Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்குள் ஒருவன் படத்திற்கு யு சான்றிதழ்!

சித்தார்த் நடிப்பில் ‘காவியத் தலைவன்’ படம் நவம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் சித்தார்த்தின் அடுத்த படமான ‘எனக்குள் ஒருவன்’ படமும் ரிலீஸ் மும்முரத்தில் குதித்துள்ளது.

கன்னடத்தில் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது ‘லூசியா’. அதன் ரீமேக்காக உருவாகி உள்ள படமே ‘எனக்குள் ஒருவன்’ .

சித்தார்த், தீபா சந்நிதி, ஸ்ருஷ்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ராமர் இயக்கியிருக்கிறார். சி.வி. குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை.

சென்சார் தரப்புக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close