Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் கல்லூரி மாணவனாக விஜய்?

சிம்புதேவனின் 'புலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய். ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடித்து வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே விநியோக ரீதியிலும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

’புலி’ கோடை கால விடுமுறை கொண்டாட்டமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என முன்பே அறிவிக்கப்பட்டது போல் ’புலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவிற்கு பிறகு இந்த படம் துவங்க உள்ளது.

 

’நண்பன்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த விஜய் இந்த படத்திலும் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.படத்தின் ஹீரோயின் , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. அட்லீ என்பதால் இந்த படத்தில் நயன்தாராவின் பெயரும் அடிபடுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close