Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை சந்தித்த ஷங்கர்... அடுத்த படத்துக்கான டிஸ்கஷனா?

'லிங்கா' படக்குழு ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது. தற்போது ரஜினி நடிக்கும்  காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் ஹைதராபாத்தில் ரஜினியை சந்தித்துள்ளார். இது திடீரென்று நடந்த சந்திப்பு இல்லை. திட்டமிடப்பட்ட சந்திப்புதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்புக்கான நோக்கம் என்ன என்று விசாரித்துப் பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன.ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.இவர்கள் கூட்டணியில் வெளியான 'சிவாஜி' ,  'எந்திரன்' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ஷங்கரும் ரஜினியும் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான கதை விவாதம் குறித்துதான் ரஜினியை ஷங்கர் சந்தித்தாராம்.

ரஜினியும் ஷங்கரும் இணையும் மூன்றாவது படம் 'எந்திரன் 2' ம் பாகமாக இருக்கலாம். 240 கோடி பட்ஜெட்டில் ஈராஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாம். இன்னும் சில தினங்களில் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close