Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஐ லவ் சினிமா!”

'தெய்வத்திருமகள்’ படத்தில் அசத்திய 'நிலா’ குழந்தை சாரா, இப்போது சேட்டை சிறுமியாகக் குறும்பு செய்கிறார்.

''அண்ணா... நான் இப்பதான் உங்களை மீட் பண்றேன். அதனால என்னைப் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ... நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. அனிமல்ஸ்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'பப்பி’னு சின்னதா பெட் அனிமல் ஒண்ணு வளர்க்கிறேன். எனக்கு இங்கிலீஷ் ஃபிலிம்ஸ் ரொம்பப் பிடிக்கும். அப்புறம் என்ன சொல்ல... ஐ'யம் பியூட்டிஃபுல்!'' - கலகலவென சிரிக்கும் சாரா, அவ்வளவு அழகு.

'' 'தெய்வத்திருமகள்’ நிலா மாதிரியே 'சைவம்’ தமிழ்ச்செல்வியையும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழ்ச்செல்வி, பொய்யே சொல்லாத ரொம்ப குட் கேர்ள். திடீர்னு அவளுக்கு ஒரு பிரச்னை. அதை எப்படிச் சமாளிக்கிறா? அதான் ஸ்டோரி!''

''சினிமாவில் சாரா சூப்பர்... ஸ்டடீஸ்ல எப்படி?''

''இப்போ மும்பையில் தேர்டு ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். ரொம்ப நல்லாப் படிப்பேன். அதைவிட ரொம்ப நல்லா சேட்டை பண்ணுவேன். 'ஐஸ் ஏஜ்’ கேம் ரொம்பப் பிடிக்கும். ஸ்விம்மிங் பிடிக்கும். ஆனா, இந்தக் கிரிக்கெட், ஃபுட்பால் பிடிக்காது!''

''உனக்கு நிறைய கிஃப்ட் வந்திருக்குமே... அதுல மறக்க முடியாதது எது?''

''ஒரு டெடி பியர். அப்புறம்... கரீனா கபூர்!''

''என்னது கரீனா கபூரா?''

''ஆமா. அமீர்கான் அங்கிள்கூட ஒரு விளம்பரத்துல நடிச்சுட்டு இருந்தேன். ஒரு சீன் நான் சரியாப் பண்ணலை. அப்ப அவர் என்கிட்ட, 'உனக்கு எந்த ஹீரோயின் பிடிக்கும்?’னு கேட்டார். 'கரீனா கபூர்’னு சொன்னேன். 'நீ இந்த சீன் நல்லா நடிச்சா, அவங்ககிட்ட உன்னைக் கூட்டிட்டுப் போறேன்’னு சொன்னார். அந்த எனர்ஜியில நானும் அழகா நடிச்சுக் கொடுத்துட்டேன். அப்புறம் அதை மறந்துட்டேன். திடீர்னு ஒருநாள் என்னை ஷூட்டிங் ஸ்பாட் வரச் சொன்னார். போய்ப் பார்த்தா... வாவ்... கரீனா! நிறைய சாட் பண்ணோம். எனக்கு கிஸ் கொடுத்தாங்க. ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு.

அப்புறம் ஷாரூக்கான் அங்கிள் எனக்கு ஒரு டெடி பியர் கொடுத்தார். அது என்னைவிடப் பெரிசு. அப்புறம் கதை புக் ஒண்ணு கொடுத்தார். அது மொத்தம் 1,365 பக்கம். படிக்கப் படிக்க பேஜஸ் வந்துட்டே இருக்கு. இன்னும் படிச்சே முடிக்கலை. சீக்கிரம் முடிக்கணும்!''

''சாரா பிக் கேர்ள் ஆனதும் என்ன பண்ணுவாங்க?''

''முதல்ல நான் பிக் கேர்ள் ஆகணும். எனக்கு ஸ்வீட்டி ஆன்ட்டி மாதிரி உயரமா ஆகணும். ஓ... உங்களுக்கு ஸ்வீட்டி ஆன்ட்டின்னா யாருனு தெரியாதுல்ல... அனுஷ்கா தீதி. 'தெய்வத்திருமகள்’ல என்கூட நடிச்சாங்களே... அவங்கதான். அவங்க உயரம் மேல எனக்குப் பெரிய கிரேஸ். ஸ்வீட்டி ஆன்ட்டி மாதிரி நானும் உயரமா வளரணும்னா நல்லாச் சாப்பிடணும்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலேயே நான் நல்லா சாப்பிடுறேன்!''

''சாராவின் குறிக்கோள்?''

''பெரிய டைரக்டர் ஆகணும். அப்புறம் கொரியோகிராஃபர் ஆகணும். ஏன்னா, ஐ லவ் ஃபிலிம்ஸ். படம் பார்க்க மட்டும் இல்லை, படம் டைரக்ட் பண்ணவும் எனக்குப் பிடிக்கும். இப்போ நானே ஒரு கதை எழுதியிருக்கேன். அதுல எங்க டாடிக்கும் ஒரு ரோல் இருக்கு. பிக் கேர்ள் ஆனதும் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணுவேன். அப்புறம் பிரகாஷ்ராஜ் அங்கிளை அந்தப் படத்துல நடிக்கவைப்பேன்!''

''ஏன்?''

''அவர் நடிப்பு எனக்குப் பிடிக்கும். எனக்கும் அவர்கூட நடிக்க ஆசை. அதான்!'' - கன்னம் குழிவிழச் சிரிக்கிறாள் 'நாளைய இயக்குநர்’!

- க.நாகப்பன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்