Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷூட் தி குருவி எப்படி ஷூட் செய்தார்கள் தெரியுமா?

இன்றைய இளைஞர்களின் ஹாட் ப்ரேக் பாடல் ஷூட் தி குருவி. சித்தார் நடிக்கும் ஜில்ஜங்ஜக் படத்திற்காக அனிருத் குரலில் வெளியான பாடல் தான் இது. சல்மான் கான் யூடியூப்பில் வெளியிட்ட இப்பாடல், சில நாட்களிலேயே இணையத்தில் வைரல் ஹிட். இளசுகளின் மொபைலில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் இப்பாடலின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

“ஷூட் தி குருவி” பாட்டின் மேக்கிங் சீக்ரெட் என்னவென்று  இசையமைப்பாளர் விஷாலிடம் கேட்டோம், “சத்தியமா பாடல் இவ்வளவு ரீச்சாகும்னு எதிர்பார்க்கவே இல்லை. இந்த பாட்டு ஹிட் ஆனதுக்கு எதிர்பாராம நடந்த சின்ன சின்ன விஷயம் தான் காரணம், என்னன்னா...  

* பாடல் வித்தியாசமா இருக்கணும்னு யோசிச்சோம். அதுனால பாட்டு வரிகளை காமெடியா எழுதிவாங்கினோம். ஆனா விஷூவல் ரொம்ப சீரியஸா இருக்கும்.

* அனிருத் தான் பாடணும்னு ப்ளான். அவரு ரொம்ப பிஸி பாடமாட்டாருனு நினைச்சோம். சக இசையமைப்பாளர் உதவினு கேட்டா உடனே ஷாக்கிங் சர்ப்ரைஸா வந்து பாடிக்கொடுத்தார்

*சல்மான் கான் ரிலீஸ் பண்ணுவாருனு  டீம்ல யாருக்குமே தெரியாது. எங்களுக்கே தெரியாம சித்தார்த் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வந்து அதிர்ச்சிகொடுத்தார். 

* அனிருத்தோட டெடிக்கேஷன் தான் முக்கியமான காரணம். ஆனாலும் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தாலே செமஜாலியா இருக்கும். 10 நிமிடம் சீரியஸா பாடுவாரு. அடுத்து 2 நிமிடம் ரெஸ்ட். ஜாலியா பேசிட்டு கலாய்ச்சிட்டு இருப்பாரு. மறுபடியும் 10 நிமிஷம் பாடுவாரு, 2 நிமிஷம் ரெஸ்ட். இப்படியே தான் முழு பாடலும் ரெடி பண்ணோம்.

ஷூட் தி குருவி, டோமரு ரெண்டுமே வித்தியாசமா இருக்கு, அடுத்து என்ன பாட்டு?

சித்தார்த் எழுதி, பாடல் பாடவும் செய்யுறாரு. அப்புறம், சான்ரால்டனும் சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து ஒரு பாடல் பாடிருக்காங்க. அது இன்னும் வித்தியாசமா இருக்கும். சீக்கிரமாவே ரிலீஸ் பண்றோம், பின்றோம் பாஸ்!!

இப்போவர பாடல்களெல்லாம் கேட்க சூப்பர், ஆனா மனசுல நிக்கமாட்டேங்குதே பாஸ்?

உண்மைதான். படத்துக்கு என்னதேவையோ அத தான் பாடல்ல கொடுக்கவேண்டியிருக்கு. சூதுகவ்வும், ஆரண்யகாண்டம் ரெண்டு படமும் கலந்த கலவையா இந்தப்படம் இருக்கும். அதுனால பாடல்களெல்லாம் படத்தோட இணைந்து இருக்குற மாதிரி தான் இருக்கும். அடுத்தடுத்து பாட்டு வெளியாகும்போது நீங்க ஃபீல் பண்ணுவீங்க.

பி.எஸ். முத்து

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close