Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’கமலை டப்ஸ்மாஷ் செய்து ரஜினிக்கு அனுப்பினேன்!’’ - உலக நாயகனின் கலக ரசிகன்

பாபநாசம், உன்னைப் போல் ஒருவன் படங்களின் கமல் காட்சிகளை டப்ஷ்மாஸ் செய்து இணையத்தில் பிரபலமானவர் ராகுல் கண்ணன். ப்ரோ என்ன பண்ணிட்டு இருக்கார் என விசாரணையைப் போட்டதில்...

’’நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர் பாஸ். சொந்த ஊர் மதுரை. இப்போ சென்னைல ஐ.டி-ல வேலை பார்க்கிறேன். டப்ஷ்மாஸ் ஆப்ஸ் வந்த புதுசுல பொழுது போகாம நானும் சில வீடியோக்களை செஞ்சு விட்டேன். ஒரு பய கண்டுக்கல. வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து ஒரு காட்சியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செஞ்சேன். வழக்கம்போல இதுவும் மொக்க வாங்கும்னு நினைச்சா அது சூப்பர் ஹிட்டாகிடுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ ஹாலிவுட் ஜோக்கர் படத்திலிருந்து அந்த கெட்டப்பை அப்படியே போட்டு மிரட்டலா ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் ஏத்தி விட்டேன். நிறைய பாராட்டுக்கள். அப்போதான் எனக்கே என்மேல நம்பிக்கை வந்துச்சு.

ஒரே ஷாட்ல எங்கேயும் கட் இல்லாம ஒரு வீடியோ பண்ணேன்டான்னு மூளை முணுமுணுக்க பாபநாசம் க்ளைமாக்ஸ் வசனத்தை எழுதி வெச்சு மூனு நாளா வரி விடாம மனப்பாடம் பண்ணி மண்டைக்குள்ளே ஏத்தினேன். லேப்டாப்பில் ஒரிஜினல் வீடியோவை ப்ளே பண்ணி திரும்பத் திரும்ப பேச இருபதாவது டேக்கில் ஒகே ஆச்சு. அதேமாதிரி உன்னைப்போல் ஒருவன் மொட்டை மாடி சீன் பண்ணும்போது லிப் சின்க்  பக்காவா வர மெனக்கெட்டேன். இன்னைக்கு சமூக வலைதளங்களில் என்  வீடியோக்கள் பயங்கர வைரலாகிட்டு இருக்கு. அதுக்கெல்லாம் காரணம் பேஜ் அட்மின்ஸ்தான். அவங்கதான் என் வீடியோக்களை ஷேர் பண்ணி பரப்புறாங்க. இன்னொரு காரணம் மியூஸிக் டைரக்டர் ஜிப்ரான். அவர் பேஜ்ல ஷேர் பண்ண பெரிய ரீச் கிடைச்சது.

இது தவிர நானே ரஜினி, விஜய், ஸ்ருதி ஹாசன், குஷ்பு, இவங்களுடைய ட்விட்டர் அக்கவுண்டுக்கும் வீடியோ லிங்க் அனுப்பி வெச்சிருக்கேன் அவங்க யாராவது பார்த்தா சினிமாவில் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நம்பறேன். அவங்க பார்க்கிறவரை நான் விடப்போறதில்ல தொடர்ந்து அனுப்பிக்கிட்டே இருப்பேன்.

எல்லாரும் என்கிட்டே கேக்குற ஒரே கேள்வி ஏன் தொடர்ந்து கமல் படங்களை மட்டுமே டப்ஷ்மாஸ் பண்றீங்கன்னுதான். அதுக்கு காரணம் நான் கமலின் வெறிப்பிடிச்ச ரசிகன். அதுக்காக தொடர்ந்து அவர் மாதிரியே பண்ணமாட்டேன். என் சொந்த குரல்லேயும் இனி பண்ணப்போறேன். இப்போ விகடனுக்காக எக்ஸ்க்ளூசிவ்வா ’பஞ்சதந்திரம்’ டப்ஸ்மாஷ் பண்ணிருக்கேன் அதை மிஸ் பாருங்க...!’’ என்று தம்ஸ்-அப்புகிறார் ராகுல் கண்ணன்.

- ஜுல்ஃபி 

ராகுல் கண்ணனின் சில ஹிட் டப்ஸ்மாஷ்கள்

பஞ்சதந்திரம் டப்ஸ்மாஷ் 

உன்னைப் போல் ஒருவன் டப்ஸ்மாஷ்   

பாபநாசம் டப்ஸ்மாஷ்

எடிட்டர் சாய்ஸ்

[X] Close