Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலியில் யார் நடிப்பு பெஸ்ட்..? அனுஷ்காவின் அசரடிக்கும் பதில்!​

பாகுபலி, ருத்ரமதேவிக்குப் பிறகு இஞ்சி இடுப்பழகி நடித்து முடித்து மறுபடி 'பாகுபலி-2'ல் இணையத் தயாராகிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

"இஞ்சி இடுப்பழகில என்ன ஸ்பெஷல்?"

"ம்ம்ம்... ரொம்ப சிம்பிளான கதைங்க. ஒரு சாதாரண பொண்ணு. ஆனா, கொஞ்சம் குண்டு. அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும். அப்போ நடக்கும் கலாட்டாவும், உணர்ச்சிகரமாக நடக்கும் போராட்டமும்தான் கதைங்க. இது கல்யாண வயசுல இருக்கும் எல்லா வீட்டுலயும் நடப்பதுதான். வெளி தோற்றத்தை வைச்சு ஒருத்தரை எடை போடாதீங்க என்பதை ஜாலியாக சொல்லி இருக்கிறோம். இயக்குநர் சொன்னதை நான் சரியாக செஞ்சு இருக்கேன்னு நினைக்கிறேன்."

"உடம்பை ஏத்தி குறைக்க கஷ்டமாக இல்லையா?"

"ரொம்ப கஷ்டப்பட்டேங்க. உடம்பை ஏத்துறது எனக்கு சுலபம். ஆனால், அதை குறைக்கதான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஜாலியாக சாப்பிட்டு அதுக்கு தகுந்த வொர்-அவுட் பண்ணி உடம்பை ஏத்திட்டேன். இப்ப குறைக்கதான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். இந்த அனுபவத்துல சொல்லலுறேன். எல்லாரும் டைமுக்கு சாப்பிட்டு ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை நல்லா வைச்சுக்கோங்க. அதுதான் நம்ப உடம்புக்கும் நம்ப வாழ்க்கைக்கும் நல்லது."

" உடம்பை ஏத்தினபோது எவ்வளவு கிலோ இருந்தீங்க?"

சின்னதாக ஜெர்க் ஆகிறார். "சொன்னால் சிரிக்க கூடாது. இந்த படத்திற்காக 70 கிலோவுக்கு மேல எடை போட்டேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சுட்டு இருக்கேன்."

"ஆர்யா ஸ்க்ரீன்ல தாண்டியும் ஹீரோயின்களை இம்ப்ரெஸ் பண்ணுவார்னு சொல்வாங்களே... உண்மையா?"

பலமாக சிரிக்கிறார் "அட... ஆமா. என்கிட்டயும் சொல்லி இருக்காங்க. ஆனால், ஏன் தெரியலை. ஆர்யா என்னை இம்ப்ரெஸ் பண்ண டிரை பண்ணலை. அது ஏன்னு அவர்கிட்ட தான் கேட்கணும். ஆனால், ஆர்யா பெஸ்ட்!’’

"சினிமாவுக்கு நீங்க நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு. இந்த 10 வருடங்களில் என்ன எல்லாம் கத்துக்கிட்டீங்க?"

"அய்யோ... நிறைய கத்துக்கிட்டேங்க. முக்கியமாக டைம் மேனேஜ்மென்ட். என் நேரம் என்கிட்ட இருப்பதே கிடையாது. அடுத்து டான்ஸ், பாட்டு நடிப்புனு நிறைய கத்துக்கிடேன். கொஞ்சம் நல்லா நடிக்கவும் கத்துகிட்டேன்னு நினைக்கறேன். முதல்ல நடிக்க வந்த போது, நடிப்புங்கறது சீரியஸான விஷயமானு தெரியாது. 'அருந்ததி' படம் பண்ணப்போ தான் ஒரு படத்தில் இருக்கும் மொத்த உழைப்பையும் கவனிக்க ஆரம்பிச்சேன். அதில் இருந்து சினிமா மேல் இருந்த வியப்பும் மரியாதையும் ரொம்பவே அதிகமாகிடுச்சு. நல்ல நல்ல வாய்ப்புகள், நல்ல படங்கள்னு நிறைய விஷயம் கிடைச்சது இந்த ட்ராவல இன்னும் அழகாக்கிடுச்சு."

