Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் ?

மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதுதான் இணையத்தில் பரவிவரும் தற்போதைய வைரல். 

முதல் மனைவி இந்து. இரண்டாவது கிறிஸ்துவ மனைவி. இப்போது முஸ்லிம் மனைவியை நிக்கா செய்ய இருக்கிறார். நேற்று நிச்சயதார்த்தம்கூட முடிந்துவிட்டது என்ற தகவலால் டாக் ஆஃப் தி டவுன் ஆகியிருக்கிறார் யுவன்.

யுவன், 2005-ல் லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவைத் திருமணம் செய்தார். இவரிடம் விவாகரத்து பெற்று, பின்னர் ஷில்பா மோகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் நிலைக்காததால், மனம் வெறுத்த யுவன், பின்பு முஸ்லிமாக மதம் மாறியது அனைவருக்கும் தெரியும்.



‘‘யுவனைப் பற்றிய இந்தக் களேபரங்கள் அனைத்தும் உண்மைதானா?’’ என்று யுவனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராமிடம் போனில் கேட்டோம்.

‘‘நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என் ‘தரமணி’ படத்துக்கு அவர்தான் மியூசிக் டைரக்டர். என்னுடைய பாடல்களே இன்னும் பாக்கி இருக்கும் நிலையில், நான் யுவனைப் பார்த்தே ஒரு மாதமாகிறது. அப்படி எதுவும் இருந்தால், என்னை நிச்சயம் அழைத்திருப்பார். தகவல் வந்தால் சொல்கிறேன்!’’ என்று சொல்லி போனை கட் செய்தார்.

இதுவரையிலும், யுவன் மூன்றாவது திருமணம் செய்துகொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close