Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை எல்லாரும் தலதளபதின்னுதான் கூப்புடுவாங்க ... ராஜேந்திரன் சிறப்பு பேட்டி...

       ஒரே ஆள் நம்மை சீட்டு நுனிக்கே கொண்டுவந்து பயமுறுத்தவும் முடியும், அதே ஆள் ஸ்கீரினில் வந்தாலே நமக்கு சிரிப்பும் வரும் என்றால் நம்ம ராஜேந்திரன்தான் அதுக்கு கரெக்டு. கோஸ்ட் கோபால் வர்மாவாக கோதாவில் இறங்கியவர் கையில், இப்போது ஏகப்பட்ட படங்கள். ’நான் ரொம்ப பிஸிப்பா’ன்னு சுத்திகிட்டு இருந்தவரைப்  பிடித்து ’எப்படி இப்படிஜி’ என சில கேள்விகளைத் தெளித்தோம்...

எப்படி சினிமா வாய்ப்பு?

எங்க குடும்பமே ஸ்டண்ட் குடும்பம்ப்பா...  அப்பா , அண்ணன் ரெண்டு பேருமே செம ஸ்டன்ட் மாஸ்டரு. நாமளும் அப்படியே அவங்க பாதைய பிடிச்சு உள்ள வந்தாச்சு. இப்போ ஒரே நேரத்துல வில்லன், காமெடியன் ரெண்டு ரோலும் பண்றேன்.
 
 

என்ன படிச்சுருக்கீங்க?  உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன்...

சொந்த ஊரு தூத்துக்குடிப்பா. படிச்சது பத்தாவது. அப்பா பெரிய ஸ்டன்ட் மாஸ்டர். பெரியண்ணன் ஸ்டன்ட் மாஸ்டரு . நமக்கும் வேலையில்லாம அப்படியே ஸ்டன்ட்டுக்குள்ள வந்துட்டேன்.  இப்பவும் தமிழ், தெலுங்கு, இப்படி பல மொழிகள்ல ஸ்டன்ட் மாஸ்டரா இருக்கேன். நடிப்பு தமிழ்ல மட்டும்தான்.

எப்படி நான் கடவுள் பட வாய்ப்பு கிடச்சது?

’பிதாமகன்’ படத்துல ஸ்டன்ட் மேனா வேலை செய்யும்போதே என்னை  பாலா சாருக்குத் தெரியும். ’நான் கடவுள்’ படத்துல ஒரு ஃபைட் சீன் இருக்கு பண்றியான்னு கேட்டாரு. அவ்ளோ பெரிய டைரக்டரு நம்மள கேட்டதே பெரிய விஷயம்ப்பா. அப்பறம் என்னோட மொட்டத் தல,  லுக்கெல்லாம் பாத்துட்டு நீ வில்லன்னா பண்ணுன்னாரு பண்ணேன்ப்பா. என்னால மறக்க முடியாத படம் . நெறைய கத்துக்கிட்டேன்.

அவ்ளோ பெரிய வில்லனா இருந்துட்டு , எப்படிஜி காமெடி சப்ஜெக்ட்?

எனக்கே அந்த டவுட்டுதாம்ப்பா. திடீர்னு பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல காமெடி ரோல் நடிக்கிறீங்களான்னு ராஜேஷ் சார் கேட்டாரு. என்ன சார் வில்லனா பண்ணிட்டு நான் போயி காமெடி பண்ணா நல்லா இருக்காது சாருனு சொன்னேன். அப்பறந்தான் உங்க கேரக்டர் வில்லன்தான் . ஆனா நீங்க பேசுற டயலாக்குக்கு எல்லாரும் சிரிப்பாங்கன்னாரு. என்னோட வாழ்க்கையில நான் கடவுளுக்கு அடுத்து முக்கியமான படம் பாஸ் (எ) பாஸ்கரன். ரோட்ல போனாகூட என்னை தலதளபதின்னுதான் கூப்புடுவாங்க.ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.

தலதளபதின்னு சொன்னோனதான் ஞாபகம் வருது, அதிகமா அவுங்க ரெண்டு பேரோட மாஸ் டயலாக்குகள படங்கள்ல பயன்படுத்துறீங்களே? எதாவது திட்டமா?

அய்யய்யோ... அதெல்லாம் இல்ல. டைரக்டர்கள் நான் இந்த டயலாக் பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. நானும் அவங்க சொல்றத செய்யறேன்... அவ்ளோதான்! உண்மையைச் சொல்லணும்னா டைரக்டர்கள்லாம் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் தராங்க. அதுலேயும் அட்லீ சார் கொடுத்த ’ராஜா ராணி படமெல்லாம் எனக்கு முக்கியமான படம்.

விஜய் , அஜித் சார்பா உங்கள யாராவது பாராட்டியிருக்காங்களா?

அவ்ளோ பெரிசா இன்னும் நான் ஏதும் பண்ணலப்பா. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துட்டு இருக்கேன். யாராவது பாராட்டினா கண்டிப்பா உங்களுக்கு போன் போட்டு சொல்றேன்.

விஜய் , அஜித் ஒரே நேரத்துல ரெண்டு பேர் படத்துலயும் சான்ஸ், ஆனா ஒரு படத்துலதான் நடிக்கணும் என்ன செய்வீங்க?

ரொம்ப சிக்கலான கேள்விப்பா, நடிச்சா தலதளபதி ரெண்டு பேர் கூடவும் ஒரே டைம்ல தான் நடிக்கணும். என்ன நான் சொல்றது. உங்களுக்கு 5000 இன்க்ரீமெண்டுப்பா. நான் கொஞ்சம் பிஸிப்பா... வரட்டுமா..

என்றவரிடம் வாழ்த்துகள் கூறிவிட்டு விடைபெற்றோம். 

நம்ம கோஸ்ட் கோபால் வர்மாவோட வாட்ஸ் அப் இமேஜ் இதுதான் என்ஜாய்.... 

ஜெய் சடகோபன் ரமேஷ்....! 

- ஷாலினி நியூட்டன் -

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close