Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் ‘சொல்வதெல்லாம் உண்மை’யில் லட்சுமி ராமகிருஷ்ணன். என்ன நடந்தது...?

மீண்டும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்....கொஞ்சம் பரபரப்பாகி என்ன திரும்ப இந்தப் பக்கம் என்றதும் பூரிப்புடன் பேச ஆரம்பித்தார்

"முதல்ல நான் ஒரு விஷயம் சொல்லணும்...இந்த ஷோன்னால நிறைய பிரச்னைகள், அதெல்லாம் தாண்டி திரும்ப இந்த ஷோ பண்றேனு சொன்னோன சேனல்ல ரொம்ப ஹேப்பியாகிட்டாங்க. உங்களுக்கே தெரியும் அந்த ஒரு வார்த்தை எவ்ளோ பிரச்னைகள், சர்ச்சைகள். ஆனால் சின்னச் சின்ன விஷயங்கள் மட்டும் பேசிக்க வேண்டியிருந்துச்சு. நானும் சேனலும் கலந்து பேசினோம் இப்போ மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை.

நீங்க இல்லாம ஷோ கொஞ்சம் பின் வாங்கினதா மக்கள் கிட்ட ஒரு கருத்து இருக்கே?

“அத நம்ம சொல்ல முடியாது....சுதாவும் இந்த ஷோவுக்கு சரியான தேர்வு. அவங்களும் வாழ்க்கைல நிறைய சவால்கள், கஷ்டங்கள கடந்து  சாதிச்ச பெண்மணி... ரொம்ப நல்லா ஹோஸ்ட் 

பண்ணாங்க இந்த ஷோவ. ஒவ்வொருத்தர் கிட்ட ஒவ்வொரு திறமை இருக்கும்.. அந்த மாதிரி தான் இத நான் பார்க்கறேன்.. ஒருவேளை 700 எபிசோட் என்னை மக்கள் பாத்துருக்காங்க.. அதனால நான் நல்லா பண்ணதா மக்கள் நினைச்சிருக்கலாம்!” இனிமே என்ன ஸ்பெஷல்... பொதுப் பிரச்னைகள் பத்தி பேசுவீங்களா? “கண்டிப்பா விழிப்புணர்வுகள் நிறைய குடுக்கணும், பெண்கள் சார்ந்த சில விஷயங்கள் பண்ணணும்... ஆனால் இத விட  இந்த நிகழ்ச்சியோட மிகப்பெரிய வியூவர்ஸ் யாருன்னா கிராமத்து மக்கள் தான்....இன்னிக்கு குடும்பத்துல நடக்குற கணவன் மனைவி சண்டைகள் பத்தி பேசுறோம் அல்லது ஒரு குழந்தைக்கு நடக்குற பாலியல் பிரச்னைகளப் பேசுறோம், தவறான உறவு பத்திப் பேசுறோம், குடிக்குப் அடிமையான மனிதர் பத்திப் பேசுறோம் இதெல்லாமே ஒரு குடும்பத்தோட பிரச்னை தான் ஆனா பொதுவான பிரச்னை. இன்னிக்கு இதெல்லாம் பல குடும்பங்கள்ல நடந்துட்டு தான் இருக்கு.இதப் பத்தின விழிப்புணர்வு கண்டிப்பா கிராமத்து மக்களுக்குத் தேவைப்படுது!”

இந்த நிகழ்ச்சி மக்களை தவறான பாதைக்குக் கொண்டு போறதாவும் ஒரு டாக் இருக்கே?

” எல்லா விஷயத்துக்குமே ரெண்டு சைட் இருக்கு. என்னையே எடுத்துக்கங்க, நான் ஒரு சின்ன டவுன்ல இருந்து வந்தேன். எனக்கே இந்த கள்ளத்தொடர்பு, தவறான உறவுகள் இதெல்லாம் வெச்சு ஒரு ஷோன்னு சொன்னோன யோசிச்சேன்....எந்த விஷயமும் நாம எப்படி எடுத்துக்கறோம்னு இருக்கு. நிறைய பெண்கள் என் கிட்டயே நாங்க எங்க வீட்டுக் குழந்தைகள் இந்த ஷோ பார்க்க வைக்கிறோம்னு சொல்லியிருக்காங்க. இன்னிக்கு உலகத்துல இருக்க அவ்ளோ ஆபத்துகள தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.. அந்தக் கால வாழ்க்கை வேற.. இன்னிக்கு எத்தனையோ குடும்பங்கள், எத்தனையோ பெண்கள் இந்த நிகழ்ச்சி மூலமா நல்ல வாழ்க்கை கிடைச்சு நல்லா இருக்காங்க.. நாம தவறான கண்ணோட்டத்துல பார்க்காம இருந்தாலே நடக்குற நல்ல விஷயங்கள் கண்ணுக்குத் தெரியும்!”

