Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்னிக்கு நைட் ரஜினி எனக்கு போன் பண்ணினார் - கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் கலகல பேட்டி!

ஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தில் நாயகியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ராதிகாவுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது கபாலி.. இந்நிலையில் ராதிகா ஆப்தேவை பேட்டி எனக் கூறி இருவர் செம கலாய் கலாய்த்துள்ளனர்...

அவரிடம் கேட்கப்பட்ட சில குறும்புக் கேள்விகளின் தமிழ்த் தொகுப்பு இதோ,

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சாமே?

” ஆமா... அதுல எதுனா பிரச்னையா... அவர் ஆஸ்திரேலியா காரர் பேரு பெனெடிக்ட் டெய்லர்... அவரு ஒரு மியூஸிசியன்...

அப்போ அவரு டெய்லரா? "வெள்ளையான ஆள் வேணும்னா இவனுக்கு என்ன குறைச்சல்!

”என்ன சொல்ல வர்றீங்க?... இல்ல நம்ம இதை முடிச்சுக்கலாம். நான் கிளம்பறேன்!”

“அதெல்லாம் இல்ல ஜஸ்ட் நாங்க உங்க கிட்ட ஃப்ரெண்ட்லியா பேசுறோம் அவ்ளோதான்! ஏன் லண்டனுக்குப் போனீங்க?

“ அங்க நான் படிச்சுட்டு இருந்தேன். டான்ஸ் கத்துக்க போனேன்!”

 இங்கயே அந்த டான்ஸ் க்ளாஸ் இருக்கே...ஏன் லண்டன்?

“ ஹெல்லோ .. நான் லண்டன் போகணும்னு நினைச்சேன் போனேன்... அவ்ளோ தான்”

சரி உங்களுக்கும் துஷார் கபூருக்கும் நடுவுல என்ன நடக்குது?

“ நீங்க ரெண்டு பேரும் நிறைய கிசுகிசு படிப்பீங்க போல!”

இல்லை அப்படி இல்ல, ஏன் துஷார் கபூர்?

“ அதென்ன ஏன் துஷார் கபூர், என்ன உங்க பிரச்னை!”

நானே அவர விட நல்லா இருப்பேனே?

“ ஆக்சுவலி இங்க இருக்கற மீடியா மக்கள் தேவையில்லாம கிளப்பின வதந்தி அது... எனக்கும் அவருக்கும் ஒண்ணுமே இல்ல.. அவரோட நம்பர் கூட என் கிட்ட இல்ல!”

ஒருவேளை இந்த கிசுகிசு ஏக்தா கபூரோட இருந்திருந்தா ஓகே சொல்லியிருப்பீங்களோ?

“ என்ன? நீங்க கேக்கற விஷயம் எனக்கு சரியா புரியல ... என்ன பிரச்னை உங்க ரெண்டு பேருக்கும்!”

முதல்ல துஷார் கபூர் , இப்போ ரஜினிகாந்த அப்படிதான? உங்க லைஃப்ல ரொம்பப் பெரிய ஸ்டெப் போல! ”

“என்ன இது ஒப்பீடு... இதெல்லாம் கேள்வியா? ஆனா ரஜினி சாரோட நான் படம் நடிக்கறது உண்மை!”

ஓ... அப்படியா? அப்போ ரஜினிகாந்துக்கு விக்டோரியா சீக்ரெட்ஸ் தெரியும்னு நாங்க கேள்வி பட்டோமே? உண்மையா?

“( கொஞ்சம் கோபத்துடன்) நான் இந்த ஷூட் முடிச்சுக்கலாம்னு இருக்கேன்!”

ஏய் இந்தப் பொண்ணு நான் சொன்ன ஜோக்குக்கு சிரிக்கலை?

“அவரு எவ்ளோ நல்ல மனுஷன் தெரியுமா.... அவரு பத்ம பூஷன் அவார்ட் வாங்கினப்ப நான் கால் பண்ணேன்!”

ராதிகா..... ஏன் இப்படி தகவல் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, நாம அப்படியா பழகியிருக்கோம்?

“ நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மாதிரி இல்ல அவரோடது... அவருக்கு நான் கால் பண்ணினப்ப அவரு வீட்ல இல்ல. ஆனா அன்னிக்கு நைட்டே எனக்கு கால் பண்ணினாரு தெரியுமா!”

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே இருவரும்... அப்போ நீங்க பெரிய படத்துல நடிக்கிறீங்க நாங்களும் ஒரு பெரிய படம் பண்ணப் போறோம் ... இவரு தான் ஹீரோ . என்றதும்,  நான் எதாவது ஹெல்ப் பண்ணனுமா என்ற ராதிகாவிடம் , ஆமா நீங்க தான் இந்தப் படத்துல ஹீரோயின் இவன் ஹீரோ என சொல்ல , அதிர்ச்சியாகி மீண்டும் “நைஸ் யா! என வாழ்த்தியவர், ஓகே ஸ்க்ரிப்ட் என் அஸிஸ்டெண்ட் கிட்ட குடுத்துடுங்க என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிடுகிறார்.

  இந்தப் பொண்ணு கிட்ட கொஞ்சம் கூட கான்ஃபிடெண்டே இல்ல, எப்படி ரஜினிகாந்த் இந்தப் பொண்ணுக்கு ஓகே சொன்னாரு. அடுத்த தடவ அவரப் பார்த்தா கண்டிப்பா கேட்கணும்... பாரேன் ட்ரெஸ்ஸ, வெறும் மராத்தியில ஒரு படம் நடிச்சிட்டு எவ்ளோ பில்டப்புன்னு என சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராதிகா ஆப்தே உள்ளே நுழைந்து ”எக்ஸ்க்யூஸ்மி என்னோட கார எடுக்க முடியல உங்க டூவிலர பார்க் பண்ணியிருக்கீங்க எடுக்க முடியுமா?” என்றதும் இருவரும் நாங்க டூவீலர்ல வரல பஸ்ல வந்தோம் என்றதும் ஜாலியாக சிரித்தபடி முடிகிறது பேட்டி....

 வீடியோவிற்கு:

தொகுப்பு : ஷாலினி நியூட்டன் 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close