிடுவாங்க. அதனால், டப்பிங் பேசப் போகும்போதே 'ஒருவேளை குஷ்பு மேம்தான் பேய் கேரக்டரில் நடிக்கப் போறாங்களோ?'னு நினைச்சுகிட்டேன். 

'பேய்க்குப் பேசறீங்க' என்பதைத் தவிர்த்து, எந்த நடிகைக்கு பேசுறேன்னு யாருமே சொல்லலை. இந்த நிலையிலதான் அந்த பவர்ஃபுல் பேய் கேரக்டருக்கு, குஷ்பு மேடம் நடிச்சாதான் நல்லா இருக்கும்னு முடிவு பண்ணனிருக்காங்க. கதைப்படி, புற்றில் பால் ஊற்றி கும்பிடும்போது, 'நான் உன் உடம்புல வரப்போறேன்'னு நந்தினி பேயின் மைண்ட் வாய்ஸ் பேசிக்கிட்டே இருக்கும். அந்த குரலை எல்லாம் யாருக்கு பேசுகிறோம்னே தெரியாம பேசினேன். விஸூவலான காட்சிகளை இப்போ சில நாட்களாகத்தான் ஒளிபரப்ப ஆரம்பிச்சு இருக்காங்க. ரசிகர்களைப் போலவே நானும் பேயா நடிக்கும் குஷ்பு மேடத்தின் ஆக்டிங்கை டிவியில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நான் யூகிச்சது உண்மையானதில் டபுள் சந்தோஷம். குறிப்பா 'வா அருகில் வா' பேய் படத்துல நடிகை வைஷ்ணவிக்கும், பேயா வரும் பொம்மைக்கும் வாய்ஸ் கொடுத்திருக்கேன். இப்படி பல பேய் படங்களுக்கு குரல் கொடுத்திருந்தாலும், இதுதான் பேய்க்கு டப்பிங் பேசுற என்னோட முதல் சீரியல். யாருக்கு குரல் கொடுக்கிறோம் எனத் தெரியாமலேயே டெரரா குரல் கொடுத்து பேசினாலும், ஆரம்பத்துல செம காமெடி அனுபவமாகத்தான் இருந்துச்சு" என்கிற அனுராதா, குஷ்பு உடனான தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

                                                            டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதா

" குஷ்புவின் முதல் தமிழ் படமான 'வருஷம் 16' படத்தில் ஆரம்பிச்சு அவரின் பல படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கேன். நடுவில் அவங்க சொந்தக் குரலில் பேச ஆரம்பிச்சபோதும், அந்த முயற்சி ஒரு சில படங்களில்தான் செட் ஆச்சு. குறிப்பாக, 'மின்சார கண்ணா' படத்தில் ஏழு ரீல் அவங்க டப்பிங் பேசினாங்க. அது சரியா வரலைன்னு என்னைக் கூப்பிட்டு பேசவெச்சாங்க. குஷ்பு மேடத்துக்கும் எனக்குமான கனெக்டிவிட்டி இப்போ வரைக்கும் தொடருது. அரசியல், தயாரிப்பாளர்னு பிசியா வேற லெவலுக்குப் போய்ட்ட அவங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு டப்பிங் பேசறப்போ நெருங்கிய தோழியை மறுபடியும் சந்திக்கிற மாதிரி ஃபீலிங். இதுவரைக்கும் கொஞ்சம் மென்மையா போயிட்டு இருந்த இந்த சீரியலில், இனி நிறையவே சர்ப்ரைஸ் இருக்கு. நந்தினி பேய்க்கும் ஹீரோயினுக்கும் இடையே நடக்கும் கருத்து மோதல்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கலாம். அந்தக் காட்சிகளுக்கும் உரையாடல்களுக்கும் ரொம்பவே வாய்ஸ் மாடுலேஷன் கொடுத்து டப்பிங் பேசியிருக்கேன். இதுவரைக்கும் இல்லாத வகையில், முதல்முறையா ஒரு பேய் கேரக்டருக்கு டப்பிங் பேசினது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கு. குஷ்புவின் பவர்ஃபுல் நடிப்புக்கு இணையாக என்னோட வாய்ஸும் இருக்கும். இனி நந்தினி பேய் உங்களை அதிகம் மிரட்டப் போகுது'' என்று புன்னகைக்கிறார் அனுராதா. 

- கு.ஆனந்தராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close