Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்?’’ பிரியா பவானிஷங்கரின் லவ் லைக்ஸ் யாருக்கு?

ல்யாணம் முதல் காதல் வரை சீரியல் ஹீரோயின் பிரியா பவானிஷங்கர் இப்போ கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஷோ விஜே. சீக்கிரமே அதில் போட்டியாளராகவும் கலந்து கொள்வார் போல. அந்தளவுக்கு துள்ளலும் துடிப்புமாக இருக்கிறார்.

என்ன பிரியா மீண்டும் விஜே?

”ஒரு நல்ல ஷோவுக்காக காத்துட்டு இருந்தேன். இப்போ அந்த வாய்ப்பு வந்துருக்கு. என் லைஃப் விஜே , நியூஸ் ரீடிங்ல தான் ஸ்டார்ட் ஆச்சு. அப்பறம் விஜய் டிவி கல்யாணம் டு காதல் சீரியல் ஹீரோயின். நடுவுல சில நிகழ்ச்சிகள் விஜே பண்ண வாய்ப்பு வந்துச்சு. இப்போ தான் சரியா அமைஞ்சிருக்கு!”

''உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க?’’

”இன்ஜினியரிங் படிச்சேன். அப்பா பேங்க்ல வேலை பண்றார். அம்மா ஹோம் மேக்கர். அண்ணா, அண்ணி என்னையும் சேர்த்து வீட்ல அஞ்சு பேரு. க்யூட், சிம்பிள் குடும்பம். நான் கடைக்குட்டி. அதனால ரொம்பவே செல்லம்!”

விஜய் டிவி விருது வாங்கியபோது

அப்பா, அம்மா, அண்ணன், அண்ணியுடன் பிரியா பவானிஷங்கர் 

’’பிரியாவோட கிரேஸ் எது?’’

”ஷாப்பிங். எவ்ளோ ட்ரஸ் எடுத்தாலும் பத்தாது. நிறைய ஷாப்பிங் பண்ணுவேன். அப்புறம் என்ன நடந்தாலும் கவலைப்பட்டுக்க மாட்டேன்! ஏன்னா, வாழ்க்கைல ஒரு நாள் அனுபவிக்கக் கிடைச்சிருக்கு. அதை சிம்பிளா, சந்தோஷமா அனுபவிச்சு வாழ்ற கேரக்டர். அடுத்த நாளுக்குன்னு திட்டமிட்டு அதை சிக்கலாக்கிக்க மாட்டேன். ரொம்ப பிராக்டிகல்!”

’’சினிமா ஹீரோயின் சான்ஸ் வந்தா..?”

’’நடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, வழக்கமான பதில்தான்... வாய்ப்பு, கேரக்டர் பொறுத்துதான் ஓ.கே. சொல்லுவேன்!”

’’பிடிச்ச நடிகை யாரு?’’

’’நயன்தாரா... அவங்க ஆக்டிங், ஆட்டிடியூட், ஸ்டைல் எல்லாமே பிடிக்கும்..!’’

’’பிடிச்ச ஹீரோ?’’

’’மேடி... மாதவனை அவ்ளோ பிடிக்கும்!’’

’’பிடிச்ச விஜே?’’

”பெர்சனலா எனக்கு பாவனா நல்ல ஃப்ரெண்ட். நல்ல விஜே. எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நிறைய சொல்லிக் கொடுத்துருக்காங்க. அவங்களை ரொம்ப லவ் பண்றேன்னு கூட சொல்லலாம். I love that kind heart. அவங்கள மாதிரி ஒரு நல்ல மனுஷியா இருக்கணும்னு விரும்புறேன்!’’

’’உங்க காதலன் எப்படி இருக்கணும்?’’

’’எந்தக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. எதிர்பார்ப்பு இல்லாத பந்தம்தான் கடைசி வரைக்கும் நிலைச்சிருக்கும். காதல், கல்யாணம் ரெண்டுக்கும் இது பொருந்தும்... லவ் ஒரு நல்ல ஃபீல் அத ஃபீல் பண்ணணும்! என்னை மாதிரியே சிம்பிளா, எனக்கு நல்ல ஃப்ரெண்டா இருக்கணும். அப்புறம் அடுத்த கேள்வி என்னனு எனக்குத் தெரியும். நானே பதில் சொல்லிடுறேன். கல்யாணம் இப்போதைக்கு இல்லை. ஃபிக்ஸ் ஆனதும் நானே சொல்லிடுறேன்!’’

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close