Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாதுகாப்பான தீபாவளிக்கு நடிகரும் மருத்துவருமான சேதுவின் 6 டிப்ஸ்

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா ஆகிய படங்களின் நாயகன் சேதுராமன் நடிகர் என்பது தெரியும். ஆனால் அவர் ஒரு தோல் சிகிச்சை நிபுணர் என்பது தெரியுமா?இதோ டெர்மடாலஜிஸ்ட் சேதுராமனின் தீபாவளி பாதுகாப்பு டிப்ஸ்.

முக்கியமா கொஞ்சம் தனியான இடங்கள்ல பட்டாசு வெடிங்க. வயசானவங்க, குழந்தைகள்லாம் ரோட்ல போவாங்க, மத்தாப்பு மாதிரியான விஷயங்கள அணைச்சி ஓரமா போடுங்க. ஒரு வெடி வெடிக்கலைன்னா விட்ருங்க. அது பெரிய நஷ்டம் இல்ல. ரிஸ்க் வேண்டாம். இதெல்லாம் எல்லாரும் சொல்ற டிப்ஸ் தான். இருந்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு சொல்லிட்டேன்.

ஸ்வீட்ஸ்ல இருந்து ஆரம்பிக்கிறேன்.எண்ணெய்ப் பலகாரம் எவ்ளோ சாப்பிட்டாலும் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கோங்க. முகப்பரு மாதிரியான விஷயங்கள்ல இருந்து பாதுகாக்கும். முடிஞ்ச வரைக்கும் சுடுதண்ணி குடிங்க. உடம்புல எண்ணெய தங்க விடாது. பல பெண்கள் தீபாவளிக்கு முதல் நாள் தான் ஃபேஸியல், ப்ளிச் மாதிரியான விஷயங்கள் செய்வீங்க. இத முதல்ல நிறுத்துங்க. பட்டாசு வெடிக்கற பெண்கள் குறைஞ்சபட்சம் மூணு நாளைக்கு முன்னாடியே ஃபேஸியல், ப்ளீச் , ஸ்கின் ட்ரீட்மெண்ட் முடிச்சுடுங்க. ஏன்னா ஃபேசியல், பண்ண முகத்துல தோல் துவாரம்லாம் ஓபன்ல இருக்கும். அதோட பட்டாசு வெடிச்சா அந்த டஸ்ட், கெமிக்கல்லாம் அப்படியே ஸ்கின்னுக்குள்ள போக நிறைய சான்ஸ் இருக்கு.

ஒரு சின்ன மாஸ்க் பயன்படுத்துங்க. இப்போல்லாம் சீன பட்டாசுன்னு ஏதேதோ விக்கிறாங்க அதுல ஹை லெவல் கெமிக்கல் வெளிய வரும். அப்பறம் ஸ்வீட் சாப்டுகிட்டே பட்டாசு வெடிக்கிறது, பட்டாசு வெடிச்சோன சும்மா கைய ஒரு அலம்பு அலம்பிட்டு சாப்டப் போறது இதெல்லாம் தயவு செஞ்சு விட்ருங்க.

பட்டாசுல இருந்து வர்ற கெமிக்கல் பவுடர் சில்வர் நைட்ரேட் வயித்துக்குள்ள போனா அவ்ளோ ஆபத்து  இருக்கு. கிட்டத்தட்ட ஆசிட்டுக்குச் சமம். முடிஞ்சா ஒரு சின்ன குளியல் போட்டு ட்ரஸ் மாத்திட்டு சாப்பாடு பதார்த்தங்கள தொடுங்க. அப்பறம் குழந்தைகள கொஞ்சுறது, முத்தம் குடுக்கறது இதெல்லாம் பட்டாசு வெடிக்கும் போது பண்ணாதிங்க. முக்கியமா பிறந்த குழந்தைகளுக்கு பட்டாசு கெமிக்கல் அறவே ஆகாது.

அடுத்து முதலுதவி. பட்டாசு வெடிச்சு காயம்னா உடனே தண்ணி, அல்லது இன்க், இப்படி தேடி ஓடி கையில ஊத்திக்குவாங்க. அத செய்யவே செய்யாதிங்க. அது வெறும் தீக்காயங்களுக்கு செய்யறது.  பட்டாசால ஏற்படற காயங்கள் தீக்காயம் மட்டும் இல்லாம அது ஒரு கெமிக்கல் விபத்து. எதுவுமே பண்ணாம டாக்டர போய்ப் பாருங்க. அதுதான் நல்லது. இல்லன்னா இன்ஃபெக்‌ஷன் ஆகி செப்டிக் ஆக வாய்ப்பிருக்கு.

முடிஞ்சா துணில க்ளவுஸ் பயன்பாடு பெஸ்ட். நம்ம ஸ்கின் தான் நம்மளோட அடையாளம் அத ஒரு நாள் சந்தோஷத்துக்காக இழக்க வேண்டாமே. அதுவும் ஒரு நடிகனா தோல் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியும். பாதுகாப்பான தீபாவளிக்கு நல்வாழ்த்துகள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close