Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யாக்கையாக மாறிய இதயம்!

’ வன்மம்’, ‘யட்சன்’, மற்றும் ‘யாக்கை’ என பிஸியாக இருக்கிறார் கிருஷ்ணா. இதில் ‘யாக்கை’ படத்தை குழந்தை வேலப்பன் இயக்கி வருகிறார். 

இவர் ‘ஆண்மை தவறேல்’ எனும் படத்தை இயக்கியவர். 'யாக்கை' படத்திற்கு முதலில் வைத்த பெயர் ‘இதயம்’. ஆனால், படத்தின் கதைப்போக்கு காரணமாக ‘யாக்கை’ என மாற்றப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் போலீஸாக நடிக்கிறார். இதற்கு முன்பு பிரகாஷ்ராஜ் ‘அலிபாபா’ படத்தின் கிருஷ்ணாவுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரகாஷ் ராஜ் , கிருஷ்ணா இணைந்து நடித்து வருகின்றனர். ஆறு நாட்கள் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close