Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவேகம் பட டீசரிலும் இந்த விஷயங்கள் எல்லாம் இருக்குமா?

நீண்ட நாள்களாக அஜித் முகத்தைத் திரையில் பார்க்காமல் இருப்பதால் இன்று இரவு வெளியாக இருக்கும் 'விவேகம்' படத்தின் டீசருக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக உள்ளது. இதற்கு முன் இவர் பட டீசர்களில் இருந்த இந்த விஷயங்கள் எல்லாம் வெளியாகப் போகும் டீசரிலும் இருக்குமா?

விவேகம்

துப்பாக்கி :

இவர் பட டீசர்களில் இவருக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் இவர் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கும் இருக்கும்.

அஜித்

'பில்லா' டீசரில் கன்டெயினரில் காட்டு காட்டெனக் காட்டுவது, 'மங்காத்தா' டீசரில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடப்பது, 'என்னை அறிந்தால்' டீசரில் ட்ரான்ஸ்ஃபர் மேஷன் சீன் என எல்லா டீசரிலும் துப்பாக்கி இருந்து கொண்டேதான் இருக்கும். படமே ராணுவம் சார்ந்த கதையாகத் தெரிவதால் இரவு வெளியாக இருக்கும் 'விவேகம்'பட டீசரிலும் துப்பாக்கி கண்டிப்பாக இருக்கும். 

பன்ச் டயலாக் :

அஜித்

எல்லா பட டீசரிலுமே பன்ச் டயலாக் கண்டிப்பாக இருக்கும். அதைத் தொடர்ந்து சமூக வலதளங்களிலும் ஸ்டேட்டஸ் வடிவில் அனல் பறக்கும். இதற்கு முன் வெளிவந்த டீசரின் பன்ச் டயலாக்குள் இதோ!

பில்லா : 'சரித்திரத்த ஒரு நிமிஷம் பாருங்க... நாம வாழனும்னா... யார வேணாலும்... எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம்!'

பில்லா - 2 : 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..!'

ஆரம்பம் : 'மேக் இட் சிம்பிள்'

என்னை அறிந்தால் : 'ஒரு மெல்லிசான கோடு... கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன்... அந்தப் பக்கம் போயிட்டா நான் ரொம்ப கெட்டவன்.'

வேதாளம் : 'தெறிக்க விடலாமா..?'

பி.ஜி.எம் :

பொதுவாக அஜித் படங்கள் என்றாலே படத்தின் கதையைவிட அவர் ஸ்க்ரீனில் வரும்போது பேக்ரவுண்டில் ஒலிக்கும் பி.ஜி.எம்க்கு தான் ரசிகர்கள் அதிகம். இவர் பட டீசரில் அஜித் பேசும் பன்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அதிகம் பேசுவது பி.ஜி.எம்தான். 'அமர்க்களம்' படத்தில் ஆரம்பித்து 'வேதாளம்' வரை இவர் பட தீம் மியூஸிக்குகள் இன்னமும் ரசிகர்களின் மொபைலில் ரிங் டோனாக இருந்து கொண்டிருக்கின்றன. அதே போல் மாஸ் தீம் மியூஸிக் விவேகம் படத்திலும் இருக்குமா? 

பைக், கார் :

அஜித்

அஜித் என்று சொன்னவுடன் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது காரும் பைக்கும்தான். 'பில்லா'வில் கார் ஸ்டன்ட், 'மங்காத்தா' படத்தில் வீலிங், 'என்னை அறிந்தால்' படத்தில் கார் ட்ரிஃப்ட், 'ஆரம்பம்' படத்தில் பைக் சீன் என கார் அல்லது பைக் சம்பந்தப்பட்ட சீன்கள் கண்டிப்பாக இருந்துகொண்டே இருக்கும். ஆனால் வேதாளம் பட டீசரில் டுக்காட்டி பைக்கை படு பயங்கரமாகக் காட்டிவிட்டு கடைசியில் பாடல் காட்சிகளில் காட்டி ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் சிவா. ஆக பைக்கோ காரோ... எதாவது ஒரு ஃப்ரேமிலாவது கண்டிப்பாக இடம்பெறும்.

வெடிகுண்டு :

அஜித்

எல்லா டீசரிலும் எப்படியாவது ஒரு குண்டாவது வெடிக்கும். பில்லா இரண்டு பார்ட் டீசர்களிலும் பின்னாடி குண்டுவெடிக்க... முன்னாடி இவர் நடந்து வருவார். அதே போல் ஆரம்பம் பட டீசரிலும் குண்டுவெடித்தவுடன் ஆர்யாவோடு ஓடுவார். அவைகளைப் போல் இதுவும் ஆக்‌ஷன் படம் என்பதால் எதாவது ஒரு மூலையில் வெடிகுண்டு வெடிக்கத்தான் செய்யும். நீங்களே பாருங்க. 

வில்லன், ஹீரோயின் :

எல்லா பட டீசர்களிலுமே வெளிநாட்டு லொக்கேஷன், கார், பைக், அஜித் மட்டும்தான் இடம்பெறும். படத்தின் ஹீரோயின் இடம்பொற  மாட்டார். அதே போல் டீசரில், படத்தின் மெயின் வில்லன் ஃப்ரேமின் ஒரு ஓரத்தில் கூட வரமாட்டார். முழுக்க முழுக்க அஜித் மட்டுமே வருவார். படத்தின் வில்லனைக் காட்டாமல் இருப்பதில் ஒரு லாஜிக் இருக்கும். ஹீரோயின் என்ன பாஸ் பாவம் பண்ணினாங்க? இந்த டீசரிலாவது இந்த இரண்டு முகங்களும் தென்படுதான்னு பார்ப்போம். 

மேல சொன்ன விஷயங்கள் எல்லாம்மின்று இரவு ரிலீஸாகப் போற டீசரிலும் கண்டிப்பாக இருக்கும் பாருங்க மக்களே!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close