Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..!? 'ஷாக்' சூரி #VikatanExclusive

சூரிக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற தகவல் காடு மேடெல்லாம் காட்டுத்தீயாகப் பரவ, 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என ஷாக் ஆனார்கள் நெட்டிசன்கள். 'என்னடா இது நயன்தாராவுக்கு வந்த சோதனை?னு  பதறிப்போய் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் 'பக்கா' திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த பரோட்டா சூரியை உடனே தொடர்பு கொண்டோம்.

சூரி

”அய்யய்யோ அண்ணே... அதை ஏன்ணே கேட்குறீங்க... யாரோ திடீர்ன்னு கொளுத்திப் போட்டுட்டாய்ங்க. அது பாட்டுக்குப் பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்கு. முதல்ல அந்த நியூஸைக் கேட்டு நானே ஜெர்க் ஆனேன்தான். ஆனா, ஒரு உண்மையை ஒத்துக்கணும்ண்ணே! இந்தப் புரளியைக் கேட்க கேட்க உள்ளுக்குள்ள ஜிலுஜிலுன்னு ஜாலியா இருந்தாலும் அப்படி ஒரு விஷயத்துல உண்மை இல்லைன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு" என வில்லங்கமாகவே பேசினார். 'இதென்ன இந்த மனுஷன் இவ்ளோ வெள்ளந்தியா ஒத்துக்குறாரே' என நமக்குத் தோன்ற "சரி ரைட்டு... உண்மையா பொய்யா... எங்களுக்கு சோலி கெடக்கு.." என ஜாலியாக கெடுபிடி காட்டினோம்.  

உடனே லேசாக சீரியஸானவர், ''நயன்தாரா எல்லாம் எப்படிபட்ட ஆர்டிஸ்ட்... அவங்க இருக்குற உயரம் ரொம்ப அதிகம். இன்னும் இருபது வருஷத்துக்கு அவங்களை யாரும் சினிமாவுல அசைச்சுக்க முடியாது. ஏற்கெனவே அவங்க கதாநாயகியாக நடிச்ச 'இது நம்ம ஆளு' படத்தில் நானும் காமெடியனா ரோல் பண்ணியிருக்கேன். அவங்க எல்லாம் எப்படிண்ணே என்கூட ஜோடியா நடிப்பாங்க? ஹீரோவா மட்டும் நடிச்சிடக் கூடாதுங்குற கொள்கையோட கடைசி வரை உறுதியா இருக்கணும்னு நினைக்கிறவன் இந்த சூரி. நயன்தாராவை கவனிக்கிறீங்கதானே? இப்போ எல்லாம் விதவிதமா அவங்களோட கதாபத்திரத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை  அவங்க மட்டும் சூரி கூட நடிக்க ரெடி அப்படின்னு ஒரே ஒரு வரி  சொன்னா, இப்போ இருக்க ஷூட்டிங்குகளைப் பூராம் விட்டுட்டு, என்னோட கொள்கையெல்லாம் காத்தோட காத்தாப் பறக்க விட்டுட்டு இப்போவே நடிக்கக் கெளம்பிடுவேன். நயன்தாரா கூட ஜோடியா நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது சொல்லுங்க...?" என்றார்.

நயன்தாரா கூட சூரி நடிக்கிறார்னு சொன்னாக்கூட நம்பிருக்கலாம்ய்யா! ஆனா, ஜோடியான்னு சொல்லி கிளப்பிவிட்டீங்க பாருங்க பாவிகளா!

- ந.புஹாரி ராஜா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close