Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னைப் பார்த்து, சன்னிலியோன் அட்ரஸ் கிடைக்குமானு கேட்டுட்டானே! -அரற்றும் அட்ரஸ் கார்த்தி!

ண்ணே நயன்தாரா அட்ரஸ் கிடக்குமாண்ணே..?’’ என கலாய்க்க வந்தவரிடம், கொஞ்சமும் கோபம் காட்டாமல், 
 
‘‘தம்பி யாருப்பா நீ.. எந்த ஊரு... உன் அட்ரஸ் என்ன?’’ என கேட்டு ஒரு டைரியில் அழகாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அந்த நபரை, ஒரு மத்தியான வேளையில் டீக்கடை வாசலில் பார்த்ததும், ஹலோ சொல்லி அறிமுகம் ஆனேன்.
 
 
’’மெட்ராஸ் கார்த்தியை தெரியும் ...இந்த அட்ரஸ் கார்த்தியை  தெரியுமாங்க?!...சினிமாவுக்கு புதுசா வர்றவங்களுக்கு,  அட்ரஸ் கார்த்தினா யாருன்னு ஓரளவுகாச்சும் தெரியும்ங்க. தெரியாட்டியும் பரவாயில்லீங்க நீங்களாவது தெரியப்படுத்துங்க’’ என்று வேண்டுகோள் வைத்தார்  அட்ரஸ் கார்த்தி. 
இந்த செல்போன் யுகத்துலயும் இப்படி தோள்ல ஒரு பேக் மாட்டிக்கிட்டு கையில டைரியோட அலையுறீங்களே யாருங்க பாஸ் நீங்க?
 
சினிமாதான் வாழ்க்கைனு ஊரைவிட்டு ஓடி வந்த ஆயிரமாயிரம் குடிமக்கள்ல நானும் ஒருத்தணுங்க. வந்தவுடனே சினிமா வாய்ப்பு கிடைக்காம ஒரு ஹோட்டல்ல சூப்பர் வைசரா வேலை பாத்தேன். அதுக்கப்புறம் அலைஞ்சு திரிஞ்சு வேட்டைக்காரன், ஆரோகணம்னு 50க்கும் அதிகமான படங்கள்ல துணை நடிகரா நடிச்சிருக்கேன். 10 ஷார்ட் ஃபிலிம்லயும் நடிச்சிருக்கேன்.சின்னத்திரை நடிகர் சங்கத்துலயும் உறுப்பினரா இருக்கேன். ஆனா, அப்பவெல்லாம் நான் யாருனு கண்டுபிடிக்காத மக்களுக்கு, இனிமேதான் நான் யாருனு தெரிய போகுது பாருங்க.
 
ஆரம்பத்துல சினிமா சான்ஸுக்காக அலைஞ்சப்ப, யாருகிட்ட போய் அட்ரஸ் கேக்கனும்னுகூட தெரியாது. ஒரு புரடக்‌ஷன் கம்பெனியை போயி பாருனு சொல்வாங்க. ஆனா, அந்த கம்பனியோட முழு அட்ரஸ் என்னனு கேட்டா அவங்களுக்கு சொல்லத் தெரியாது. என்னை மாதிரி புதுசா வரவங்களுக்கு புரடக்‌ஷன் கம்பெனி, டைரக்டர் ஆபீஸ், ஒளிப்பதிவாளர்கள். துணை நடிகர்கள், பெரிய நடிகர்கள் அட்ரஸ்னு எல்லாத்தையும் தேடித்தேடி குறிச்சு வெச்சுக்கிட்டு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். ஷூட்டிங் டைம்ல சும்மா இருக்க
மாட்டேன். மெதுவா போய் யூனிட்ல இருக்குறவங்ககிட்ட பேச்சு கொடுப்பேன். அவங்களுக்கு தெரிஞ்ச விலாசத்தை சொல்வாங்க. அதேபோல நான் போகுற இடமெல்லாம் எல்லார்கிட்டயும் பழகி அவங்களோட தெளிவான முகவரியையும் போன் நம்பரையும் குறிச்சு வெச்சுக்குவேன். என்னோட போட்டோஸ் கலெக்‌ஷனை ஆல்பமா போட்டு வெச்சு வாய்ப்பு கேக்குறதுக்கு இந்த அட்ரஸெல்லாம் எனக்கு அவ்ளோ உதவுச்சு. 
நான் பெற்ற அலைச்சல், வேற யாரும் படக்கூடாதுனு இந்தக் கலை சேவையை ஆரம்பிச்சு இருக்கேன். அதாவது சினிமாவுல நிஜமாவே ஜெயிக்கனும்னு துடிப்புள்ளவங்களுக்கு மட்டும் அட்ரஸ் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்காக அவங்ககிட்ட பத்து பைசாகூட நான் வாங்கமாட்டேன். நான் பிஆர்ஓ கிடையாதுங்க. இது என் கலைக்காக நான் செய்யுற கலைச்சேவை. இதுவரைக்கும் சினிமாவுல இருக்குற ஆயிரம் பேருக்கு மேல என்கிட்ட அட்ரஸ் இருக்கு. ஒரு தரம் விஜய்சேதுபதிகூட என்கிட்ட அட்ரஸ் கேட்டிருக்கார்.
சினிமாவுல வந்து ராத்திரியோட ராத்திரியா முன்னுக்கு வரணும்னு நினைக்குறது ரொம்ப தப்பு. நான் இங்க வந்து 9 வருஷம் ஆகுது. ஆனா, என்னிக்காச்சும் ஒரு நாள் ’சிறந்த நடிகன்’னு விருது வாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. நான் இங்க இல்லைங்க... ஹாலிவுட்டுக்கு போனாலும் இந்த அட்ரஸ் கொடுக்குற சேவையை நிறுத்தவே மாட்டேன். இதுக்காகவே வெப்சைட் கிரியேட் பண்ணி அங்கயும் நிறைய பேருக்கு உதவிட்டு இருக்கேன்.
 
ஆனா பாருங்க, போன வாரம் ஒரு பக்கிப்பய என்கிட்ட வந்து, சன்னிலியோன் அட்ரஸ் கிடைக்குமா?னு கேட்டான். அதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியலை. அப்டியே கையில கல்லை எடுத்து துரத்த ஆரம்பிச்சுட்டேன். எந்த காரணமா இருந்தாலும் நடிகைகளோட முழு விலாசத்தை கொடுக்கவே மாட்டேங்க’’
ஆறிய டீயை மடக்கென குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் அட்ரஸ் கார்த்தி.
 
-பொன்.விமலா
படங்கள்:தி.ஹரிஹரன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close