Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தமிழில் கிளாமர் மட்டும்தான்!”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிஸியாகிவிட்டார் ராய் லெட்சுமி. ‘சவுகார்பேட்டை’ பட பூஜைக்காக வந்தவரிடம் ஒரு ஜாலி கடலை....

‘‘லெட்சுமி ராயை ராய் லெட்சுமினு நியூமராலஜிப்படி பேர் மாத்திட்டீங்களே, எனி இம்ப்ரூவ்மென்ட்?’’

“நம்மைப் பெத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா, அது நம்ம நல்லதுக்குதான்னு நம்புவேன். பெயரை மாத்திடுன்னு அப்பா சொன்னார்... மாத்திட்டேன். இதை நியூமராலஜினு சொல்ல முடியாது. ஆனா, அப்பா சொன்னதும் நல்லதுக்குத்தான்னு இப்போ தெரியுது.”

‘‘எப்பவும் ஃபேஸ்புக், ட்விட்டர்னு சோஷியல் மீடியாவில் பிஸியாகவே இருக்கிற ஆள் நீங்க. இதை ஒரு செலிபிரட்டியா எப்படி பார்க்கிறிங்க?’’

“சோஷியல் மீடியா வந்தது ரொம்ப நல்லது. முன்பெல்லாம்  கிசுகிசு எழுதிவிட்டால் அதை மறுத்தால்கூட, பத்திரிகைகளில் போட மாட்டார்கள். நான் ட்விட்டர் வந்து மூணு வருஷமாச்சு. ரசிகர்களிடம் நேரடியாகப் பேச முடியுது. அவர்களுக்கும் மகிழ்ச்சி. அதுபோல என்னோட நடிப்பில் உள்ள குறை நிறைகளை ரசிகர்கள் என்கிட்ட நேரடியாகச் சொல்ல முடியுது. ஐ சப்போர்ட் சோஷியல் மீடியாஸ்.’’

 

‘‘மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால்னு பெரிய நடிகர்களோட நடிக்கிறீங்க. ஆனா தமிழில்  எப்போ பார்த்தாலும் அரைகுறை டிரெஸ் மட்டும் போதுமா?’’


“எனக்கு தமிழ் சினிமா  மேலதான் இன்ட்ரஸ்ட். ஆனா ஒரு எக்ஸ்பெரிமென்டாதான் மலையாளத்தில் ட்ரை பண்ணேன். முதல் வாய்ப்பே மோகன்லால்கூட ‘ராக் அண்ட் ரோல்’ படத்தில் கிடைத்தது.  மலையாளத்தில் ரொம்ப எதார்த்தமா எடுப் பாங்க. தமிழில் நான் செலெக்ட் பண்றதே கிளாமர் ரோல்கள்தான். அதனால் ரெண்டு ஃபீல்டுலேயும் என் மனசு விரும்புற ரோல் களாகத்தான் கிடைக்குது.’’

‘‘தமிழில் நீங்க நடிக்க வந்து பத்து வருஷமாச்சு. உங்களின் சிறந்த படங்களாக உங்க மனசில் இடம் பிடிச்சது?’’

‘‘எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படம்னா ‘தாம்தூம்’, ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’, ‘அரண்மனை’னு நெறைய சொல்லலாம். ரொம்ப ஸ்பெஷல்னா, ‘கற்க கசடற’ படம்தான். ஏன்னா அதில்தானே நான் அறிமுகமானது. மற்றபடி நான் நடிச்ச எல்லாப் படமும் எனக்குப் பிடிக்கும். பத்து வருஷம் ஆனாலும் ஹீரோயினாவே இருக்கிற நடிகைகளில் நானும் ஒருத்திங்கிறதில் எனக்குப் பெருமைதான்!’’

- செந்தில்குமார், படங்கள்: கு.பாலச்சந்தர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close