Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்க்கு எக்ஸ்ட்ரா லைக், தனுஷ் செம கெத்து - DD குஷி பேட்டி!

ளையராஜா , மாதவன் என அடுத்தடுத்த ஹிட் பேட்டிகள். கால் இன்னும் முழுமையாக சரியாகாவிட்டாலும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு தான் சேகரித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆர்வமாய் காட்டுகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக சின்னத்திரையின் நம்பர் ஒன் தொகுப்பாளினி.

‘இது பல்லாங்குழி, எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஜப்பான்லதான் உலகத்தின் உயரமான புத்தர் சிலை இருக்கு, இது அங்கிருந்து கோகுல் எனக்கு வாங்கிட்டு வந்த புத்தா. இதுல ஃபாரின் காய்ன்ஸெல்லாம் வெச்சிருக்கேன். இங்க்லீஷ் லிட்ரேச்சர் படிக்கறப்ப ஷேக்ஸ்பியர் பொறந்த ஊர் Stratford-upon-Avonக்கு போகணும்னு ஆசை. லண்டன்ல இருந்து அஞ்சு மணிநேர டிராவல். நான் போனதிலயே எனக்குப் பிடிச்ச ஊரு. அங்க போய் வாங்கினதுதான் அவரோட இந்தப் பெய்ண்ட்டிங்ஸ், அவரோட கவிதைகள், பேனான்னு இதை ஷேக்ஸ்பியர் கார்னர்னே வெச்சிருக்கேன். இது மோனாலிஸா பார்க்கப் போனப்ப வாங்கினது” என்று அவரது கலெக்‌ஷன் ஒவ்வொன்றையும் கண்கள் விரிய விளக்குகிறார்.

உற்சாகத்தின் ஊற்றாக இருக்கும் அவரிடம் ‘கால் இன்னும் முழுசா சரியாகலைல்ல.. உட்காருங்க’ என்றபடி கேட்டோம்:

“இந்தக் காலை வச்சுகிட்டு, மழைவெள்ளத்துல இறங்கி நிறைய ஹெல்ப் பண்ணீங்களாமே?”

“இந்தக் காலை வச்சுகிட்டு வொர்க் பண்ணிட்டாலும்... தனுஷ் சாரும் அவரோட டீமும்தான் செமயா வொர்க் பண்ணாங்க. நான் அவங்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செஞ்சு கொடுத்தேன். அவ்ளோதான். தனுஷ்தான் ஆக்டிவா எல்லா வேலைகளையும் முன்னால நின்னு செஞ்சார். அவரோட ஆபீஸே குடோன் மாதிரிதான் இருந்துது. அவரோட பேருக்காகதான் எல்லோரும் வந்தாங்க, நிறைய உதவிகள் வந்துது. நம்ம பேருக்காக மட்டுமே இவ்ளோ உதவிகள் வருதுன்னா அதை மிகச்சரியா பயன்படுத்தணும்னு பொறுப்பா பண்ணவேண்டியிருந்துது.அவரால ரொம்ப டென்ஷன் எங்களுக்குதான்.. 'சார் நீங்க கொஞ்சநேரம் சும்மா இருங்க சார்.. உங்களை பார்க்க ஆட்கள் கூடிட்டா டென்ஷன் ஆகிடும்'னு சொல்லி அவரை ஒரு இடத்துல இருக்க வைக்கத்தான் ரொம்ப கஷ்டபட்டோம். அவர் என்னடானா திடீர்னு மூட்டைய தூக்குறாரு, திடீர்னு அவரே பார்சலை பிரிக்கறது, அடுக்கி வைக்கறது, உதவிகளுக்கு ஏற்பாடு பண்றதுன்னு துறுதுறுனு செம கெத்தா எறங்கி வேலை செஞ்சுட்டிருந்தார். அவ்ளோவும் பண்ணிட்டு அவரோ, அவருடைய நண்பர்களோ எதுவும் எங்கேயும் அதப்பத்திப் பேசல”

“நீங்க பாடமெல்லாம் எடுத்தீங்களே.. டீச்சர் டிடி பத்தி சொல்லுங்க?”


நான் படிச்சது டூரிசம் மேனேஜ்மென்ட், அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல கொஞ்சநாள் லெக்சரரா இருந்தேன். அங்கே வேலை பார்த்த அந்த நாட்கள் என் வாழ்க்கையின் மிகமுக்கியமான காலகட்டம். எக்ஸாம் டைம்லதான் ரொம்ப டென்ஷனாஇருக்கும் பசங்க படிக்கவே மாட்டாங்க கூலா இருப்பாங்க, கண்ணுங்களா படிங்கடானு கெஞ்சுவேன்... ம்ம் எதுவும் நடக்காது. ஆனா ரொம்ப அருமையான பசங்க... இப்ப வரைக்கும் அவங்க என்னோட கான்டாக்ட்ல இருக்காங்க அப்புறம் நான் ரொம்ப ஸ்ட்ரிக்டான டீச்சர் கிடையாது, ஆனா ஹானஸ்டான டீச்சர், கிளாஸ் புடிக்கலையா என்ட்ட சொல்லிட்டு தூங்கு இல்ல வெளியே போ அவ்ளோதான். மாணவர்களுக்கு உரிய சுதந்திரத்தை கொடுத்தா அவங்க சிறப்பா வருவாங்க

“ரஜினின்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியும்., கமல் பத்தியும் பேசிட்டீங்க.. அஜித் - விஜய்?”

