Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'யெஸ்... என் கணவரைவிட்டுப் பிரிஞ்சுட்டேன்!' - எஸ்.எஸ்.மியூசிக் பூஜா

எஸ்.எஸ்.மியூஸிக் (SS MUSIC) பூஜா என்றதும், டி.வி சேனலுக்குப் போன் செய்து நேயர் விருப்பப் பாடல்களை ஆங்கிலத்தில் கேட்டது நினைவுக்கு வரும். நாற்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருந்தவர் பூஜா. 2011-ம் ஆண்டு SS MUSIC சேனல் நிறுத்தப்பட்டது. வேறு எந்த சேனலிலும் தலைகாட்டாமல் இருந்தார் பூஜா. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சத்தமில்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களிலும் தமிழில் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கூடிய விரைவில் அவர் நடித்த இரண்டு தெலுங்குப் படங்களும் ரிலீஸாகிறது. அந்தச் சந்தோஷத்தில் இருந்தவரிடம் பேசினோம்... 

பூஜா

''ஹீரோயின் வாய்ப்பு எப்படி கிடைச்சது?'' 

''இயக்குநர் பாலாஜி மூலமாக 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தில் நடிக்கும்போது நடிப்பு மீதான ஆசை அதிகமாகிடுச்சு. தொகுப்பாளர், மாடலிங், சினிமா இதில் எது பிடிக்கும்னு கேட்டால், கண்டிப்பாக சினிமாவைத்தான் சொல்வேன். தான் வேறு ஒரு கதாபாத்திரமாக வாழ்வது சவாலானது. அதற்காக, நம்முடைய அத்தனை பாவனைகளையும் மாற்றணும். என்னை நானே இன்னொருத்தரா பார்க்கிறேன். அது புது அனுபவமாக இருந்துச்சு. எஸ்.எஸ்’மியூஸிக்கை நிறுத்தின பிறகு சேனலுக்கும் போகாமல் கிடைச்ச பிரேக்கில் ஜாலியா இருந்தேன். விளம்பரங்கள் மற்றும் மாடலிங் படங்களைப் பார்த்து ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது.'' 

''எப்படி இருக்கு இந்த நடிப்புப் பயணம்?'' 

''நிறைய கத்துகிட்டே இருக்கேன். வித்தியாசமான அனுபவமா இருக்கு. விஜேவாக இருக்கும்போது எப்பவும் ஒரே ரியாக்‌ஷன். ஒரே மாதிரி பேசறதா இருக்கும்.''

''உங்க திருமண வாழ்க்கை பற்றி...'' 

''2010-ம் வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ இரண்டு பேரும் பிரிஞ்சுட்டோம்.''

''ஏன்.. என்னாச்சு?'' 

''இரண்டு பேருமே பரஸ்பரம் பிரிஞ்சிருக்கோம். நீங்க என்ன கேட்டாலும் என்ன பிரச்னைனு சொல்ல மாட்டேன். ஸாரி! இப்போதைக்கு என்னுடைய முழு கவனமும் சினிமா மற்றும் நடிப்பில்தான் இருக்கு.'' 

''கோயம்புத்தூரில் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கீங்க, அந்த வட்டாரத் தமிழைப் பேசக் கத்துக்கிட்டீங்களா?'' 

''எனக்குத் தாய்மொழி மலையாளம். ஆரம்பத்துல சரியா தமிழ் பேசத் தெரியாமல் கஷ்டப்பட்டேன். பிறகு, சரளமாகப் பேச ஆரம்பிச்சுட்டேன். 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தில் நடிக்கும்போது தமிழ் தெரியாம அவஸ்தைப்பட்டேன். அப்புறம், நல்லாப் புரிஞ்சு கத்துக்க ஆரம்பிச்சேன்.'' 

''உங்களைப் பார்த்தால் இன்னொரு நடிகை நினைவுக்கு வாராங்களே'' 

''ஆமாம். நிறைய பேர் சோனாக்‌ஷி சின்ஹா மாதிரி இருக்கிறதா சொல்லியிருக்காங்க. சந்தோஷமாக இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி எனக்கு நான்தான் எப்போதுமே ரசிகை.'' 

பூஜா

''எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை?'' 

''சொன்னா சிரிக்காதீங்க. எனக்கு சைக்கோ கேரக்டரில் நடிக்கணும். ஒரு ஹிந்திப் படத்தில் எல்லாவற்றின் மேலும் சைக்கோத்தனமாக இருக்கிற ஒரு ஹீரோயின் ரோல் இருக்கும். அதுமாதிரி நடிக்கணும். அதுதான் என்னுடைய கனவு, ஆசை எல்லாமே.''

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close