Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ லவ் யூ சொன்னதே மறந்து போச்சாம்..! நம்பலாமா..?? அமித் பார்கவ் ஜாலி பேட்டி!

கொஞ்சம் பொறுப்பான பையன், அதீத சீரியஸ் இப்படி கல்யாணம் முதல் காதல் வரை அமித் பார்கவ்க்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம்.

ஹெல்லோ அமித், நீங்க லா படிச்சிருக்கீங்களாமே?

”ஆமா!... சொந்த ஊரு பெங்களூரு, பிறந்தது மட்டும் மைசூர். அம்மா , அப்பா, அண்ணா ரொம்ப குட்டியான, ஜாலியான ஃபேமிலி, லா படிச்சுட்டு அடுத்து என்ன அப்படின்னு யோசிக்கும் போதே எனக்கு தமிழ் சினிமா மேல ஒருவிதமான காதல்னு கூட சொல்லலாம். அப்படி ஒரு ஈர்ப்பு. நடிகனா மாறினா இங்கதான் நடிகனாகணும்னு ஒரு வெறியோட வந்தேன். கன்னடத்துல இராமாயணம் சீரியல் பண்ணேன் அதுல நான் தான் ராமனா நடிச்சேன்.அப்பறம் இப்போ தமிழ் சினிமா , டிவி தான்!”

உலகத்துல எத்தனையோ மொழி சினிமாக்கள் இருந்தும் நீங்க ஏன் தமிழ் மொழிய தேர்ந்தெடுத்தீங்க?

“ அதுக்குக் காரணம் தமிழ் சினிமாக்கள். நிறைய படங்கள் பாலிவுட் தாண்டி, கன்னடம் தாண்டி ரொம்ப நல்ல படங்கள் தமிழ்ல தான் குடுக்கறாங்க. சொல்லப்போனா, தமிழ் சினிமாக்கள் தான் ஒரு வடிவமைப்போட இருக்கு. தமிழ் சினிமா நடிக்க மட்டும் இல்ல, தமிழ் பேசணும்ங்கற ஆசையையும் கூட குடுத்துச்சு. நான் 2012ல தான் தமிழ் நாட்டுக்கே  வந்தேன். ரொம்ப ஆர்வமா தமிழ் கத்துக்கிட்டேன். இப்போ எழுத, படிக்கக் கூடத் தெரியும், நினைச்சாலே பெருமையா இருக்கு!”

சென்னை எப்படி இருக்கு?

” சென்னை வந்தா செம பிஸியா, கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்கக் கூடாதுன்னு கனவுகளோட வந்தேன். அது இப்போ வரைக்கும் நினைச்ச மாதிரியே நடந்துகிட்டு இருக்கு. அப்பப்போ சின்னச் சின்ன ரோல் சினிமாக்கள்ல பண்றேன். 2 ஸ்டேட்ஸ், என்னை அறிந்தால், என்னமோ ஏதோ, மிருதன் இப்படி. அப்பறம் விஜய் டிவி சீரியல்!”

சீரியல் சின்னத்திரை இந்த வாழ்க்கை எப்படி இருக்கு?

“ சத்தியமா என்னால நம்பவே முடியாத ஒரு ரீச். ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா இப்படி உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் சீரியல் பேரெல்லாம் சொல்லி, என்னோட கேரக்டர் பேரெல்லாம் சொல்லி பாராட்டுறாங்க.. சான்ஸே இல்ல. உண்மைய சொன்னா. சீரியல் அப்படின்ன உடனே முதல்ல யோசிச்சேன். இப்போ நல்லவேளை ஒத்துக்கிட்டேன்னு தோணுது!”

பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் ?

”கமல் சார், ஸ்ரீதேவி, என்ன ஒரு ஜோடி அவங்க. இப்போ விஜய் சேதுபதி, ஹீரோயின் பார்வதி, அவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”

அப்பறம் விரைவில் உங்களுக்குத் திருமணம்னு கேள்விப்பட்டோமே?

