Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கொடி’யில் பறக்கிறதா சந்தோஷ் நாராயணனின் கொடி? - இசை விமர்சனம்

அனிருத்தை விட்டு சந்தோஷ் நாராயணின் இசையில் தனுஷ் என்பதே  எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ரஜினியே ஆனாலும், இசை என் ஸ்டைல்தான் என்று விட்டுக்கொடுக்காமல் மெட்டுப்போட்டு கலக்குகிற சந்தோஷ், தனுஷுக்கு இசையமைத்திருக்கிற பாடல்கள் எப்படி வந்திருக்கின்றன?

பாடல்: கொடி பறக்குதா
வரிகள்: தனுஷ், அருண்ராஜா காமராஜ்
குரல்கள்: தனுஷ், அருண்ராஜா காமராஜ்

 

சந்தோஷ் நாராயணனின் சிக்னேச்சர் இசை. ஆடுகளம் ஸ்டைல் மைக் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிற பாடல் விறுவிறுவென டெம்போ ஏற்றுகிறது. அந்த ட்ரம்பெட் பிஜியெம்மில் வரும் வரிகள் டிபிகல் அருண்ராஜா காமராஜா மெட்டீரியல். தனுஷ் ரசிகர்களுக்கு ‘கொடி பறக்குதா’ ரிங் டோன் ரெடி!

 

பாடல்: வேட்டப் போட்டு
வரிகள்: விவேக்
குரல்கள்: ஷங்கர் மகாதேவன் 

 

தன் ஜானரிலிருந்து பின்னோக்கிப் போய் சந்தோஷ் நாராயணன் செய்திருக்கும் பாடல். நாயனமும், தவிலும் பழைய டைப் கொண்டாட்டப் பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. ஷங்கர் மகாதேவன் ‘ஜஸ்ட் லைக் தட்’ பாடிப்போகிற ஜானர். கவிஞர் விவேக்கிற்கும் பழகிய களமான ஹீரோ வொர்ஷிப் பாடல்.

 

 பாடல்: ஏ சுழலி
வரிகள்: விவேக்
குரல்: விஜய் நரேன்

 

இந்த ஆல்பத்தின் My Pick. ஏ சுழலி என்று மென்மையாக ஆரம்பிக்கிற பாடல் பொட்டக்கோழி அழகுல வரிகளில் சேர்கிற டோலக் பாடலை அழகூட்ட, முதல் இடையிசையில் வருகிற தும்தும் கோரஸ் (கோரஸா) மேலும் மெருகூட்டுகிறது. புள்ளி வைக்காத கட்டுரை போல, நீள்கிற வரிகள் சுழலாய் இழுக்கிறது. வரிகளில் புதிய வார்த்தைகளைக் கையாண்டிருக்கிறார் விவேக். ‘ஆலங்காட்டுக் கரை.. ஆத்தில் நீந்தும் பிறை’ - நன்று கவிஞரே! ஆமா சந்தோஷ்.. அந்த எண்டிங்ல.. என்ன பண்ணிருக்கீங்க? நல்லாருக்கு! 

 

பாடல்: சிறுக்கி வாசம்
வரிகள்: விவேக்
குரல்கள்: ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் - ஸ்வேதா மோகன்

 

 ‘சூப்பர் சிங்கர்’ ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் பாடிய பாடல். ஸ்வேதா மோகனில் ஆரம்பிக்கிற பல்லவி ஆனந்த் குரலுக்கு வரும்போது ஸ்பீடெடுக்கிறது. சந்தோஷின் டைப் பாடல் என்று உற்சாகமாகும்போது, டக்கென்று உட்கார்ந்து விடுகிறது. வகையெதுவும் இல்லாமல் ஒரு பேட்டர்னில் இல்லாமல் அலைபாயும் மெட்டுக்களுக்கு,  , வரிகளில் சடுகுடு ஆடியிருக்கிறார் விவேக். 

 
பாடல்: ஆரிராரோ
வரிகள்: விவேக்
குரல்: கே.எஸ்.சித்ரா

மென்மையான தாலாட்டு டைப் பாடல். படம் முழுதும் வயலினும், ஸ்டிரிங்ஸும் ஒருவித மென்சோகத்தை இழைக்கிறது. இடையிசையில் அந்தச் சோகத்துக்கு சுகம் சேர்க்கிறது ‘ம்ம்ம்ம்’’ கோரஸ். கபாலியின் வானம் பார்த்தேன் பாடலின், ஒன்றுவிட்ட தம்பி ஸ்டைல் பாடல். 

 

 


மொத்தத்தில் ஒரு பாடலைத்தவிர, மற்றதெல்லாம் சந்தோஷின் ஜானர்தான். ஏ சுழலி பல மனங்களில் சுழலும். ஆரிராரோவும் பேசப்படும். கொடி பறக்குதா’  ரசிக மனங்களைக் கொள்ளை கொள்ளும். அதன் ட்ரம்பெட் தீம் ம்யூசிக் திரும்பத் திரும்ப சானல்களில் ஒலிபரப்பப்படும்! கொடி ட்ரெயிலர் பாத்தாச்சா?


-பரிசல் கிருஷ்ணா
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close