Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆக்ஷ்ன் ஹீரோ இமேஜ் எனக்கு கிடைச்ச கிரெடிட்!' - விஷால்

"ஒரு படம் முடிச்சி அடுத்த படம் தொடங்குறதுதான் என் பழக்கம். அந்த மைண்ட் செட்லயே  இருக்கப் பழகிட்டேன். அப்போதான் ப்ரெஷ்ஷா இன்னொரு கதைக்குள்ள போக முடியுது. இப்போ 'மதகஜராஜா', 'பட்டத்து யானை' ரிலீஸுக்கு ரெடி. ‘பாண்டிய நாடு’ ஷூட்டிங் போகுது. இந்த மூணு படங்களையும் நின்னு நிதானிச்சுப் பண்ணியிருக்கேன். இந்தப் படங்கள் எனக்காகப் பேசும்" - உற்சாகத்தில் இருக்கிறார் விஷால்.
 
‘‘ ‘சமர்’ படத்தோட ரெஸ்பான்ஸ் தான் ‘பட்டத்து யானை’ மாதிரி ஜாலியான படத்துல நடிக்கக் காரணமா?’’  

‘‘ ‘சமர்’ முழுக்க ரிஜெக்ட் ஆகியிருந்தா அந்தப் பாதையில போகாம, ஒரு சேஃப் பாதையில போயிருப்பேன். நெறைய பாராட்டுகள் கிடைச்சதால அந்த மாதிரி முயற்சிகள்ல இனியும் நடிப்பேன். எல்லா தடைகளையும்  தாண்டி ‘சமர்’ ரிலீஸ் ஆனபோது கிடைச்ச பாராட்டே எனக்குக் கிடைச்ச வெற்றிதான். சின்ன மாற்றத்துக்காக 'பட்டத்து யானை'யில சமையல்காரன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.  இதுக்கு ஹோம்வொர்க், ரெஃபரன்ஸ்னு எதுவும் பண்ணலை. நிஜ வாழ்க்கையில இருக்குற பாடி லேங்வேஜ் தான். இயல்பான, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம எல்லார் கூடவும் ரிலேட் பண்ற கேரக்டர். சைலன்ட் கில்லர் படமா இருந்தாலும் எல்லாரையும் என்டர்டெய்ன் பண்ணும். பயங்கர ஆக்ஷன் படம் இல்லை. ஆனா, எங்கே அடிக்கணுமோ அங்கே மட்டும் கரெக்டா அடிச்சிருக்கேன்.’’

‘‘இப்பவாவது யாரைக் காதலிக்குறீங்கன்னு சொல்லலாமே?’’

‘‘நான் முன்னாடி சினிமாவுல இல்லாத ஒருத்தரைக் காதலிச்சேன். அதை நெருங்கின நண்பர்கிட்ட சொன்னதும் அவர் மூலம் எல்லாருக்கும் தெரிஞ்சது.  பப்ளிசிட்டிக்காக நான் அப்படி பண்றேன்னு சிலர் தப்பா கமெண்ட் அடிச்சாங்க. இன்னும் சிலர் விஷால் சினிமாவுல இருக்குற ப்ரியாமணி, த்ரிஷா, நயன்தாராவைத்தான் லவ் பண்றார்னு பெரிய பட்டியல் போட்டாங்க. அவங்க மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்ங்கிறதால தப்பா எடுத்துக்கலை. இதுமாதிரி வர்ற வதந்திகளை நான் மனசுல ஏத்திக்கமாட்டேன். சினிமா வாழ்க்கையில இது சகஜம்தான். நான் இப்போ யாரையும் காதலிக்கலை.’’

‘‘எப்பவும் சம்திங் பெர்சனலாவே இருக்கீங்களே?’’

‘‘எனக்குள்ள ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இருக்கு. அதை நானே உணர்ந்திருக்கேன். நிறையே பேர் சொல்லியும் இருக்காங்க. சில நேரம் எல்லார்கூடவும் க்ளோஸா மிங்கிள் ஆவேன். சில நேரம் திடீர்னு ஒதுங்கித் தனியா இருப்பேன். ரெண்டு நாள் ரூமை விட்டுக்கூட வெளிய வரமாட்டேன். சில விஷயம் பிடிக்கலைன்னா விட்டுடுவேன். யாரையும் அவாய்ட் பண்றதுக்காக அப்படிப் பண்ணலை. ஆனா, அதை சிலர் தப்பா எடுத்துப்பாங்க. தனிமை நல்ல விஷயம். ஆனா, அதுல குமுறிக்கிட்டு இருக்கமாட்டேன். தனியா தியேட்டர் போய் படங்கள் பார்ப்பேன். பெர்சனல் லைஃப்ல கவனம் செலுத்தமாட்டேன். வாரத்துக்கு ஏழு நாள் கறுப்பு சட்டை போடுவேன். சினிமா ஃபங்ஷன்னா நடுங்க ஆரம்பிச்சுடுவேன்.’’

