Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இது ரஜினி கொடுத்த துணிச்சல்!”

ரே 'கும்கி’யால் உசரத்துக்குப் போன விக்ரம் பிரபு, 'இவன் வேற மாதிரி’, 'அரிமா நம்பி’ என இரண்டு படங்களில் பிஸி. 'சிவாஜி பேரன்’, 'பிரபு மகன்’ என்ற ஒளிவட்டங்களைக் காட்டாமல், சிம்பிளாகச் சிரிக்கிறார்.

''ஒரே நேரத்துல நாலைந்து படங்களில் நடிப்பது என் தாத்தா, அப்பா காலத்துல சகஜம், சுலபம்.  இன்னைக்கு நிச்சயம் கஷ்டம்.  ஆனா, 'ஒரே நேரத்துல ஒரு படம் மட்டும் பண்ணாதே... ரெண்டு, மூணு படங்கள்ல நடி. அப்பத்தான் நல்ல அனுபவம் கிடைக்கும்’னு ரஜினி சார் சொன்ன அறிவுரைதான் என் துணிச்சலுக்கும் நம்பிக்கைக்கும் அடிப்படை!''  

''சினிமாவில் புதுசு, புதுசா வந்து அசரடிக்கிறாங்க. உங்களுக்கும் அந்த அறிமுக அடையாளம் 'கும்கி’யால் கிடைச்சது. அதை எப்படித் தக்கவெச்சுப்பீங்க?''

''உண்மைதான். இப்போ சினிமா பண்றது பெரிய சவால். ரசிகர்கள் ரொம்பவே வெரைட்டி எதிர்பார்க்கிறாங்க. தாத்தா காலத்துல 20 வருஷத்துக்கு ஒருமுறை டிரெண்ட் மாறுச்சு. அப்பா காலத்துல 10 வருஷத்துக்கு ஒருமுறை. இப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை மாறுது. அதுல நம்ம லைன் எதுன்னு தெளிவா இருந்தா போதும்! நான் சின்ன வயசுல கேமராமேன் ஆக ஆசைப்பட்டேன். எப்பவும் கேமராவும் கையுமா திரிவேன். 'சினிமாதான் என் எதிர்காலம்’னு முடிவெடுத்ததும், வெளிநாட்டுக்குப் போய் தியேட்டர் ஆர்ட்ஸ் படிச்சேன். கூடவே டைரக்ஷன் கோர்ஸும் பண்ணினேன். செட் டிசைனிங்ல இருந்து நடிப்பு வரைக்கும் எல்லாமே படிச்சேன். இருந்தாலும் நம்ம கல்ச்சர் தெரிஞ்சுக்கணும்னு 'சர்வம்’ படத்துல விஷ்ணு வர்த்தன்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தேன். அதனால சினிமாவின் எல்லா ஏற்ற இறக்கங்களையும் சந்திக்க, சமாளிக்க தயாராவே இருக்கேன்!''

''தாத்தா, அப்பாகிட்ட என்னவெல்லாம் கத்துக்கிட்டீங்க?''

''தாத்தாகிட்ட கத்துக்கிட்டது ரொம்பவே. நேரம் தவறாமையில இருந்து டிரெஸ்ஸிங் சென்ஸ் வரை அவர்தான் எங்க குடும்பத்துல எல்லோருக்கும் ஆதர்சம். அதைத்தான் அப்பாவும் கடைப்பிடிச்சார்... இப்போ நானும். அதே சமயம் கேமராவுக்கு முன்னாடி தாத்தா, அப்பாவை ஞாபகப்படுத்தும் எந்த ஸ்டைலும் என்னிடம் இருக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன்!''

''எப்பவும் சீரியஸாவே இருப்பீங்களோ?''

''ரொம்ப ஜாலியான ஆளு நான். ஆனா, பார்ட்டி, டிஸ்கோனு என்னை வெளி இடங்களில் பார்க்க முடியாது. அதனால அப்படி ஒரு பேர் வந்திருச்சு போல!''

''கார்த்திக் பையன் கௌதமும் நீங்களும் 'அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போறதா வந்த செய்தி உண்மையா?''

''அதெல்லாம் வதந்தி. 'அக்னி நட்சத்திரம்’ எல்லாம் க்ளாஸிக் மூவி. அதைத் தொடுறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கணும். அந்தப் படம் அப்போ ஹிட்டாக ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கும். அதன் இரண்டாம் பாகம்கிறதுக்காகவே ஒரு படம் இப்போ ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதே மாதிரிதான் அப்பாவோட 'சின்ன தம்பி’ ரீமேக்ல நடிப்பீங்களானு கேட்கிறாங்க. அந்தப் பட ரேஞ்ச்சே வேற. அந்தப் படத்தின் ரீமேக் பத்தி யோசிக்கவே முடியாது!''

''ரீமேக் வேண்டாம்... அப்பாகூட சேர்ந்து நடிப்பீங்களா?''

''ஆசைதான். ஆனா, பயமா இருக்கு. அவங்க முன்னாடி பேசவே பயப்படுவேன். வாய்ப்புக் கிடைச்சா நிறைய கத்துக்கலாம். ஆனா, அமையணும்!''

''சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு சக ஹீரோக்களை எப்படிப் பார்க்கிறீங்க?''

''யாரையுமே போட்டியாக, நான் பார்க்கிறது இல்லை. என் படம், என் ஷூட்டிங், என் வேலை... அவ்வளவுதான். என் வேலைகளை நான் சிறப்பா, பொறுப்பா செய்யணும். அதுதான் என் டார்கெட்!''

''குடும்பத்தைப் பத்தி ஏன் பேச மாட்டேங்குறீங்க?''

''தாத்தா, அப்பாவைத்தான் இந்த விஷயத்துல  ஃபாலோ பண்றேன். எனக்கு என் குடும்பம் முக்கியம். அதே சமயம் குடும்பம் வேற, வேலை வேற. என்னால் என் குடும்ப உறுப்பினர்களின் பழக்கவழக்கத்தில் எந்த மாற்றமும் வந்துடக் கூடாது. மத்தபடி மறைக்கணும்னு எந்த நோக்கமும் இல்லை!''

- க.ராஜீவ் காந்தி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close