Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி பிறந்தநாளில் ’நண்பேன்டா’ டீஸர் !

ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் இணைந்து நடிக்கும் படம் ‘நண்பேன்டா’ ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் படத்தின் டீஸரை வரும் நவம்பர் 27ம் தேதி வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதே நவம்பர் 27ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால், அதே தேதியிலேயே படத்தின் டீஸரையும் வெளியிட இருக்கிறார்களாம்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் என்பதால் ‘நண்பேன்டா’ படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

படத்தை 2015 ஜனவரியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தை உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close