Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஃப் த ரெக்கார்டு

15 வருஷத்துக்கு முன்னாடி நடிச்ச படம் ஃபிளாப் ஆனதால் அமெரிக்காவில் செட்டிலாகி, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்த நடிகைக்கு சமீபத்தில் சில பட வாய்ப்புகள் வந்தனவாம். ஆனால் நடிகையோ சம்பளம்கூட முக்கிய மில்லை, பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டாராம்!

யர நாயகி தொடர்ச்சியாக பிரமாண்ட படங்களில் நடித்து வந்ததால், தன் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார். ஆனால் அவருக்கு ஏற்கெனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களாம். தற்போது அனைத்துப் படங்களும் முடிந்துவிட்டதால், துபாய் போய் தன் வருங்கால கணவருடன் ஜாலியாக ட்ரிப் அடித்திருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் டும் டும் டும் என்கிறார்கள்!

ற்கெனவே தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டுப் படிக்கப்போன ‘ரேஸ்’ நடிகரின் மச்சினிச்சி திரும்பவும் நடிக்க வந்துள்ளார். மாமா மனசு வைத்தால், தமிழில் முன்னணி ஹீரோயினாகலாம் என்ற நினைப்பில் அவரிடம் சிபாரிசு செய்யச் சொல்ல, திறமையால்தான் முன்னுக்கு வர வேண்டும் என்று ஒரே முடிவாக மறுத்துவிட்டாராம் ரேஸ்!

மூன்று முறை சந்தித்துக் கதை சொல்லியும் ‘சென்னை’ இயக்குநரை டிக் அடித்துவிட்டாரே என்று உச்ச நடிகர் மீது வருத்தத்தில் உள்ளாராம் இரட்டை இனிஷியல் இயக்குநர். இதனை எப்படியாவது சரிக்கட்டும் நோக்கத்தில் ஒரே படத்தில் கோட் நடிகரையும், பன்ச்சையும் இணைக்க முயற்சி எடுக்கவுள்ளாராம்!

நாங்கள் எப்போதுமே அண்ணன் தம்பிகள்தான் என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் ஒல்லி மற்றும் காமெடி ஹீரோவின் மோதல் முற்றியுள்ளதாம். தனது படத்துக்காக காமெடி ஹீரோவின் போலீஸ் படத்தை தேர்வு நேரத்தில் ரிலீஸ் செய்யவைத்தார் ஒல்லி ஹீரோ. படம் ஓடவில்லை. இந்த நிலையில் ஒல்லிப்பிச்சான் ஹீரோவின் படத்துடன் நேரடியாகவே தன் சூப்பர் படத்தை மோதவிடுகிறாராம் காமெடி ஹீரோ. ஜெயிக்கப்போவது அண்ணனா, தம்பியா என்பது ரிலீஸ் தேதியான ஜூன் 17 அன்று தெரிந்துவிடும்!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close