Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொர்ணமால்யா முதல் ஜாக்குலின் வரை... பெண்கள் தினம் பற்றி கடுகடுப்பது ஏன்?

உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களின் வாழ்த்துகளை, மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்கள். பலர், சாதனை பெண்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். இப்படி பெண்கள் தினம் சூழ் சமூக வலைதளமாகவே, ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் காட்சியளித்தது. தொகுப்பாளினிகள் சிலரிடம் பெண்கள் தினத்தை எப்படி கொண்டாடினீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் கூறியவை அனைத்தும் அதிர்ச்சி தரும் ரகம்...

சொர்ணமால்யா: 


சொர்ணமால்யா

பெண்கள் தினத்தை வெறும் கொண்டாட்டமா மட்டும் பாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை.மார்ச் 8-ம் தேதி, பெண்கள் தினத்தை கொண்டாட்ட மட்டும் செய்யாம, பெண்களுக்கு தேவையான சில திட்டங்களை அரசு கொண்டு வரலாம். சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுனாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் இனிப்பு கொடுத்தாங்க. அவ்வளவு தான். ஆனால், அந்த நாளில் பெண்களுக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கலாம். அப்போ தான் நூற்றாண்டு விழாவும் சிறப்பாக இருந்திருக்கும் பெண்களும் பயன் அடைச்சிருப்பாங்க. 

ஐஸ்வர்யா க்ரிஷ்:

ஐஸ்வர்யா:

பெண்கள் தினம்னா, ஒரே கலர்ல டிரெஸ் போட்டுக்கிட்டு, ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் போயிட்டு, அதை செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போடுறது தான் ட்ரெண்ட்டா இருக்கு. ஆனால், உண்மையில் அது இல்லைங்க பெண்கள் தினம். நகரத்துல ஒரு பெண்ணுக்கு ஏதாவது கொடுமை நேர்ந்தா அதுக்கான எதிர்ப்பு குரல் எந்தளவுக்கு ஓங்குதோ, அதே அளவுக்கு கிராமத்து பெண்களுக்கு ஏற்படுற கொடுமைகளுக்கும் எழணும். நகரம் மற்றும் கிராமத்து பெண்களை எப்போது சமமாக நடத்துறாங்களோ, அது தான் ரியல் விமன்ஸ் டே. அது இந்த வருஷம் நடக்கலை. அது எப்போ நடக்குதோ அன்னைக்கு தான் நான் விமன்ஸ் டே செலிபிரேட் பண்ணுவேன். 

ஃபரினா:

ஃபரினா

எனக்கு பெண்கள் தினங்கிற கான்செப்டே முதல்ல பிடிக்காது. அது என்ன, அன்னைக்கு மட்டும் கொண்டாடுறது. பெண்கள் தினத்தன்று மட்டும் பசங்க எல்லாரும், ‘என் அம்மா மாதிரி யாரும் இல்ல, என் மனைவியை போல வருமா‘ அப்படி இப்படினு பேசுவாங்க. ஆனால், அடுத்த நாளே மனைவியை ‘ஏய் வாடி, அவளே... இவளே..’னு திட்டுவாங்க. இதுல என்ன பெண்களுக்கு மரியாதை இருக்குனு சொல்லுங்க? இந்த மாதிரி ஒரு கான்செப்ட்டை கிரியேட் பண்ணி ஒரு நாள் மட்டும் பூஜை பண்றது சரியில்லை. அதுக்காக வருஷம் ஃபுல்லா பெண்களை தலையில தூக்கி வச்சு கொண்டாடுங்கனு சொல்ல வரலை, அவங்களை தரையில போட்டு மிதிக்காதீங்கனு தான் சொல்ல வரேன். 

மணிமேகலை:

மணிமேகலை:

எல்லாரும் சொல்ற மாதிரி மார்ச் 8-ம் தேதி மட்டும் தான் பெண்கள் தினமா..? அன்னைக்கு மட்டும் தான் பெண்களை மதிக்கணுமா..?னு தான் நானும் கேட்பேன். ஏன்னா, எனக்கும் அந்த ஒரு நாள் செலிபிரேஷன்ல உடன்பாடு இல்ல. கரெக்ட்டா பெண்கள் தினம் வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி சில பேர், பெண்களுக்கு நடக்குற அநீதிக்கு எதிராக போராட்டம், பிரசாரம்னு ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கிட்டயெலலாம் ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்கனு கேட்கணும். ஒரு வாரம் அல்லது ஒரு நாள் மட்டும் போராடுனா, பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் குறைஞ்சிடுமா..? கண்டிப்பா இல்ல. தொடர்ந்து அதுக்காக குரல் கொடுத்துக்கிட்டே இருக்கணும். அப்போ தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். போராட்டம் பண்ற பெண்கள் எல்லாரும் விளம்பரத்துக்காக போராடாமல், உண்மையா போராடணும்னு நினைக்கிறேன். 

பிரியங்கா:

பிரியங்கா

நேத்து நான், எங்க அம்மா, என் கணவரோ என் வீட்டுக்குள்ளையே, ரொம்ப சிம்பிளா பெண்கள் தினத்தை கொண்டாடிகிட்டேன். மத்தப்படி எனக்கும் அந்த ஒரு நாள் மட்டும் கொண்டாடுறது பிடிக்காது. லவ்வர்ஸ் டே அன்னைக்கு மட்டும் தான் லவ் பண்றோமா என்ன..? அதே மாதிரி தான். பெண்களை மதிக்கணும்கிறது எல்லா நாளிலும் இருக்கணும். சிட்டில மட்டும் தான் பெண்கள் தினத்தை கொண்டாடுறாங்க, கிராமத்தில் அந்த கலாச்சாரம் கிடையாது. அது ஒரு வகையில நல்லதாகவும் இருக்கு, வருத்தமாகவும் இருக்கு. நல்லது என்னன்னா, அவங்க எல்லா நாளையும் பெண்கள் தினமா கொண்டாடுறது தான். 

ஜாக்குலின்:

ஜாக்குலின்

எனக்கு ஏன் விமன்ஸ் டே கொண்டாடுறாங்கன்னே தெரியலை. அந்த ஒரு நாள் மட்டும் தான் எங்களை மதிக்கணும். மத்த நாளில் மதிக்கக்கூடாதுன்னு இல்ல. பசங்க எல்லாரும் பெண்களை பாதுகாக்குறோம்னு சொல்றாங்க. எங்களை நீங்க பாதுகாக்கலாம் வேணாம், மரியாதை கொடுங்க போதும். என்னை சுத்தியிருக்கிற என் அப்பா, என் நண்பர்கள்னு எல்லாரும் எனக்கு மரியாதை கொடுக்கிறாங்க. அவங்களை தவிர மத்த எல்லாரும், எல்லா பெண்களுக்கும் மரியாதை கொடுக்கணும். அப்படி கொடுத்தாலே போதும். எல்லா நாளும் பெண்கள் தினம் தான். 

மா.பாண்டியராஜன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close