Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஃப் த ரெக்கார்டு!

 வெற்றி நடிகருக்கும் பாடகி நடிகைக்கும் சேர்ந்து லவ்வாமே?’ என பத்திரிகைகளில் செய்தி பார்த்து ரொம்பவும் கடுப்பானது ‘வெற்றி’ தானாம். காரணம் பாடகி நடிகை ரொம்பவும் பந்தா காட்டினாராம். நடிகரைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம். நிலைமை இப்படியிருக்க செய்திகளைப் படித்ததில் எரிச்சலின் உச்சத்தில் நடிகர்!

 ராணி இயக்குநரின் அடுத்த படத்தில் பன்ச் நடிகருடன் புயல் காமெடி நடிகரை நடிக்க வைக்கும் முயற்சி தோல்வி. ‘பன்ச் நடிகரின் பல படங்களின் வெற்றிக்கு நான்தான் காரணம், எனவே அவரே போன் செய்து என்னைக் கூப்பிடட்டும்’ என்று புயல் அமைதி காக்க, கடுப்பான பன்ச் ஹீரோ, வேறொருவரை கமிட் செய்யச் சொல்லிவிட்டாராம்!

வாரிசு படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்தும், வரிவிலக்கு பெற மனு செய்வதில் குழப்பமாக இருக்கிறாராம் கப்பல் கட்சித் தலைவர். அரசியல் சூழ்ச்சிகள் இந்த ஏரியாவில் அதிகம் என வரிவிலக்கு அதிகாரிகள் சொல்லிவிட, வரிவிலக்கே வேணாம்பா என முடிவெடுத்துவிட்டாராம்!

 ரொம்ப நாட்களாகவே பாங்கு குடிக்கவேண்டும் என்ற கில்லாடி நடிகையின் ஆர்வத்தை ஹோலி அன்று நிறைவேற்றி வைத்தார்களாம் தோழிகள். முதலில் ஆசைக்குக் குடித்தவர் பிறகு, போதை தலைக்கேறி விடிய விடிய தோழிகளைப் படுத்தி எடுத்துவிட்டாராம்!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close