‘‘ஆக்ஷன் ஹீரோ இமேஜ் விழுந்தது நல்லதுன்னு நெனைக்குறீங்களா?’’

‘‘மக்கள் எல்லாரையும் அப்படி ஏத்துக்க மாட்டாங்க. என்னை ஏத்துக்கிட்டது எனக்குக் கிடைச்ச கிரெடிட்தான். அதைப் பயன்படுத்திக்கிட்டு புத்திசாலித்தனமா கெரியரை நகர்த்தலாம். ஆனா அதுக்குள்ள மாட்டிக்காம இருக்கணும். இவன் அடிப்பான். இவன் அடிச்சா நம்பலாம்னு ஆடியன்ஸ் சொல்லும்போது நாம அடிப்போம்ல. அதான் நமக்குக்கிடைச்ச வெற்றி.’’

‘‘இப்போ தமிழ் சினிமா ஃபீல்டு எப்படி இருக்கு?’’

"தி பெஸ்ட்டா இருக்கு. இந்தக் குடும்பத்துப் பையன், இந்த பின்னணியில இருந்து வர்றவன் தான் ஹீரோவா ஜெயிக்க முடியும்னு இல்லை. யார் நடிச்சாலும் பார்க்கலாம்னு சூழல் உருவாகியிருக்கு. வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம். புதுமுகங்கள், புது இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் எல்லாருக்கும் நல்ல ஃப்ளாட்பார்ம் கிடைச்சிருக்கு. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விதார்த், விமல் வளர்ச்சியை நான் அப்படித்தான் பார்க்குறேன். இது பெஸ்ட் சினிமாவோட பீரியட்.’’

‘‘நீங்க சினிமாவுக்கு வந்து பத்தாவது வருஷத்துல என்ட்ரி ஆகுறீங்க? இதுவரைக்கும் என்னென்ன கத்துக்கிட்டீங்க?’’
 
‘‘சினிமாவைப் பொறுத்தவரைக்கும் வெற்றி மட்டும்தான் பேசும். அதுக்கு சத்தம் அதிகம். ‘சினிமா ஜாலியான ஃபீல்டு. சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும்’னு சிலர் நம்புறாங்க. எல்லா துறைகளை விடவும் சினிமா அவ்ளோ கஷ்டமானது. மைண்ட் செட், கட்ஸ்.. எல்லாத்தையும் ஏத்துக்குற எனர்ஜியும், பக்குவமும் இருக்கணும். நடிகனா வந்த பிறகு மாறக்கூடாது. தோல்வியோ, வெற்றியோ ஒரே மாதிரி எடுத்துக்கணும். அப்படி எடுத்துக்கிட்டா சுத்தி இருக்குற விஷயங்கள் மாறிக்கிட்டே இருக்கும். நாம மாறாம இருக்கலாம். நடிப்பு, நடனம், சண்டைன்னு எது வேணும்னாலும் கத்துக்கலாம். ஒரு நடிகனுக்கு அது எப்பவாவது பயன்படும்.போட்டி பலமா, பயங்கரமா இருக்கு. அதை மைண்ட்ல வெச்சுக்கிட்டுதான் வந்திருக்கோம். எப்பவுமே தனி ஆளா யாரும் களத்துல ஓடப் போறதில்லை. எல்லா வெள்ளிக்கிழமையும் ஒரு அலார்ம் இருக்கு. அதனாலதான் தினம் தினம் நிறைய கத்துக்கணும்னு என் கண்களைத் திறந்தே வெச்சிருக்கேன். 'பாண்டிய நாடு' முடிஞ்சதும் பெர்சனல் வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் தரணும். சண்டைப் பயிற்சிக்காக ஜிம்னாஸ்டிக் கத்துக்கணும். என்னை நானே கொடூர வில்லனா பார்க்குற அளவுக்கு நடிக்கணும். டைரக்டர் விஷால் ஆகணும். இதான் என் அடுத்த கட்ட மூவ்.’’  

- க.நாகப்பன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close