Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி!

'கோச்சடையான்' படம் மே 9ல் ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மே 9ல் 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

'கோச்சடையான்'  படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் நிறுவனத்தைச் சார்ந்த முரளி மனோகருக்கு எதிராக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதுதான் பிரச்னைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் 125 கோடி பட்ஜெட்டில் கோச்சடையான்' படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார் முரளி மனோகர். இதற்கு முன்பு ஈராஸ் சார்பாக சூர்யா நடித்த 'மாற்றான்' படத்தை வாங்கி ரிலீஸ் செய்தார்.

அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டமாம். இதற்கு எந்ய்ஜ விதத்திலும் பொறுப்பேற்காமல், பதிலும் அளிக்காமல் இருந்ததால் விநியோகஸ்தர்கள் விரக்தி அடைந்துவிட்டார்களாம்.

அந்த சமயத்தில், 'கோச்சடையான்' படத்தைத் தருவதாகச் சொல்லி 26 கோடி ரூபாயை முன்கூட்டியே வாங்கியிருக்கிறார் முரளி.

இப்போது அந்த மொத்த பணமான 38 கோடியையும் செட்டில் செய்த பிறகுதான் 'கோச்சடையான்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கிடுக்குப்பிடி போட்டிருக்கிறார்களாம்.முரளி மனோகர் 20 கோடி ரூபாயைத் தருகிறேன் என்று சமாதானம் பேசிவருகிறார்.

இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் 'கோச்சடையான்' படம் இன்னும் பிசினஸ் ஆக வில்லை என்பதை ஒரு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் போட்டு உடைத்துவிட்டார்.

இதனால் குறிப்பிட்டபடி மே 9ல் 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகுமா எனத் தெரியவில்லை. இதனால் ரஜினி அப்செட் ஆகிவிட்டாராம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்