'பாகுபலி' ஃபர்ஸ்ட் பார்ட்ல தமன்னா அதிக சீன்ல வந்தாங்க. அப்ப செகண்ட்ல பார்ட்ல நீங்க அதிக சீன் வருவீங்களா?"

"இதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். கண்டிப்பாக செகண்ட் பார்ட்ல நான்தான் அதிக சீன்ல வருவேன். டிசம்பர்ல ஷூட்டிங் தொடங்குது. இப்பவே அதுக்கு உண்டான வொர்க் அவுட் செய்ய ஆரம்பிச்சுட்டேன்."

"வரலாற்று படங்களில் நடிக்கும்போது நிறைய சிரமங்கள் இருக்குமே?"

"ஆமாங்க. நிறைய சிரமங்கள் இருந்தது. சண்டை போட கத்துக்கவேண்டி இருந்தது. குதிரையில ஏறி கம்பீரமாக சவாரி செய்யணும். நீங்க கொஞ்ச பயந்தாலும் குதிரை அதை உணர்ந்து கீழே தள்ளிவிட்டுடும். அதுனால, குதிரை ஏறும்போது பயப்படவே கூடாது. இப்படி பல சவால்கள். ஆனால், பாகுபலி முதல் பாகத்துல பல சீன் பல டேக் வாங்கினேன். ஆனால், அதை ஸ்கிரீன்ல பார்க்கும்போது செம ஹாப்பி.

"சரி, உண்மையை சொல்லணும்... 'பாகுபலி' படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னால யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?"


"சந்தேகமே வேண்டாம். ரம்யா கிருஷ்ணன் மேடம்தான் பெஸ்ட். கம்பீரமாக ரெண்டு குழந்தைங்களோட நடந்து வர ஒரு சீன் போதும். அதேபோல நாசர் சார், சத்தியராஜ் சார்னு எல்லாருமே பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் தான்."

"பிரபாஸ்க்கும் உங்களுக்கும் கல்யாணம்னு எல்லாம் பரபரப்பாக பேசினாங்களே?"

"ஹா... ஹா... ஆமாங்க. என்கிட்டயும் இதை சொன்னாங்க. யார் இப்படி கிசுகிசுவை கிளப்பிவிட்டாங்கனு தெரியலை. போதுவாக எல்லா ஹீரோயினுக்கும் உள்ள பிரச்னைதாங்க இது. ஏதாவது ஒரு ஹீரோ கூட நடிச்ச உடனே அவங்களுக்கும் இவங்களுக்கும் கல்யாணம்னு கிளப்பிவிட்டுறாங்க. அதை எல்லாம் கண்டுக்க கூடாதுங்க. நம்ப வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கணும்"

"உங்களுக்கு எப்போ கல்யாணம்?"

"என் வாழ்க்கையில எல்லாமே நடக்க வேண்டிய நேரத்துல சரியாக நடந்தது. அதேபோல கல்யாணமும் அந்த நேரத்துல சரியாக நடக்கும்னு நம்புறேன். கல்யாணம் எல்லாம் அதுவாகவே நடக்கும். நாம அதுக்குனு தனியாக சிரமப்பட வேண்டியது இல்லை."

"உங்க செல்லப் பெயர் என்ன?"

"ஸ்வீட்டி. எனக்கு நெருக்கமானவங்க இப்படித்தான் கூப்பிடுவாங்க. ஐ லைக் இட் "

"பிரச்னைகள் வந்தால் முதலில் செய்வது?"

"உடனே தூங்கிடுவேன். ஒரு நாள், ஒரு வாரம் கழிச்சு அந்த பிரச்னையே காணாம போயிடும்."

"உங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் தத்துவம் என்ன?"

"வாழு வாழ விடு."

"தமிழில் வந்த உங்களுக்கு மிகவும் பிடித்த படம்?"

"மெளன ராகம், புலி. இப்போ பார்க்கணும்னு நினைக்கும் படம் 'நானும் ரௌடி தான்'. டிரெய்லர் பார்த்தே ரொம்ப பிடிச்சிருந்தது"

-சிபிசக்கரவர்த்தி, ஜான்ஸன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close