Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவை வெளியேற விடமாட்டோம் - நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி

‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் பெறவில்லை.

சமீபத்தில் அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. சிம்புவின் இந்தச் செய்திதான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது...இதுகுறித்து நடிகர் சங்கத்தலைவரும், சீனியர் நடிகருமான நாசரிடம் பேசினோம்,

நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக சிம்பு சொல்கிறாரே?

“ ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எங்களுக்கு இதுகுறித்து எந்தக் கடிதமோ, அல்லது சிம்பு தரப்பிலிருந்து செய்தியோ வரவில்லை!”.

ஒருவேளை சிம்பு வெளியேறினால் சங்கத்தின் செயல்பாடு என்னவாக இருக்கும்?

“முதலில் வெளியேறும் வரை நாங்கள் விட மாட்டோம். எங்களுக்குத் தகவல்கள் வரும் பட்சத்தில் கண்டிப்பாக அவரை அழைத்து பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்க்க முயற்சி செய்வோம்!”

இதற்கு முன் சங்கத்திலிருந்து நடிகர்கள் யாரேனும் இப்படி வெளியேறியதுண்டா?

“ இதுவரை நடந்ததில்லை... மேலும் இது சிம்பு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் யூகங்களை நாம் எடுத்துக்கொள்ள முடியாதல்லவா!”

எங்களை நட்சத்திரக் கிரிக்கெட்டுக்கு அழைக்கவில்லை என ராதிகா ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே?

“ நான் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை. அவைகளை நான் பின்தொடர்வதுமில்லை. சங்கத்தைப் பொருத்தவரை எல்லாருமே ஒன்று தான். யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டோம். அனைவருக்கும் முறைப்படி டிக்கெட்டுகள் அனுப்பி வைத்துவிட்டோம். ராதிகா, சரத்குமார் இவர்களை அழைக்கவில்லை எனில் நிரோஷா, ராம்கி, விஜயகுமார் இவர்களெல்லாம் வந்தார்களே... நானும் என் செய்தித் தொடர்பாளரை நன்கு விசாரித்துவிட்டேன். அனைவருக்கும் முறைப்படி அழைப்புகளும், டிக்கெட்டுகளும் சென்றுவிட்டன!”

நடிகர் சங்கம் இரண்டு குழுக்களாக பிரிவதாகவும், தமிழ் நடிகர்கள் சங்கம் என தனியாக ஒரு குழு ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதே?

“யார் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்...முதலில் அப்படிச் சொல்பவர்களிடம் யார் இந்தத் தகவலை சொன்னார்கள் எனக் கேளுங்கள்.... தேர்தல் நேரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. அதற்காக சங்கம் இரண்டாகுமா? நீங்களே சொல்லுங்கள் சங்கத்தை எப்படி பிரிக்க முடியும்? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சங்கம் அதுவரை பார்த்துக்கொண்டும் இருக்காது!”

- ஷாலினி நியூட்டன் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close