Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்தால் என்னவாகும்? - கமல்ஹாசன் பேட்டி

“இதுவரை செய்த சாதனைக்காக இந்த விருதைப் பெற்றதாக நினைக்கவில்லை. இனி செய்யவேண்டியவை நிறைய இருப்பதற்காகவே இவ்விருதைப் பெற்றதாக நினைக்கிறேன்” என்று பிரான்ஸ் நாட்டின் ஹன்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்ற பிறகு கமல் கூறிய வார்த்தைகள் இவை. 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய திரையுலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் “ஹன்றி லாங்லாயிஸ்” திரைப்பட விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவைத் தொடர்ந்து பாரிஸ் பத்திரிகை ஒன்றிற்கு  அளித்த பேட்டியிலிருந்து சில கேள்விகளும், உலகநாயகனின் பதில்களும் இங்கே,

இந்த விருதுபற்றி உங்களின் கருத்து ?

இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் கலைஞர் நான் என்பதால்  பல கலைஞர்களின் சார்பில் தான் இந்த விருதை பெற்றுக்கொள்கிறேன். சார்லிசாப்ளின் உள்ளிட்ட பல கலைஞர்கள் பெற்ற இவ்விருது பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கக் காத்திருப்பதாக முன்னரே சொல்லிருக்கிறீர்கள். அது எப்போது சாத்தியமாகும்?

இனிமே எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. நல்ல நடிகர்கள் மணிரத்னத்திற்கும், நல்ல கதைகள் எனக்கும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அவரும், நானும் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறோம். எங்களிடமிருந்து ரெட்டிப்புப் படங்களாக வரட்டுமே. நாங்கள் இணையும் காலம் வரும்போது இணைந்து செயல்படுவோம்.

ரஜினிகாந்தும் நீங்களும் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா?

நானும், ரஜினியும் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டால், படமெடுக்கக் காசு இருக்காது. அந்த ஒரு காரணத்தினால் தான் நாங்கள் இருவரும் நடிக்காமல் இருக்கிறோம். தனித்தனியாக நடிக்க தொடங்கியதற்கும் இது தான் காரணம்.

உங்களின் கனவுப்படம் “மருதநாயகம்” பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறதே?

எல்லோருக்குமே மருதநாயகம் மேல் ஆர்வம் அதிகரித்துவிட்டது. பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் அதைப்பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை பொறுமையாக இருந்த எனக்கு இன்னும் சற்று பொறுமை காப்பது பெரிய விஷயமல்ல.

உங்களின் அடுத்தபடம்?

என் மகள் ஸ்ருதியுடன் நான் நடிக்கும் முதல் படம். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது.

முழுமையான வீடியோ நேர்காணலுக்கு:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close