Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷின் அடுத்த ‘கொலவெறி’ முயற்சி!

''இது அஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளயே ஓட்டிப் பார்த்த ஸ்கிரிப்ட். தனுஷ் சாரோட ஏழெட்டுப் படங்கள் டிராவல் பண்ணிருக்கேன். ஆனா, நான் டைரக்ஷன் எண்ணத்துல இருக்கேன்னு அவருக்குத் தெரியாது. சும்மா பேசிட்டு இருந்தப்ப, என் டைரக்ஷன் ஆசையைச் சொல்லி படத்தின் ஒன்லைன் சொன்னேன். 'சூப்பர் வேல்ராஜ். நம்ம பேனர்ல நீங்களே டைரக்ட் பண்ணிடுங்க. ஹீரோவுக்கு நான் ஓ.கே-வா?’னு கேட்டார். அவரோட 25-வது படத்தை என்னை நம்பிக் கொடுத்திருக்கார். 'உன் பொறுப்பு ஜாஸ்தியா இருக்குடா’னு உற்சாகமா ஓடிட்டு இருக்கேன்!'' உள்ளுக்குள் புரளும் சந்தோஷ மின்னல்களை அடக்கிக்கொண்டு நிதானமாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். 'வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் சாருக்கு இயக்குநர் புரமோஷன்!

''தனுஷ் கேரக்டர் என்னன்னு தலைப்பே சொல்லிடுது. அவர் இதுவரை அப்படித்தானே பெரும்பாலும் நடிச்சுட்டு இருக்கார்?''

''அது எங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்தானே. 'வேலையில்லா பட்டதாரி’ தலைப்பே ஹீரோ கேரக்டரையும் கதையையும் சொல்லிடும். மிச்ச சுவாரஸ்யங்களை மட்டும் நாங்க சொன்னாப் போதும்ல. எதையும் பாசிட்டிவாப் பாருங்க பிரதர். நகைச்சுவை, ஆக்ஷன், சென்ட்டிமென்ட்னு எல்லாமே பக்கா பேக்கேஜா இருக்கும். எடிட் பண்ணி முதல் பாதி படம் பார்த்த தனுஷ், 'நீங்க வெளியில் எத்தனை படங்களுக்கு வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஆனா, வருஷத்துக்கு ஒரு படம் நம்ம கம்பெனிக்கு பண்ணணும்’னு சொல்லியிருக்கார். வேல்ராஜ் ரொம்ப ஹேப்பி!''

'' 'கொலவெறி’ ஹிட்டுக்குப் பிறகு அனிருத்-தனுஷ் கூட்டணி. என்ன மேஜிக் பண்ணியிருக்காங்க?''

''இன்னைக்கு தியேட்டர்ல 'அனிருத்’னு பேர் பார்த்தா, கிளாப்ஸ் அள்ளுது. பையன் அந்தளவுக்கு எனர்ஜியோட மியூசிக் கொடுக்கிறார். ஜனவரி முதல் வாரம் இசை வெளியீடு. படத்தில் ஆறு பாட்டையுமே தனுஷ் சார்தான் எழுதியிருக்கார். அதுல ஒரு பாட்டை ஜானகியம்மா பாடியிருக்காங்க. மத்த அஞ்சு பாட்டையும் தனுஷே பாடியிருக்கார். 'வேலையில்லா பட்டதாரி...தொட்டுப்பார்த்தா ஷாக்கடிக்கும் வேறமாரி’... இந்த மாதிரி சிம்பிளான வரிகள்தான். ஆனா, 'கொலவெறி’ அளவுக்கு ஹிட் அடிக்கும் ரெண்டு பாட்டு இருக்கு!''

''இயக்குநர் ஆகிட்டீங்க... இனி டைரக்ஷன் மட்டும்தான் பண்ணுவீங்களா?''

''அட, ஒளிப்பதிவுதான் என் ஆத்மா. அதை எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நிறைய இயக்குநர்கள் தங்கள் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணச்சொல்லிக் கேட்டாங்க. அந்த சமயத்துல, 'தனுஷ் சார் படத்தை டைரக்ட் பண்ணப்போறேன்’னு சொன்னதும், 'ஒளிப்பதிவில் பிஸியா இருக்கும்போது டைரக்ஷன் தேவையா?’னு வருத்தப்பட்டாங்க.

வெற்றிமாறன் சார்கிட்ட சொன்னேன். 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்களோடது நல்ல ஸ்கிரிப்ட். பிரமாதமா வரும். உங்க படத்தை முடிச்சிட்டுவாங்க. அடுத்தும் நாம சேர்ந்து பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார்.

இப்ப 'வேலையில்லா பட்டதாரி’ வேலைகளுக்கு நடுவிலேயே, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை’... அப்புறம் 'பொறியாளன்’னு ரெண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்றேன். அதுக்கு ஏத்த மாதிரி தனுஷ் சார் தன் கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திருக்கார். தனுஷ்-ஐஸ்வர்யா ரெண்டு பேரோட பெருந்தன்மைதான் இதுக்குக் காரணம்!''

- ம.கா.செந்தில்குமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close