Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிமுருகனில் புகைபிடிக்காதது ஏன்? சிவகார்த்திகேயன் பேட்டி

டிசம்பர் 4 ஆம் தேதி ரஜினிமுருகன் திரைப்படம்  வெளியாவதையொட்டி அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி....

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் "ரஜினி முருகன்" திரைப்படத்தில் இடம் பெற்ற "என்னம்மா இப்படி பண்றீங்களே மா" பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள்  திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்  திரையரங்கிற்கு அழைத்து வருவதற்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன்  காட்சியமைத்து இருக்கிறோம்.
என்னுடன் இணைந்து  ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த விதமாக சந்தேகமும் இல்லை.

படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரைச் சுற்றி நடக்கும் குடும்ப  அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம். இந்தப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார் அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை.

இந்தப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமான தருணங்களை  நகைச்சுவையாகத் தந்துள்ளோம். படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் நாங்கள் நினைத்ததை  சிறப்பாகக் கொடுப்பதற்கு ஏற்ப சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்  மற்றும் படக்குழுவினர் சிறப்பாக அமைந்தனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

நான் முதலில் நடனம் தொலைக்காட்சிகளில் கற்றுக் கொண்டது தான் பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பை விட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது. இதே போல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன்.

நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்குப் பிடித்தவர் விக்ரம். அவரை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது, ஒரு நாள் நீ கதாநாயகனாக வருவாய் அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விக்ரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்கக் கேட்பேன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close