Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகவா லாரன்ஸ் 'மக்கள் சூப்பர் ஸ்டார்’ ஆனது இப்படித்தானாம்!

'மொட்டசிவா கெட்டசிவா' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற புதிய பட்டம் போடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டானது மட்டும் அல்லாமல் கிண்டலுக்கும் உள்ளானது.

” 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை யார் வழங்கினார்கள்.. எதற்காக இந்த புதிய பட்டம்?” என்று ராகவா லாரன்ஸிடம் கேட்டோம், "எனக்கே இது தெரியாது சார். படம் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கு ஒரு சர்பரைஸ் இருக்குனு படத்தோட டைரக்டர் சாய்ரமணி சொல்லிட்டார். ஆனா, இந்த பட்டம்னு எனக்கு தெரியாது. எனக்கு நானே ஒரு பட்டம் கொடுத்துகிட்டேன். அது என்ன பட்டம்னு உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பறேன். அதுதான் என்னுடய விளக்கம்" என்றார். 

மக்கள் சூப்பர் ஸ்டார்

அவர் அனுப்பிய மெசேஜில், “இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாகச் சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்கு தெரியாது. இந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் என் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’  என்ற பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு 'சூப்பர் ஸ்டார்' அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர்தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்திப்படுத்திவிட முடியாது. அதனால் 'கண்மணி' என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னால் பட்டமாக 'கண்மணி' ராகவா லாரன்ஸ் என்று வைத்துக் கொள்ளப்போகிறேன்” என இருந்தது. இது லாரன்ஸ் தரப்பில் இருந்து மீடியா குழுக்களுக்கு செய்தியாகவும் அனுப்பப்பட்டது.

சாய் ரமணி, மொட்ட சிவா கெட்ட சிவா,

இயக்குநர் சாய்ரமணியை தொடர்பு கொண்டோம், "எனக்கு கடந்த ரெண்டு வருஷமாக லாரன்ஸ் சாரை நல்லா தெரியும். எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை பத்தித்தான் அதிகமா பேசிட்டு இருப்பார். ராகவேந்திரர் சாமியை அவருக்கு அறிமுக செய்தவர் ரஜினிகாந்த் தான். அந்த சாமி பெயரில் பல குழந்தைகளுக்கு உதவி செஞ்சுட்டு வர்றார். அவர் வீட்டுலயே 60 குழந்தைகளுக்கும் மேல வெச்சுப் பார்த்துகிறார். அவங்களைப் படிக்கவும் வைக்கிறார். இவ்வளவு நல்ல மனுஷனுக்கு நான் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அவரும், நானும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். இப்பக்கூட நான் 22 வருஷம் கழிச்சு 'பாட்ஷா' படம் ரிலீஸ் ஆகும்போது முதல்நாள் முதல் ஷோ போய் பார்த்தேன். அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாரையும் பிடிக்கும். லாரன்ஸையும் பிடிக்கும். ராகவா லாரன்ஸ் வாழ்நாள் முழுக்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு விஷயம் செய்யணும்னு நினைச்சேன். அதுதான் லாரன்ஸ் பெயருக்கு முன்னால் இந்தப் பட்டம் கொடுத்தேன். இப்ப எல்லாரும் இது 'சரியா, தவறா?'னு பேசிட்டு இருக்காங்க. ஒரு ரசிகனா எனக்கு சரினு தோணுச்சு அதை செஞ்சேன். அவ்வளவுதான்." என்றார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி, முத்து பகவத்-

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close