Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யா நயன் கல்யாண ரகசியம்!

ராஜா ராணி... ஓர் அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது!

ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீக்கு வயது 26. 'எந்திரன்’, 'நண்பன்’ என இரண்டே படங்கள் வேலை பார்த்த அனுபவத்தோடு, தான் இயக்கும் முதல் படத்துக்கு 'ஆர்யா - நயன்தாரா’ காம்பினேஷன் பிடித்த கில்லி. இருவருக்கும் இடையில் 'சம்திங்... சம்திங்...’ என்று கிசுகிசு உச்சத்தில் இருந்தபோது, 'ஆர்யா - நயன்தாராவுக்குக் கல்யாணம்’ என்று, தன் படத்துக்குப் பரபர பப்ளிசிட்டி அடித்த உற்சாகமும் உத்வேகமுமான அட்லீயுடன் பேசியதிலிருந்து...  

''பப்ளிசிட்டிதான். ஆனாலும், ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு கிளப்பிவிட்டது டூ மச்தானே?''  

''காலேஜ் சமயத்துல நாங்க ஒரு குறும்படத்தை இயக்குவதைக் காட்டிலும் அதை ரசிகர்களிடம் ரீச் பண்ணவைக்கத்தான் ரொம்ப மெனக்கெடுவோம். குறும்படத்துக்கே அப்படிப் பண்ண பழக்கம்... அதுதான் 'ராஜா ராணி’க்கு அந்த லெவல் போகவெச்சது. ஆனா, தப்பா எதுவும் பண்ணிடலை. யார் மனசையும் வருத்தப்படவைக்கலை. இப்படி ஒரு ஐடியா க்ளிக் ஆனதுமே, நயன்தாராவுக்குத்தான் முதல் போன். தயங்கிக்கிட்டே விஷயத்தைச் சொன்னேன்... 'அதானே கதை. அப்படியே பண்ணிடுங்க. எனக்கு டபிள் ஓ.கே!’னு சொல்லிட்டாங்க. ஆர்யாகிட்ட சொன்னப்ப, ரொம்பச் சின்னதா யோசிச்சார். 'அதானே பிரதர் படத்தோட தீம். அப்படியே இருக்கட்டும்’னு சொல்லிட்டார். படத்தைப் பார்த்த பிறகு, அது ரொம்ப நேர்மையான புரமோஷன்னு உங்களுக்குத் தெரியும்!''  

'' 'என் சிஷ்யன் அட்லீனு ஒருத்தன் பாய்ஞ்சு வர்றான் பாருங்க’னு 'விகடன் மேடை’யில் ஷங்கர் உங்களைப் பத்தி பில்ட் அப் கொடுத்திருக்கார். ஆனா, நீங்க 'ராஜா ராணி’னு ஒரு காதல் கதையோடதான் வர்றீங்க?''

''ராஜா ராணி கதை கேட்டு வளர்ந்தவங்க நம்மாளுங்க. நிலாவுல ஃப்ளாட் வாங்கிக் குடியேறினாலும், அங்கேயும் கால் நீட்டிப் படுத்துட்டு ராஜா ராணி கதைதான் கேட்போம். அப்படிப்பட்டவங்களை இந்த 'ராஜா ராணி’ ரொம்ப ஈஸியாக் கவர்ந்திடுவாங்க. ஒரு சர்ச்ல ஆர்யா - நயன்தாராவுக்குக் கல்யாணம் நடக்குது. அப்ப அவங்க மனசுல ஏதோ சஞ்சலம் இருக்கு. அவங்களோட கல்யாண வாழ்க்கையில் நஸ்ரியாவும் ஜெய்யும் வர்றாங்க. இதுக்கு மேல கதை சஸ்பென்ஸ். இதுதான் படம். காதலிச்சவங்க, காதலிக்காதவங்க, காதலிக்கிற ஐடியாவில் இருக்கிறவங்க எல்லாரையும் இந்தப் படம் ஏதோ ஒரு பதினஞ்சு நிமிஷம் டச் பண்ணும்.  

