Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌதம் மேனனின் அடுத்த படம் அச்சம் என்பது மடமையடா?

கௌதம் மேனன் படங்கள் என்றாலே சுத்தமான தமிழில் தான் பெயர் வைப்பார் என்பது யாவரும் அறிந்ததே. 'மின்னலே’ முதல் கடைசியாக வெளியான ‘என்னை அறிந்தால் படம் வரை தமிழ் பெயர் தான். 

இதில் சில தலைப்புகள் எம்.ஜி.ஆரின் பாடலின் முதல் வரிகள் அதிகம் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. ‘பச்சைக் கிளி முத்துச்சரம்’, வேட்டையாடு விளையாடு’ இப்போது ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ இதன் ஒரு இன்ஸ்பிரேஷானாக ‘என்னை அறிந்தால்’ பெயர்கள் வைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயர் வைத்துள்ளதாகவும், மேலும் படத்தின் ஹீரோ சிம்பு எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் ‘சட்டென்று மாறுது வானிலை’ இப்போது இந்த தலைப்பே எம்.ஜி.ஆர் பாடல் முதல் வரிக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. 

’என்னை அறிந்தால்’ வெளியான நிலையில் வரும் பத்தாம் தேதி மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை ஆரம்பிக்க உள்ளார் கௌதம். பல்லவி சுபாஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close