Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஃப் த ரெக்கார்டு!

ன்னதான் டாப் ஹீரோக்கள் படம்னாலும் நடிச்ச ரெண்டு படத்துலயும் தன்னோட கேரக்டர கேட்காம எப்படிப்பா நடிச்சாங்க. இதுல ஒரு நாயகிக்கு ரொம்பப் பெரிய மைனஸா படத்துல பாதிக்கு மேல அவங்களுக்கு வேற வாய்ஸ். இப்படி மூத்த வாரிசு நடிகை குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பேசத் துவங்கிவிட்டன. இதில் தமிழே தெரியாத நடிகைகளைக் கூட நடிகையின் அப்பா டப்பிங் பேச வைக்கிறார் என்பதுதான் சிறப்பு. உங்களுக்குத் தெரியுது அவங்களுக்குத் தெரியலையே

ண்மணி நடிகை சமீபகாலமாக அந்த கன்னட வில்லன் நடிகரோடு சுற்றிவருவதாக சொல்லப்படுகிறது. நடிகை குறித்து வரும் முதல் கிசுகிசு என்பதால் திரையுலகின் மொத்த கண்களும் அம்மணி மேல் விழுந்துள்ளது. இருவரும் சேர்ந்து நடித்து வரும் நிலையில் காதல் எனவும் கூறப்படுகிறது. கேட்டா நாங்க ஃப்ரண்ட்ஸ்னு சொல்லுவாய்ங்களே!

 

ங்கத்தோடப் பேர மாத்துவீங்களா இல்லையா என்றால் எதுக்குங்க வம்பு ரெண்டு பெருந்தலைகள் இதுல கருத்து சொல்லியிருக்காங்க எதாவது ஒண்ண நிறைவேத்தினாலும் இன்னொருத்தர் சார்ந்தவங்க கண்டிப்பா பஞ்சாயத்தோ சர்ச்சையோ கிளப்பிடுவாங்க. அதனால இப்போ இருக்கப் பேரு அப்படியே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டோம் என்கிறார்கள் சங்க வாசிகள். இந்த சமயோஜித புத்தி இருக்கற வரைக்கும் உங்கள யாரும் அசைக்க முடியாது! 

வெளிநாட்டுக்கு போன உச்ச நடிகர் பட டீம் செம கடுப்புல இருக்காம். உச்சம் எங்கப் போனாலும் ஆளுக்கு முதல்ல கூட்டத்தக் கூட்டிவிட்டுதான் சம்மந்தப்பட்ட இடத்துக்கே போறாராம். இதனால படப்பிடிப்பு சகட்டு மேனிக்கு பாதிக்கப்படுவதால் இயக்குநர் கொஞ்சம் அப்செட்டாம். அதனால் மறைமுகமாகவே ட்விட்டரில் ஸ்டாப் ஷேரிங் என போட்டுவிட்டுள்ளார். யானையக் கட்டிட்டீங்க தீணிப் போட அழுதா எப்படி? 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close