“ ஆமா... அவங்க பேரு ஸ்ரீரஞ்சனி. திருநெல்வேலிக்காரங்க... எங்க காதலுக்கு எந்த வித பிரச்னையும் இல்லாம, நாங்களே என்ன இவ்ளோ சுமூகமா முடிஞ்சுடுச்சுன்னு நெனக்கற  ரேஞ்சுக்கு உடனே ஒத்துக்கிட்டாங்க!”

யாரு காதல முதல்ல சொன்னீங்க?

” ‘ஐ லவ் யூ’னு நாங்க சொல்லிக்கவே இல்ல, ரெண்டு பேருக்குமே புரிஞ்சது,ஆனா எங்க எப்படி சொல்லிக்கிட்டோம்னு இப்ப வரைக்கும் தெரியவே இல்லைங்கறதுதான் உண்மை. அவங்க செம ஸ்மார்ட். எல்லார் கிட்டயும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா, ஜாலியா பேசுவாங்க. நான் அப்படியே எதிர்மறையான ஆளு. க்ரியேட்டிவ்வா வேலை செய்வாங்க. ரெண்டு பேருமே மீடியா அதனால எங்களுக்குள்ள பொஸஸ்ஸிவ் காரணமான சண்டை வராது!”

கல்யாணம் எப்போ? கல்யாணத்துக்கு அப்பறம் உங்க கெட்ட பழக்கம் எதையாவது விடணும்னு ஐடியா இருக்கா?

“ கல்யாணம் ஜூன் மாசம். ரெண்டு பேருமே பிராமின்ங்கறதுனால சம்பிரதாய முறைகள்ல பெரிசா வித்யாசமில்லாம சாதாரண பிராமின் ஸ்டைல் கல்யாணம். பெங்களூருல ஒரு ரிசெப்ஷன் இருக்கும். ஆங்... என் கிட்ட விடற அளவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. தண்ணி தம்மு எதும் கிடையாது. இன்னொன்னு ஸ்ரீ கூட இருந்தாலே நான் ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன். ரெண்டு பேருக்கும் குடும்பம் தான் ஸ்பெஷல்.அதனால செம ஹேப்பி!”

கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு... இருந்தாலும் நாங்க சும்மா விட மாட்டோம் உங்க பழைய புரபோசல்கள் பத்தி சொல்லுங்களேன்?

“ ஹா..ஹா... நிறைய வந்துருக்கு. ஆனா ஒரு தடவ ஒரு பொண்ணு ரத்தத்துல என்னோட பேரெழுதி ஃபேஸ்புக் இன்பாக்ஸ்ல போட்ருந்தாங்க. நான் ஷாக் ஆகிட்டேன். அப்பறம் அவங்களுக்கு அட்வைஸ் பண்ணி, எஸ்கேப் ஆகறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு!”

சீரியல் நடிகர்கள் விஜே ஆகுறாங்களே? உங்களுக்கு ஆர்வம் இல்லையா?

“ என் தமிழ் இருக்கற நிலமைக்கு இது வேறயா... எனக்கு மொழி ஃப்ளோ வராது. ஆனாலும் எனக்கு கோபி அண்ணா, பாவனா ரெண்டு பேரோட ஹோஸ்டிங் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஜெனியூனா இருக்கும். அவங்கள மாதிரி முதல்ல பேச கத்துக்கறேன் அப்பறம் விஜே பத்தி யோசிக்கலாம்!”

சூப்பர் சீரியல் அதுவும் நீங்க எதிர்பார்த்த டைம்ல, அதே சமயம் ஒரு படம் வருது எதுக்கு ஓகே சொல்லுவீங்க?

“கண்டிப்பா சினிமா தான். அதுக்குத்தான போராடிக்கிட்டு இருக்கோம். சான்ஸ விட முடியுமா!”

சென்னைல பிடிச்ச இடம் எது?

“ நிறைய நினைவுகளோட இப்பவும் எப்பவும் என்னை இழுக்கற இடம் பெசன்ட் நகர் பீச். நிறைய ரொமாண்டிக் கதைகள் இருக்கு. ஸ்ரீக்கும் ரொம்பப் பிடிச்ச இடம் பெசண்ட் நகர் பீச் தான்!”

அட்வான்ஸ் வாழ்த்துகள் அமித் பார்கவ்! 

- ஷாலினி நியூட்டன் - 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close