வாராவாரம் புதுப் புது படம் பார்த்தாலும் ரசிகர்கள் மனசுல டெலிட் ஆகாம இடம் பிடிச்ச படங்கள் என்னன்னு யோசிச்சேன். 'உள்ளத்தை அள்ளித்தா’ மாதிரியான ஃபேமிலி என்டர்டெயினர்தான் சரின்னு தோணுச்சு. அதனால், இந்த சப்ஜெக்ட்டை எடுத்துக்கிட்டேன். கல்யாணம்கிறது ஒரு கசப்பான விஷயம்னு இப்போதைய இளைஞர்கள் நினைக்கிறாங்க. ஆனா, அது ரொம்ப சுவாரஸ்யமான பயணம்னு  புரிய வைக்கிற மாதிரி இருக்கும் படம்!''

''கல்யாணத்துக்குப் பிறகு ஜோடிகளை மாத்திக்கிற கதைனு நடுவுல பரபரப்பு கிளம்புச்சே?''  

''அதெல்லாம் பொய். தமிழ்க் கலாசாரத்தை மீறவோ, கெடுக்கவோ செய்யாது என் படம். நான், என் அம்மா, அக்கா, தங்கச்சிகூடச் சேர்ந்து உக்காந்து படம் பார்க்கத்தான் ஆசைப்படுவேன். இந்தப் படமும் அப்படிப்பட்ட படமாகத்தான் இருக்கும்!''

''சரி... உண்மை சொல்லுங்க. சீன் கெமிஸ்ட்ரி தாண்டி ஆர்யா - நயன்தாராவுக்கு நடுவில் எதுவும் இருக்கா?''

''சீன் கெமிஸ்ட்ரியையும் தாண்டி அவங்களுக்குள்ள ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு தூரம் நம்புறாங்க. மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவாங்க... உதவி பண்ணிப்பாங்க. ஆர்யாவை 'ஜானி’னு நயன்தாரா கூப்பிடுவாங்க. 'நயன்’னு இவர் கூப்பிடுவார். அவங்க ரெண்டு பேரும் காதலர்கள் இல்லை. ஆனா, காதலர்களிடம்கூட இல்லாத ஏதோ ஒண்ணு அவங்ககிட்ட இருக்கு!''

''ஷங்கர் கூட ரெண்டே படம்... தனியா புதுக் கடை போட அது போதுமா?''

'' 'எந்திரன்’லதான் அவர்கிட்ட சேர்ந்தேன். அவர்கிட்ட முதல் நாள் இன்டர்வியூ போனதுகூட இன்னும் ஞாபகம் இருக்கு. அவர் சினிமாவில் எனக்குக் கத்துக் கொடுத்ததுக்குக் கணக்கு வழக்கே இல்லை. ஒரு 'எந்திரன்’ல வேலை பார்த்தது ஷங்கர் சாரோட அத்தனை படங்களிலும் வேலை பார்த்ததுக்குச் சமம். ரஜினி சாரைப் பக்கத்தில் இருந்து பார்த்தாலே, நிறையக் கத்துக்கலாம். சினிமாவில் நான் வேலை பார்க்க ஆரம்பிச்ச முதல் படத்திலேயே ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், ரசூல் பூக்குட்டினு எவ்வளவு பெரிய லெஜெண்ட்ஸ். 'எந்திரன்’ ரஜினி டபிள் ஆக்ட்ல ஃப்ரேம்ல வராத ரஜினியா நான்தான் நிறைய சீன்ஸ் நடிச்சேன். ரஜினி சாருக்கு எதிரே நின்னுட்டு, அவர் பேசுற மாதிரி டயலாக் பேசி நடிச்சது எல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. அந்த அனுபவங்களை வெச்சுட்டே இன்னும் பத்துப் படம் பண்ணலாம்.

எனக்கு ஷங்கர் சார் அப்பா மாதிரின்னே சொல்லலாம். தாய் உள்ளத்தோட முதல் பட வாய்ப்பு கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் சார். ஒரே ஒரு தடவை கதை கேட்டவர், வேற எந்தக் கேள்வியும் கேக்காம, கையில் அட்வான்ஸைக் கொடுத்துட்டார். இத்தனை நல்லவங்க சுத்தி இருக்கும்போது, எனக்கு வேற என்னங்க கவலை?!''

க.ராஜீவ் காந்தி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close