Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தானத்தைக் கையைப் பிடிச்சு இழுத்தேன்!

சென்னை ஸ்பென்சர் பிளாசா பக்கத்தில் ஈக் கூட்டமும் எறும்புக் கூட்டமும் கியூவில் போனதைப் பாத்து என்னன்னு விசாரிச்சா நம்ம அடை.... தேன்ன்ன்ன்னடை வந்திருந்தாங்க. ஐ... ஜாங்கிரி... போங்கிரி என கூவிக்கொண்டே ஒரு ஹாய் சொன்னேன், காமெடி நடிகை மதுமிதாவுக்கு. அப்புறம் என்ன, 'மதுமிதாவுடன் ஒரு கலகல அரட்டை’!

''உங்களை எல்லோரும் அடை தேன்ன்ன்ன்ன்னடை... ஜாங்கிரினு கூப்பிடுறாங்களே....ஒரு ஸ்வீட் ஸ்டால் போட்டுட்டு அங்கேயே உட்கார்ந்துடலாமே?''

''எப்படிச் செல்லம் கரெக்ட்டா மோப்பம் புடிச்ச? நான் கூடிய சீக்கிரம் ஓட்டல் ஆரம்பிக்கிற ஐடியாவில்தான் இருக்கேன். கூடவே இலவச இணைப்பா மூலைக்கு மூலை ஸ்வீட் ஸ்டால் ஆரம்பிக்கப் போறேன். திருப்பதின்னா லட்டு, திருநெல்வேலின்னா அல்வா மாதிரி தேனடைனா அது மதுமிதாதான்.''

''ஹீரோயின் ஆசை இருக்கா?''

''யார் இல்லைனு சொன்னா. ஹீரோயினா நடிக்க என்னை அமெரிக்காவுல கூப்டாக... ஜப்பான்ல கூப்டாக... லண்டன்ல கூப்டாக’னு சொல்ல மாட்டேன். நாலைஞ்சு உப்புமா கம்பெனியில் வாய்ப்பு வந்துச்சு. கேரக்டர் புடிக்கலைனு கழட்டிவிட்டுட்டேன்பா. நல்ல ரோல் வந்தா வெளிநாட்டு மாப்பிள்ளை மாதிரி வெளிநாட்டு மணப்பெண்ணா நடிக்கக்கூட ரெடிதான். அஜித்து, ஜெயம் ரவிகூட ஜோடியா நடிக்கணும்னு ஆசைதான். சொன்னா போடவா போறீங்க.''

''சந்தானத்தைக் கையைப் பிடிச்சு இழுத்தீங்களாமே?''

''ஓ, அது உங்க வரைக்கும் வந்திடுச்சா? 'ஓகே ஓகே’ படத்துல ஒரு சீன். அந்தப் படத்துக்காக எனக்கு பல்லு, விக்கு, அப்புறம் பெரிய சைஸ்ல ஒரு கண்ணாடினு எல்லாத்தையும் மாட்டிவிட்டுட்டாங்க. எதைப் பார்த்தாலும் டிரிபிளா தெரிய ஆரம்பிச்சிடுச்சு. தள்ளாடித் தள்ளாடி நடந்துட்டு இருந்தேன். நானும் அவரும் நடந்து வர்ற மாதிரி ஒரு சீன். அவர் நடக்க அப்புறம் நான் நடக்க, எனக்கு கண்ணு தெரியாம கால் வழுக்கி விழப்போனேன். காட் இஸ் கிரேட்... அப்போதான் சடால்னு நான் அவர் கையைப் பிடிச்சு இழுத்துட்டேன். அதுவரைக்கும் எனக்கும் அவருக்கும் அவ்வளவா பழக்கம் இல்ல. அதுக்கப்புறம் ஸாரி சார்... ஸாரி சார்னு பல தடவை ஸாரி கேட்டுட்டேன். இட்ஸ் ஓகேனு என்னை சமாதானப்படுத்தினார். அதுக்கப்புறம் கண்ணாடி இல்லாமதான் நடிச்சேன். மற்றபடி நீங்களா ஏதாவது கிளப்பிவிடாதீங்க.''

''பசங்க சரக்கடிச்சுட்டு சூப் சாங் பாடுறது பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''தோடா... என்னமோ பசங்களுக்குதான் லவ்வு புட்டுக்கிட்டா 'வேணாம் மச்சான்... வேணாம்’னு பாட்டு வருமா? நாங்களும் பாடுவோம் பாஸ். அவங்க தம்மு, தண்ணி அடிப்பாங்க. நாங்க அவங்களையே போட்டு அடிப்போம். மத்தபடி நாங்களும் சூப் சாங் பாடுவோம். என்ன... கொஞ்சம் டெர்ர்ர்ர்ரரா இருக்கும். பரவாயில்லையா?''

- பொன்.விமலா

படம் : ப.சரவணகுமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close