Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஜலுக்கும் கரீனா சோப்ராவுக்கும் போட்டா போட்டி!

'' 'எஸ்.எம்.எஸ்.’, 'பாஸ்’, 'ஓ.கே. ஓ.கே’னு அதே ட்ரீட்மென்ட்டில் இப்போ ஏகப்பட்ட படங்கள் வெளியாகுது. அதைத் தாண்டி சின்சியரா சிரிக்க வைக்கணும். அதையே கொள்கையா வைச்சு உழைச்சதால, எங்க 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ரொம்ப அழகாவே வந்திருக்கு!'' என்று இயக்குநர் ராஜேஷ்.எம் டைட்டில் கார்டு போட,  

 ''வழக்கமா ராஜேஷ் கதை சொல்றேன்னு சொல்லிட்டு காமெடி சீன்களா அடுக்குவார். 'சீன் ஓ.கே. பிரதர். கதை எங்கே?’னு கேட்டா, 'இது எல்லாத்தையும் வெட்டி ஒட்டி நடுநடுவுல 'மானே... தேனே...’ போட்டுக்கிட்டா, கதை ரெடி’னு சொல்லிடுவார். ஆனா, அவரே முதல்முறையா 'அழகுராஜா’ல கதை சொல்லியிருக்கார்!'' என்று சதாய்க்கத் தொடங்குகிறார் சந்தானம். 'ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்காக மீண்டும் காமெடி கொடி பிடித்துக் கிளம்பும் இந்தக் கூட்டணியைச் சந்தித்து சிரித்துச் சிரித்துப் பேசியதிலிருந்து...  

''ஜாலியா படம் பார்ப்போம்னு வர்ற எல்லாருக்கும் மரண பயத்தை உண்டு பண்ணுற 'நான்தான் முகேஷ்’ கேரக்டருக்கு எங்க தரப்புல நாங்க அஞ்சலி செலுத்தணும்னு ஆசைப்பட்டோம். அதான் டீஸர்ல அவருக்கு 'மரியாதை’ கொடுத்ததோட, 'இனி தம்மே வேணாம்’னு மெசேஜும் வெச்சோம்!''  என்று ராஜேஷ் சீரியஸாகப் பேசத் தொடங்க,

''அட... அது என்ன பாஸ் சீரியஸ் நியூஸ் ரீல்  வாசிக்கிறீங்க? காஜல் அகர்வால் வெட்கப்பட்ட கதையைச் சொல்லுங்க!'' என்கிறார் சந்தானம்.

''அட, அந்த வெட்கம்லாம் நம்ம கரீனா சோப்ரா பெர்ஃபார்மன்ஸ் முன்னாடி நிக்குமா?'' என்று கண் சிமிட்டினார் ராஜேஷ். உடனே பதறி 'வேணாம்... வேணாம்’ என்று சந்தானம் சைகை காட்டினாலும் கண்டுகொள்ளாமல் சஸ்பென்ஸ் உடைக்கத் தொடங்கினார் ராஜேஷ்.

''படத்துல ஒரு ஃப்ளாஷ்பேக். அதுல சின்ன வயசு பிரபுவா கார்த்தியே நடிச்சிருக்கார். அப்போ அவர் கூட நின்னு விளையாடுவாங்க கரீனா சோப்ரா. அது வேற யாருமில்லை... நம்ம சந்தானம்தான். அதுவும் வில்லன் கோட்டா சீனிவாச ராவுக்கும் கரீனா சோப்ராவுக்கும் கெமிஸ்ட்ரி பிச்சுக்கும்!'' என்று ராஜேஷ் நிறுத்த,

''ஆமாமா... பிச்சுக்கும். ஒரு சீன்ல அத்தனை பெரிய வாயை வெச்சுக்கிட்டு எனக்கு முத்தம் கொடுக்க வருவார் கோட்டா. 'பைத்தியம் பிடிச்ச நாய் வெறித்தனமா கடிக்க வருதுடா... ஓடிருங்கடா’னு சொல்லிட்டு நான் ஓடினதைப் பார்த்துட்டு கோட்டாவே சிரிச்சுட்டார். அந்தக் கொடூர மிஸ்ட்ரியைத்தான் இவர் 'கெமிஸ்ட்ரி’னு கலாய்க்கிறாராம்!'' என்று பொருமுகிறார் சந்தானம்.

சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ராஜேஷ். ''அப்பா-மகன் பாசப் பிணைப்புதான் படம். கார்த்தி கல்யாணமே வேணாம்னு  வாழ்ந்துட்டு இருக்கிறவர். அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பிரபு விடாப்பிடியா போராடுறார். யார் ஜெயிக்கிறாங்கங்றதுதான் கதை!''

''உங்ல படங்கள்ல காமெடி பன்ச்கள் களை கட்டும். இதுல அப்படி என்ன வெச்சிருக்கீங்க?''

''அப்படி எதுவுமே வைச்சுக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஆனா, 'உங்களை எங்கயோ கொண்டு போகப்போகுது’னு ஒரு டயலாக் மட்டும் வெச்சிருக்கோம். 'இந்த வேகம் உங்களை எங்கயோ கொண்டுபோகப்போகுது’, 'இந்தப் பணிவு உங்களை எங்கயோ கொண்டுபோகப்போகுது’, 'இந்த சமயோஜித புத்தி உங்களை எங்கயோ கொண்டுபோகப்போகுது’னு படம் முழுக்க கார்த்தியும் சந்தானமும் உங்களை 'எங்கயோ கொண்டு போவாங்க!''

''சூர்யா, கார்த்தி... அண்ணன், தம்பி ரெண்டு பேருடனும் நடிச்சிருக்கீங்க. உங்க 'நண்பேன்டா’ நண்பன் யார்?'' என்று சந்தானத்திடம் கேட்டால் பட்டென்று, ''கார்த்திதான்'' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்...  

''பள்ளிக்கூடத்துல இங்க் அடிச்சிட்டு பென்சிலுக்கு சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்கள்ல... அப்படியரு பள்ளித் தோழன் மாதிரி எனக்கு கார்த்தி. 'சிங்கம்-2’ பி.டி. மாஸ்டர் மாதிரிதான் சூர்யா சார். எப்பவும் கண்டிப்பா இருப்பார்!''  

''நீங்க இப்படிச் சொல்றீங்க... ஆனா, 'கார்த்தி-சந்தானம் இடையே ஈகோ மோதல்’னு சொல்றாங்களே!''

'' 'கார்த்தி-சந்தானம் பிரிவு. இனி இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டார்கள்’னு செய்தியே போட்டுட்டாங்க. அதையும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா பார்த்துதான் சிரிச்சோம். வதந்திகளை நம்பாதீங்க பாஸ்!''

'' 'நண்பர்கள் என்னை கைவிட்டுட்டாங்க’னு 'பவர் ஸ்டார்’ புலம்புறாரே... 'நண்பனுக்கு’ப் புரிஞ்சதா?''

''அவரோட நண்பர்களைத்தானே சொல்றார்! அதுல நமக்குப் புரிய என்ன இருக்கு? சினிமா நமக்கு தொழில். அதுல சிலரிடம் தொழிலையும் தாண்டி பழகுறோம். சிம்பு, உதயநிதி, ஆர்யா, கார்த்தி, ராஜேஷ், வி.டி.வி.கணேஷ்னு அந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசு. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துல அந்த நேரம் சென்சேஷனா இருந்த பவர் ஸ்டாரை பயன்படுத்திக்கிட்டேன்.  படம் நல்லா ஓடுச்சு. அவரும் வளர்ந்தார். அதுல நடிக்கும்போது அவர்கூட ஸ்பாட்ல பேசிக்கிட்டதோட சரி. அப்புறம் போன்லகூட அவரோட பேசினது இல்லை!''  

சட்டென்று இடைமறித்து, ''ஏன் பிரதர் சொந்தக் கதை பேசுறீங்க'' என்ற ராஜேஷ், ''சார் மொத்தத்துல 'அழகுராஜா’ தீபாவளி ட்ரீட் சார்!'' என்றார். ''டைரக்டர் டச்சாமாம்'' என்றபடி கலாய்த்து கைகுலுக்கி வழியனுப்பினார் சந்தானம்!

- ம.கா.செந்தில்குமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close