Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருடன் போலீஸ் விமர்சனம்!

 

ரியர் வைத்துக் கொண்டு அட்டகத்தியாக அலைகிறார் தினேஷ். "படிச்சு முன்னேற எதுவுமே பண்ணமாட்டியா?" என்று தினேஷை திட்டிக்கொண்டே இருக்கிறார் அப்பா ராஜேஷ். ஐஷ்வர்யா முன் தன்னை அவமானப்படுத்தியதால், அசிஸ்டன்ட் கமிஷனர் முத்துராமன் மகன் நிதின் சத்யாவை  அடித்துவிடுகிறார் தினேஷ்.

முத்துராமன், லோக்கல் ரௌடி 'நான்கடவுள்' ராஜேந்திரனுடன் சேர்ந்து பண்ணும் வேலைகளை கண்டுபிடித்து புகார் செய்யப் போவதாக மிரட்டுகிறார் ராஜேஷ். விஷயம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக ஒரு என்கவுன்டர் நாடகம் ஆடி அதில் ராஜேஷை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

ராஜேஷ் நேர்மையானவர் என்பதை அறிந்த நரேன், அவரின் மகன் தினேஷுக்கு கான்ஸ்டபிள் வேலை கொடுக்கிறார். வேண்டா வெறுப்பாக வேலையில் சேரும் தினேஷுக்கு அப்பாவைக் கொலை செய்த விவரம் தெரிய வருகிறது. அப்பாவின் பாசத்தைப் புரிந்துகொண்ட தினேஷ், கொலைசெய்தவர்களைப் பழிவாங்க கிளம்புகிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.


பொறுப்பில்லாமல் சுற்றும் தினேஷ், அவனை எப்படியாவது நல்வழிக்குக் கொண்டுவரப் பார்க்கும் அப்பா, இடையில் சின்ன காதல், ஒருவனுடன் மோதல், நண்பனுடன் நிறைய காமெடி என அரதப் பழசான ஃபார்மட்டில்  காமெடியை கொஞ்சம் தூக்கலாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள். இதில் காவல் துறையினர் வேலையில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என மேம்போக்காகவாவது காட்டியதற்காக புதுமுக இயக்குநர் கார்த்திக் ராஜூவை வரவேற்கலாம்!

தினேஷ் நடிப்பில் இன்னொரு அட்டகத்தி பார்த்த உணர்வுதான் வருகிறது. கொஞ்சமும் கதாபாத்திரத்திற்கு பொருந்தாமல் நடித்திருக்கிறார். இன்னமும் குக்கூ பாதிப்பில் இருந்து தினேஷ் மீண்டு வரவில்லை. ஐஷ்வர்யா முன் அப்பா ராஜேஷ் திட்டும்போது கூச்சப்படாமல், நெளியாமல், எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் தேமே என்று நிற்கிறார். ரொமான்ஸூம் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. டான்ஸ் ஆடுகிறேன் என்று தினேஷ் ரொம்பவே சிரமப்படுத்துகிறார். அந்த கான்ஸ்டபிள் டிரெஸ் தினேஷூக்கு பொருந்துவேனா என அடம்பிடிக்கிறது. ஸாரி தினேஷ். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

ஹீரோயின் ஐஷ்வர்யா  வருகிறார்.. சிரிக்கிறார்.. ஸ்கூட்டியில் தினேஷுக்கு லிஃப்ட் தருகிறார். டூயட் வரும் போது தினேஷுக்கு துணைக்கு வருகிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. ஆனால், கண்களால் ஐஷ்வர்யா பேசுவது அவ்வளவு அழகு.

பாலசரவணன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்ய வேண்டிய கேரக்டர். ஆனாலும், காமெடி என்ற போர்வையில் சலம்பிக்கொண்டே திரிகிறார். "ஏன்டா, இருக்கும் போது திட்டிபுட்டு இப்ப செத்த பின்னாடி அப்பா அப்பானு ஒப்பாரி வெச்சு ஏன்டா என்னோட உயிர எடுக்குற?" என சொல்லும் போது மட்டும் யதார்த்தம்." 'சோத்துல விஷம் வெச்சு இருக்கேன்னு நினைக்குறீங்களா?'. '' இல்லப்பா. ஒரு பாட்டில் விஷம் வாங்கி ஊத்துப்பா. நீ பேசுறதை கேட்குறதுக்கு அதையே சாப்பிடலாம்''.  ''உங்கப்பா இறந்ததுக்கு நீ  ஃபீல் பண்றியோ இல்லையோ, ஏன்டா கொன்னோம்னு நாங்க ஃபீல் பண்றோம்''. ''இப்படி ஒரு சனியன் உனக்கு பிள்ளையா இருக்கான்னு தெரிஞ்சிருந்தா உன்னைக் கொன்னே இருக்க மாட்டோம்!" என நான் கடவுள் ராஜேந்திரன் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஆனால், டெரர் ரௌடி பெண் வேடத்தில் வரும்போதே படம் காமெடி ஆகிவிடுகிறது. ஜான் விஜய் ஸ்லாங் அட போட வைக்கிறது. நிதின் சத்யா, நரேன், முத்துராமன், ராஜேஷ், உமா, ரேணுகா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

முதல் பாதி கொஞ்சம் ஓ.கே. ஆனால், இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார்கள். முதல் பாதி முழுக்க அப்பா சென்டிமென்ட் என படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அதையே காமெடி பண்ணி துவம்சம் செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம் சாரே? தினேஷ் கேரக்டரில் எந்த கன்டினியூட்டியும் இல்லை.

கான்ஸ்டபிளுக்கு இருக்கும் சிரமங்கள், நேரும் அவமானங்களை மட்டும் சொல்லாமல், அவர் எப்படி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்? எப்படிப் பழிவாங்குகிறார்? என்பதைக் கச்சிதமாக சொல்லியிருந்தால் திருடன் போலீஸ் பேர் சொல்லும் படமாக இருந்திருக்கும்.

சித்தார்த்தின் ஒளிப்பதிவு படத்தை அலுப்பு தெரியாமல் நகர்த்தும் அளவிற்கு வேலை செய்திருக்கிறது. பாடல்காட்சிகளில் மட்டும் வண்ணமயத்தைக் காட்டுகிறது. படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜாவா? எனக் கேட்கும் அளவிற்கு பின்னணி இசை சுமார் ரகம் தான். 'பேசாதே', 'மூடுபனிக்குள்' பாடல்கள் இதம்.

திருடன் போலீஸ் சின்னப்பசங்க விளையாட்டு!


 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close