Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கட்டுப்பாடு !

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகளை தமிழ்த் திரைப்பட அமைப்புகள் கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளது.

* தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் பல சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஆகவே, இனி குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களைத் திரையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

* பட வெளியீடுகளை முறைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் ஆறு பேர்களை பிரதிநிதியாகக் கொண்ட குழு அமைக்கப்படும்.

* திருட்டுத்தனமாக வெளியிடப்படும் படங்களைப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், துணைபுரியும் வலைதளங்களை முடக்க மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முறையீடு செய்வது மற்றும் சட்டரீதியாக அவைகளை முடக்கப் போராடுவோம். 

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close