Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வாரம் என்ன பார்க்கலாம்? படங்கள்.. ஒரு பார்வை #MoviePreview

மார்ச் 18 அன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன. அவற்றைப் பற்றிய சிறு அறிமுகம்.புகழ்


ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே உதயம் என் எச் 4 படத்தை இயக்கிய அதே மணிமாறன் தான்.


தமிழகத்தில் தேர்தல் வருகிற நேரத்துக்குப் பொருத்தமாக இந்தப்படம் இருக்கும். ஏனெனில் இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை. சமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது மற்றும் நீதியை அடையும் வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது இது போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிஷ்ர்டம் ஆகிய மசாலாக்களைத் தூவி அனைவரையும் கவரும் வண்ணம் படம் தயாராகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதே படத்தின் போக்கு இந்த கார சாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்து உள்ளேன் என்று இயக்குநர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

என்று தணியும்

வேல் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக பழனிச்சாமி தயாரித்து யுவன், சந்தனா, ஜீவிதா, ராஜேஷ் உட்பட புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘என்று தணியும்’ திரைப்படம், பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியாகிறது. இசை;  ரா. பிரபாகர்,  ஒளிப்பதிவு: எஸ்.பி.மணி, படத்தொகுப்பு: அருள்முருகன். 

நாற்பதே நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். இயற்கை வெளிச்சம், டிராலி பயன் படுத்தப்படவில்லை , ஒப்பனைகள் இல்லை என்று பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தப் படம், ‘உண்மைக்கதை அல்ல.. இது உண்மைகளின் கதை’ என்று சொல்கிறார் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். பாரதிராஜாவிடம் இணை இயக்குநராக இருந்த அனுபவம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது அவருக்கு.  ‘இந்தப்படம் யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களைச் சென்றடைந்தாலே வெற்றிதான்’ என்கிறார்.


சமீபத்தில் நடந்த ஆணவக்கொலையை முக்கியக் கருவாக எடுத்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு படி முன்னேறியிருக்கிறது எனலாம்.

சவாரி

அன்றாடம் சாலையில் நாம் பற்பல வாகனங்களை பார்க்கிறோம். சைக்கிள் முதல் ஹம்மர் வரை ஒவ்வொரு வண்டியும் அதன் விலைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றாற்போல் சவாரி செய்பவருக்கு சொகுசைத் தரும். எனினும், ஒவ்வொரு பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். புதுமுக இயக்குநர் குகன் சென்னியப்பன். இயக்கியிருக்கும் ‘சவாரி’ திரைப்படமும் இதுபோன்றதொரு அனுபவத்தை உங்களுக்குத் தரலாம். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் செட்டி, ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்காந்த் , கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர்.  சதிஷ்குமார் கலையமைப்பில், ஒளிப்பதிவு செய்கிறார் ‘பரதேசி’ புகழ் ஒளிப்பதிவாளர் செழியன், அமரர் கிஷோர் T.E படத்தொகுப்பில், சாருகேஷ் சேகர் வரிகளில் விஷால் சந்திரசேகர் ‘சவாரி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நாம் அன்றாடம் தெருவிற்கு தெரு, சாலைக்கு சாலை பார்க்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் இதுவரை தொட்டிடாத ஒரு புதிய கதைகளத்தை கொண்டதுதான் ‘சவாரி’ என்கிறார் படத்தின் இயக்குநர்.  இவர், நாளைய இயக்குனர்-3 நிகழ்ச்சியில் பாலசந்தர் ,மற்றும் கமல் ஹாசன் ஆகியோரிடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகம்


வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் இர்ஃபான் நடித்துள்ள படம் ‘ஆகம்’. படத்தின் பெயருக்கு ‘வருகை’ என்று அர்த்தமாம். கல்வியாளர் கோடீஸ்வர ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
இர்ஃபான். ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், ரவிராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா நடிக்கும் இப்படத்திற்கு முனைவர் விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஜினேஷ் வசனம் எழுத , சதீஸ் குமார் கலையமைப்பில், மனோஜ் கியான் படத்தொகுப்பில் இசையமைத்திருப்பவர் விஷால் சந்திரசேகர்.


தனது முந்தைய படங்களில் இலகுவான வேடங்களை ஏற்றிருந்த இர்ஃபான், இந்தப்படத்தில் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்றியிருக்கிறாராம்.


வேலை வாய்ப்புச் சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான ஊழலைப் பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள சமுதாயக் கருத்துக்காகவும் ஒப்புகொண்டிருக்கிறார்கள் என்று கொசுறுச்செய்தி. இயக்குநர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம். இவர் மாணவர்கள் மத்தியில் பிரபலமான கல்வியாளர்.

விடாயுதம்


பேய்க்கும் பாம்புக்கும் சண்டை என்ற அபார யோசனையில் உருவாகியுள்ள படம் விடாயுதம். நாகமானிசி என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர் ' புகழ் தன்வி லங்கோர் நாயகியாக நடித்துள்ளார். ராம் சரவணன் நாயகனாக நடித்துள்ளார்.நாயகியாக கமலி நடித்துள்ளார். சிறு முதலீட்டுப் படமாக இந்தப்படம் தயாராகியிருக்கிறது.


'விடாயுதம்' ஒரு பாம்புப் படம் என்பதால் படத்தின் பாடல் வெளியீட்டு விழாமேடையில் நிஜமான நல்லபாம்பு ஒன்றை மேடை ஏற்றி ஆட வைத்துப் பீதி கிளப்பினார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

[X] Close