Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களின் கனவை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்

ட்விட்டரில் உலாவிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நமது கண்களை ஈர்த்தது ஒரு போஸ்டர். பெண்களுக்காக தெறி படம் சிறப்புக் காட்சி காலை ஏழு மணிக்கு, காரைக்குடி சத்தியம் தியேட்டரில் என சில மொபைல் எண்களுடன் காணப்பட்டது அந்தப் போஸ்டர்.

என்ன ஆச்சர்யம் பெண்களுக்காக தனிக் காட்சியா? இதுவரை மாஸ் ஹீரோக்களின் பெண்கள் ரசிகர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததே இல்லையே அதே போல் ஆண்கள் எப்படி ஒரு ஷோவையே தியாகம் செய்வார்கள் என நமக்கும் ஆர்வம் அதிகமாக சம்மந்தப்பட்ட மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டோம்...

மறுபக்கம் பேசினார் கார்த்திக் சுப்ரமணியன்..

வாழ்த்துகள் பாஸ்... பெண்களுக்கு தனி ஷோவா? என்ன திடீர் அரேஞ்ச்மெண்ட்!

“ஒண்ணுமே கிடையாது, எங்கள மாதிரியே அவங்களும் ரசிகர்கள் தான். அவங்களுக்கும் ஆசை, ஆர்வம்லாம் இருக்கு, தளபதி படத்த அவங்களும் முதல் காட்சி பாக்கணும். அதுவும்  பிரச்னை, சவுண்டெல்லாம் இல்லாம அத தான் நினைச்சோம் செஞ்சிருக்கோம்!”...

சரி ஏழு மணிக்கு ஷோ போட்ருக்கீங்களே லேடீஸ் வருவாங்களா?

“ நாங்களும் அப்படி  நினைச்சோம் ,. ஆனா இது வரைக்கும் 450க்கு 200 டிக்கெட் ஃபுல் ஆகியிருக்கு, வெறும் லேடீஸ் , குழந்தைகள் மட்டும் தான் அந்த ஷோ, ஒரு டீமா சேர்ந்து 27 டிக்கெட்லாம் புக் பண்ணியிருக்காங்க... தளபதி படம் பார்க்கணும்னு நினைக்கறவங்க வருவாங்கள்ல... இன்னொரு ஸ்க்ரீன் இருக்கு அதுல பசங்களுக்கு ரெடி பண்ணியிருக்கோம்!”

பெண்கள் அவ்ளோ பேர் வர்றாங்க என்னென்ன மாதிரி பாதுகாப்புகள் செஞ்சிருக்கீங்க?

”போலீஸ் பாதுகாப்பெல்லாம் கேட்ருக்கோம், எங்க ஆண் ரசிகர்கள் நாங்களே பாதுகாப்பா அவங்களுக்கு நிக்கப் போறோம். எங்க ஃபேமிலி பெண்களும் சேர்ந்து தான் படம் பார்க்கப் போறாங்க!”

இது எப்படி சாத்தியமாச்சு?

“ மொத்தமா டிக்கெட்டுகள் எல்லாத்தையும் புக் பண்ணினோம், தியேட்டருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் காரைக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றத் தலைவர். நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்து தான் இத செஞ்சோம்!”

மத்த ஊர்கள்லயும் இதே மாதிரி செய்யலாமே?

“ எங்களுக்கும் ஆசை இருக்கு.. ஆனா எல்லா ஊர்லயும் பாதுகாப்புக் குடுக்கணும், எல்லாத்துக்கும் மேல மற்ற ஊர்கள்ல  தியேட்டர் காரங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியல, நம்ம ஊர்ல நம்ம முதல்ல செய்வோம், அப்பறம் அப்படியே பரவும்!”

விஜய்க்கு இந்தத் தகவல் போயிடுச்சா?

“ இந்த மாதிரி பெண்களுக்காக தனி ஷோ இருக்குன்னு தகவல் அனுப்பியிருக்கோம், ஷோ முடிஞ்சோன தளபதிக்கு ஸ்பெஷலா போட்டோக்கள்லாம் அனுப்பி வைக்கப் போறோம்!”

பெண்களும் மனிதர்கள் தான், வெறும் சினிமா தானே என நினைக்காமல் அவர்களுக்கும் ஒரு தனி ஷோ உருவாக்கியது ஒரு நல்ல முயற்சி என்றே சொல்ல வேண்டும்... இது விஜய் படத்திற்கு மட்டுமல்லாமல் ரஜினி, கமல், அஜித் படங்களுக்கும் தொடர்ந்தால் பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளும் நிறைவேறும் என்பதே உண்மை...

பெண்கள் என்னதான் முயன்றாலும் ஆண்களின்  உதவிகளும் இருந்தால் தான் அவர்களின் கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதையே உணர்த்துகிறது இந்தச் செயல்!

வாழ்த்துகள் நண்பர்களே!

- ஷாலினி நியூட்டன் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close