டி.ஆர்.பி ரேட்டிங், சேனல் பப்ளிசிட்டின்னு இப்போ ஆளாளுக்கு எந்த ஷோ பண்ணாலும் திட்றாங்களே? உங்களுக்கு அதிகமாவே வந்துருக்குமே?

“ முதல்ல ஒரு விஷயத்த நான் தெளிவுபடுத்த விரும்பறேன்...ஜி தமிழ் ட்ரஸ்ட் இல்ல, சேனல். ரேட்டிங், போட்டிகள், மத்த சேனல்களோட ஆதிக்கம் இப்படி எல்லாமே இருக்கு.. எல்லாத்தும் மேல சக மனிதர்கள் அங்க வேலை செய்யறாங்க. அவங்களுக்கும் சம்பளம், போனஸ், இதுக்கெல்லாம் விளம்பரம் வேணும், ஸ்பான்சர் வரணும்... அதெல்லாம் பார்க்காம செய்யணும்னா முடியுமா சொல்லுங்க.. பிராக்டிகலா பார்க்கணும்ல.. சேவைன்னா அப்போ ஹாஸ்பிடல்லாம் ஃப்ரீயா நடத்தணும்ல... எல்லாமே தொழில் தான். ஏன் நானும் சம்பளம் வாங்கிட்டு தான் இந்த ஷோ பண்றேன். நான் எடுத்த ’ஆரோகணம்’ படம் பத்தி எல்லாரும் பாராட்டினாங்க... ஆனா படம் வந்தப்ப எத்தனை பேரு பார்த்தாங்க... ஏன்னா படத்துல கமர்ஷியல், கலர்ஃபுல் இல்லை. அப்போ ஒரு நல்ல விஷயத்த சொல்லக் கூட ஒரு ஈர்ப்பு தேவைப்படுது. அந்த ஈர்ப்பு தான் ஷோ புரமோஷன், சில எமோஷனல் காட்சிகள் போட்டுக் காட்றது.. ஆனா நாம பண்றதுல நேர்மையிருக்காங்கறதுதான் முக்கியம். அத சரியா பண்றோம்... இந்த நிகழ்ச்சி மூலமா எவ்வளவோ மக்களுக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்கு!”

என்ன மாற்றம் இருக்கும் நிகழ்ச்சியில?

“நிகழ்ச்சிக்கு வர விமர்சனங்கள இன்னும் நல்ல முறைல கவனிச்சு கருத்துகள ஏத்துக்கிட்டு சரி செய்வோம். அதே மாதிரி முன்னாடியெல்லாம் ஷோ முடிச்சோன சம்மந்தப்பட்ட மக்கள் நீங்க தான் ஃபாலோ பண்ணிக்கணும். நாங்க தினம் தினம் நிறைய மக்கள சந்திக்கிறோம்னு சொல்லிடுவோம். ஆனா இனிமே அப்படி இல்ல. பிரச்னைனு வரவறங்கள ஷோ முடிச்சதுக்கு அப்பறமும் வேண்டிய தேவைகள் செய்து அவங்க பிரச்னைகள சரி செய்யணும்னு முடிவெடுத்துருக்கோம்.... இன்னும் நிறைய பொதுப் பிரச்னைகள் , உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகள்ல நடக்குற பொதுவான பிரச்னைகள்லாம் நிகழ்ச்சியில வரப் போகுது..அதுக்கான விழ்ப்புணர்வுகள் வரப்போகுது கண்டிப்பா மக்களுக்கு இன்னும் பயனுள்ள நிகழ்ச்சியா தரப் போறோம்!” என்றார் அதே புன்னகையுடன்....

- ஷாலினி நியூட்டன் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close