இதை மொதல்ல சொல்லிடறேன், ரெண்டு பேருமே பெஸ்ட். எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். ஆனா  விஜய் சார்னா ஒரு எக்ஸ்ட்ரா லைக். ஏன்னா, அவரோட டான்ஸ். டான்ஸ்ல அவர் பண்ற குட்டி குட்டி எக்ஸ்ப்ரஷன்ஸ். நீங்க விஜய் சாரோட எந்த ஒரு பாட்டைச் சொன்னாலும், அதுல ஏதோ ஒரு வரில அவரோட எக்ஸ்ப்ரஷன் டக்னு நான் சொல்லீடுவேன். அண்டார்டிக்கா பாட்ல, பாலை வெச்சுட்டு அவர் காட்ற ஒரு எக்ஸ்ப்ரஷன், மதுரைக்குப் போகாதடில மஞ்ச சட்ட போட்டுட்டு வர்றப்ப... ஒரு ஃபேன் மொமெண்ட் குடுக்கறதுல விஜய்சார்தான் பெஸ்ட். கத்தி படம் பார்த்துட்டிருந்தோம், இண்டர்வெல்ல ஐ’ம் வெய்ட்டிங்னு சொல்லுவார் பாருங்க. நான் சேரை விட்டு குதிச்சு கத்தி ரகளை பண்ணி.. பக்கத்துல இருக்கறவங்கள்லாம் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்டர்ங்கறத தாண்டி அவரை ஹீரோவா ரொம்ப ரசிப்பேன்.

 “பேட்டிகள் எடுக்கறப்ப மொதல்லயே ப்ரிப்பேர் பண்ணிக்குவீங்களா?”

சிரிக்கிறார். ‘பண்ணுவேன். ஆனா ப்ரிப்பேர் பண்ணினத யூஸ் பண்ணினதே இல்ல. ஆன் தி ஸ்பாட் தோண்றத கேட்கறதுதான். ராப்பிட் ரவுண்ட்ஸ்கெல்லாம் எழுதி வெச்சத கேப்போம், ஆனா ஜெனரலா கேட்கறது என்னதான் ப்ரிப்பேர் பண்ணினாலும், செட்ல அவங்க மூடுக்குத் தகுந்த மாதிரி, டக்னு கேக்கறதுதான் எனக்கு அமையுது”

“காதல்?”

என்னோட லவ் ரொம்ப ஷார்ட்டஸ்ட்டுங்க. நீளமான காதல் வாழ்க்கை இருந்திருந்தா ரொம்ப நல்லாருந்துருக்கும், நானும் ஸ்ரீகாந்த்தும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவ்ளோ புரிதல் எங்களுக்குள்ள. லவ் பண்ணலாமான்னு பேசிக்கவும் இல்ல, கேட்கவும் இல்ல, டைரக்டா கல்யாணம் பண்ணிக்கலாமானுதான் பேசினோம். நானும் நீயும் பல வருஷ நண்பர்கள், எப்படி கல்யாணம் முடியும்னு ரெண்டு மூணு வார யோசனை.. நட்பா இருக்குற ஒருத்தரை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்னு குழப்பம், நான் வேற நிறைய ரொமான்டிக்கான பொண்ணு, ஆனா என் வாழ்க்கைல லவ்தான் நடக்கவே இல்ல.. சரி ஓகே, வீட்ல சொல்லிப்பாக்கலாம், அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா அந்த காதலை அப்படியே விட்ரலாம்னுதான் யோசிச்சோம். ஏன்னா இது அமரகாவிய காதல்லாம் இல்ல, 'என்னய்யா நம்மள யாருமே லவ்பண்ணமாட்றாங்க பேசாம நாமளே கல்யாணம் பண்ணிப்போமா' மாதிரிதான்... அவர்தான் சொன்னாரு நாம இரண்டுபேரும் சூப்பர் மேட்ச்சா இருப்போம்னு, வீட்ல சொன்னா அவங்க ரொம்ப குஷி ஆகிட்டாங்க,, விதவிதமா பலவிதமா ஓக்கே சொல்றாங்க. ஓகே சொன்னதும் ஒரே மாசத்துல கல்யாணம், அந்த ஒருமாசம்கூட ரொம்ப பிஸி... அதனால நிறைய நண்பர்களை அழைக்க கூட முடியாம போய்டுச்சு...


“இப்ப இருக்கற தொகுப்பாளர்கள்ல உங்களுக்குப் பிடிச்சது யார்?”

“ஹல்லோ என்னங்க அப்ப நான் இப்ப இல்லையா? நானும்தாங்க ஆங்கரா இருக்கேன்’ என்று செல்லமாய்க் கோபப்பட்டவர் ‘கோபி அண்ணாதான். எங்க தல’ என்கிறார்.

“சமீபத்துல பார்த்து, பிடிச்ச படம்?”

“இறுதிச்சுற்று”

”நீங்க பத்திரமா வெச்சிருக்கற கிஃப்ட்?

“என்னவர் குடுத்த வாட்ச். அப்பறம் எங்கப்பா, நான் ஆறோ, எட்டோ மாசக் குழந்தையா இருக்கறப்ப ஒரு ஃப்ராக் அவரே தைச்சு போட்டுவிட்டார். குட்டியூண்டா இருக்கும். அதை பத்திரமா வெச்சிருக்கேன். எனக்குக் குட்டிப் பாப்பா பொறந்ததும் போடணும்”

சந்திப்பு: அதிஷா /  எழுத்து: பரிசல் கிருஷ்ணா படங்கள்: ஜெ.வெங்கடராஜ்

க்யூட் டிடி யின் ஸ்பெஷல் ஆல்பத்திற்கு: http://bit.ly/1PMhpnf

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close