Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி, ‘சைத்தான்’ ஆட்டோ டிரைவர் ஆனது எப்படி? #VikatanExclusive

விஜயசாரதி

'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதியை ஞாபகம் இருக்கிறதா? ஊர் ஊராக தொலைக்காட்சி நேயர்களை சந்தித்து அவங்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொகுத்து வழங்கியவர். இன்றைய தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு எல்லாம் சூப்பர் சீனியர். இந்த நிகழ்ச்சிக்கு பின், நாடகத்தில் தொடர்ந்து நடித்தவர் நடுவில் காணாமல் போய், மீண்டும் 'சைத்தான்' படத்தில் ஆட்டோ டிரைவராக என்டரி கொடுத்திருக்கிறார். 

"எங்க சார் நடுவுல கொஞ்ச நாள் காணாமல் போய்ட்டீங்களே?"  

"ஹா.. ஹா... காணமல் எல்லாம் போகலைங்க. அப்ப 'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியை நடத்தினேன். இப்போ சன் டி.வி நெட்வொர்க்லதான் சேனல் ஹெட்டாக இருக்கேன். நடுவுல  'கோலங்கள்', 'மூன்று முடிச்சு', 'சத்யா'னு நிறைய சீரியல்களை வரிசையாக நடிச்சுட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்சம்  வேலை அதிகமாகிடுச்சு. ரொம்ப பெரிய டீம் வராங்கன்னா மட்டும் இன்டர்வியூ பண்ண சொல்லுவாங்க. அப்ப மட்டும் பேட்டி எடுத்தேன். 'நண்பன்' பட டீம் வந்தபோது எல்லாம் செம ஜாலியாக நடத்தினேன். தலைமை பொறுப்புல இருக்கேன். வேலை அதிகம். அதுனால தான் ஆன் ஸ்கிரீன்ல வருவதை நானே தவிர்த்துவிட்டேன்." 

"இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிலீஸ் ஆன, 'சைத்தான்' படத்துல ஆட்டோ டிரைவராக நடிச்சு இருக்கீங்களே?"

"அது நட்புக்காக." என சிரிக்கிறார் விஜயசாரதி. "'சைத்தான்' படத்தோட இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி சன் லைப் சேனல்ல வேலை பார்த்துட்டு இருந்தார். அதுனால, எங்களுக்குள்ள நல்ல பழக்கம். அவருடைய லட்சியமே ஒரு இயக்குநர் ஆவதுதான். அவருடைய கனவுக்கு சப்போர்ட் பண்ண நானும், இன்னமும் சில நண்பர்களும் சேர்ந்து அவருக்கு சின்ன உதவிகள் செஞ்சோம். அப்படி டெவலப் பண்ண கதைதான் 'சைத்தான்.' இந்த கதையை நிறைய ஹீரோக்களிடம் சொல்லி பேசிட்டு இருந்தோம். அப்படி ஒருநாள் விஜய் ஆண்டனி 'சூரிய வணக்கம்' நிகழ்ச்சியில கலந்துகொள்ள சன் டி.வி-க்கு வந்திருந்தார். அப்ப, 'ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கு சார். கேட்குறீங்களா?'னு கேட்டேன். 'தாராளமா சொல்லுங்களேன்னு சொன்னார். பிரதீப் கதை சொன்னார். விஜய் ஆண்டனிக்கும் கதை பிடிச்சு இருந்தது. நடிக்கறேன்னு சொன்னார். 'நீங்களும் படத்துல சின்ன கெஸ்ட் அப்பியரன்ஸ் வரணும்'னு பிரதீப் சொன்னார். 'சரி'னு நானும் இதுக்காக தான் தாடி எல்லாம் வளர்த்து நடிச்சேன்."

"படத்துக்கு எல்லாம் ஸ்கிரிப்ட் வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க. அடுத்து படம் இயக்கும் ஐடியா இருக்கா சார்?"

"தெரியலையே சார். எனக்கு நடிக்க ரொம்ப பிடிக்கும். அப்புறம் சேனலில் புதுசாக கான்செப்ட் பிடிச்சு நிகழ்ச்சி நடத்துவது ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்துல டைரக்டர் ஆவீங்களா?னு கேட்டீங்கன்னா...உறுதியா இப்ப பதில் சொல்ல தெரியலைங்க." சிரிக்கிறார். 

"சரி, இனி தொடர்ந்து படங்களில் நடிப்பீங்களா?"

"இப்ப இருக்கும் வேலை பளுவில் நடிப்புக்குனு சரியான நேரம் ஒதுக்க முடியுமானு தெரியலை. நடிக்கணும்னு இருந்தால் அதை 'பாபா' முடிவு பண்ணட்டும்." என கைகளை உயர்த்தி மேல காட்டுகிறார்.

"இப்ப நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?"

"ஒவ்வொருத்தருமே ஸ்பெஷல்தான் இங்க. ஒன் லைன் பிடிச்சு டக்கு டக்குனு சிரிக்க வைக்கும் தாடி பாலாஜி பிடிக்கும். ஆதவன், ஒரு தனி ஸ்டைலோட ரொம்ப கேஷுவல் லுக்ல நிகழ்ச்சியை நடத்துறார். இமான் அண்ணாச்சி வேற விதமாக கலக்கிட்டு இருக்கார். இவங்களை எல்லாம் தாண்டி எனக்கு ஆல் டைம் பெவரைட் ஆங்கர்னா அது 'பப்லு' பிரித்வி ராஜ் தான். அவரை அடிச்சுக்க ஆள் இல்லை பாஸ்."

"'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியில நிறைய பேருக்கு பிடித்த பாடல் கேட்டு டெடிகேட் பண்ணி இருக்கீங்க. இப்ப உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது?" 

" 'கபாலி' படத்துல தலைவர் நடிச்ச 'மாயநதி' அல்லது 'நெருப்புடா' பாடல் போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்." என கலகலவென சிரித்தவர். "இதுவரை ஆன் ஸ்கிரீன்ல தலைவனுக்கு கிஸ் கொடுத்த ஒரே ஆள் நான் மட்டும்தாங்க. 'எந்திரன்' படத்துக்காக சூப்பர் ஸ்டாரை இன்டர்வியூ எடுக்கும்போது, 'சார், ஒரு சர்பரைஸ் கிப்ட் கண்ணை மூடிக்கோங்க'னு சொல்லி, அவர் கன்னத்துல பச்சக்குனு கிஸ் கொடுத்தது நான் மட்டும்தான். அது அப்படியே டெலிகாஸ்ட் ஆச்சு. ஒரு நிகழ்ச்சியில தலைவனுக்கு வேற யாருமே கிஸ் பண்ணது கிடையாது. சின்ன வயசுல இருந்தே நான் பார்த்துப் பார்த்து எனக்கு பைத்தியம் பிடிச்ச ஆளுன்னா.... அது நம்ம 'நெருப்புடா'சார் தான்." என சிரிக்கிறார் விஜயசாரதி.

- சிபி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close