Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி!

ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது.

சிசிஎல்5  நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ்  அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில்  நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார்.


அப்போது அந்த ரசிகர் திடீரென சார்மியின் இடுப்பை கிள்ளியதால் அதிர்ச்சி அடைந்தோடு, ஆவேச சத்தத்துடன் ரசிகர்களை தள்ளிவிட்டுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.

இது குறித்து சார்மி கூறுகையில், "அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன். அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close