Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டு விசிடியால் சினிமாவுக்குச் சிக்கலே இல்லை- ஆதாரத்துடன் அதிரவைக்கும் நடிகர்

'வல்லினம்' ,'புதியதோர் உலகம் செய்வோம்' ,'தற்​கா​ப்பு' 'பப்பரப்பாம்', 'என்னோடு விளையாடு' ஆகிய  படங்களில் நடித்திருக்கும்  கணேஷ், சென்னை கமலாசினிமாஸ் திரையரங்க உரிமையாளர்.  இந்தப்படங்களை அடுத்து இப்போது 'துடி' என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

திரையுலகம் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறது. பத்துக்கு ஒரு படம் ஓடுவதே அபூர்வமாக இருக்கிறது என்றெல்லாம் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பிறந்ததிலிருந்தே திரையரங்கஉரிமையாளராக இருக்கும் இவர், அவற்றிற்கு நேர்மாறான கருத்துகளைச் சொல்கிறார்.  அவருடைய பேட்டி...

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்லமாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது  ஏமாற்று வேலை.இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அதன்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை.

ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50 திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது.அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை ,பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். 'பாகுபலி' எப்படி வசூல் செய்தது? 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது?'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது? 'தனிஒருவன்' அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது.

வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close